[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 11:52.14 PM GMT ]
மாத்தளை, மொரகொட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் விரைவில் இணைந்து கொள்ள உள்ளனர்.
ஊவா மாகாணசபைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
ஆளும் கட்சியின் சில அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஆளும் கட்சிக்குள் நாளுக்கு நாள் உக்கிர உள்கட்சி முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளவர்களின் பெயர் பட்டியலை வெளியிடப் போவதில்லை.
உரிய நேரத்தில் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வார்கள்.
கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாடிய போது கட்சி மாற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக ரஞ்சித் அலுவிஹாரே தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhvz.html
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் மடானி இலங்கைக்கு விஜயம்!
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 12:31.17 AM GMT ]
சவூதியில் உள்ள இலங்கை தூதரக தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் இயாட் மடானி விரைவில் இலங்கைக்கு செல்லவுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் மடானியின் விஜயத்தை முன்னிட்டு முன்கூட்டிய ஏற்பாடுகளை செய்வதற்காக குழு ஒன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்த விஜயத்தின்போது மடானி, இலங்கையின் ஜனாதிபதி மற்றும் மதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வு அண்மையில் இடம்பெற்ற போது ஜனாதிபதி மடானிக்கான அழைப்பை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் முஸ்லிம் மக்களின் அதிருப்தியைப் போக்கிக் கொள்வதற்காகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த யுக்தியைக் கையாண்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhv1.html
Geen opmerkingen:
Een reactie posten