உயிரோட்டமானதொரு உறவு ஊடகவியலாளர்களுக்கும் இளைஞர் சேவை மன்றத்திற்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வருகின்றது என தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராஜா தெரிவித்தார்.
இன்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு, மட்டக்களப்பு இளைஞர் சேவைகள் மன்ற சபா மண்டபத்தில் இடம் பெற்ற போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிகளை ஊடவியலாளர்களும் ஊடகங்களும் மதிப்பளித்து அவற்றை ஊடகங்களில் வெளிக் கொண்டு வந்தமைக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் கண்ணியமாக நன்றி செலுத்துகின்றது.
தேசிய உற்பத்தித் திறன் விருதுக்கு தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் தெரிவு செய்யப்பட்டமைக்கு ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எமக்குத் தந்த ஆதரவுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் என்றும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.
இளைஞர் சேவைகள் மன்றம் ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படுகின்ற விருதுக்கும் சிலிம் விருதுக்கும் தெரிவு செய்யப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது என்றார்.
இன்றைய நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே. தவராஜா, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என். நைறூஸ், மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர்களான ஜே.ஆர். கலாராணி, நிஷாந்தி அருள்மொழி, முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம். சசிக்குமார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர்களும், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.
திருப்பழுகாமம் கிராமத்துக்கு யோகேஸ்வரன் எம்பி விஜயம்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திருப்பழுகாமம் கிராமத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை விஜயம் செய்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரை திருப்பழுகாமம் சிவன் ஆலய தர்மஹர்த்தா சபையினர் வரவேற்றனர்.
அத்துடன் பொது மக்களின் குறைபாடுகள் தொடர்பாகவும் யோகேஸ்வரன் எம்.பி ஆராய்ந்தார்.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை வேட்பாளரும், முன்னாள் தவிசாளருமான வி.ஆர்.மகேந்திரன், கிழக்கு இந்து ஒன்றியச் செயலாளர் கதிர் பாரதிதாசன், ஆன்மீக தொண்டரும், ஆயுள்வேத வைத்தியருமான எஸ்.விஸ்வலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhu7.html
Geen opmerkingen:
Een reactie posten