தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 september 2014

வெற்றியை நோக்கி மகிந்த: புதிய திட்டத்தின் வெளிவராத பல தகவல்கள்



யாழ்ப்பாணத்தில் சுதந்திரமான அரசியல் சூழலை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்: கீதாஞ்சலி நகுலேஷ்வரன்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 12:12.00 PM GMT ]
யாழ்ப்பாணத்தில் சுதந்திரமான அரசியல் சூழலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்தி இருப்பதாக சுதந்திரக் கட்சியின் யாழ். அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டம், வலப்பனையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் அரசியல் செயற்பாடுகளே முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்டது. அக்காலத்தில் சைக்கிளில் சென்றுதான் அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இன்றோ குளிர்சாதன பிராடோ வாகனங்களில் அரசியல்வாதிகள் யாழ்ப்பாணத்தில் அரசியல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை ஏற்படுத்தித் தந்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான். நாடு எதிர்கொண்ட சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டவரும் அவர்தான்.
ஐ.தே.க. நாட்டின் பிரிவினையை ஊக்குவிக்கும் கட்சி. எனவே யாரும் அதற்கு ஆதரவளிக்க மாட்டார்கள். பெண்கள் அனைவரின் ஆதரவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத்தான் என்றும் கீதாஞ்சலி தொடர்ந்தும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தென் மாகாண ஆளுனர் குமாரி பாலசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே, கிழக்கு மாகாண சபைத் தவிசாளர் ஆரியவதி கலப்பத்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgp3.html

வெற்றியை நோக்கி மகிந்த: புதிய திட்டத்தின் வெளிவராத பல தகவல்கள்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 12:22.24 PM GMT ]
ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றும்போது அவரது முகத்தில் தெளிவில்லாத் தன்மை இம்முறை மாறியிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இவ்வாறு லங்காசிறி வானொலியின் இந்த வார நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மா தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2006ல் வட- கிழக்குத் தமிழர்கள் தான் ஜனாதிபதித் தேர்தலில் தன்னை வெல்லவைத்தார்கள். அதே தமிழர்கள் தான் 2010ல் பொன்சேகாவை ஆதரித்துத் தன்னை தோல்வியடைய வைக்க முயன்றார்கள். எனவே பெரும்பான்மையினரின் வாக்குப் பலத்திலும் மற்றும் முஸ்லிம்களின் வாக்குப்பலத்திலும் தங்கியிருப்பதற்கு மகிந்த விரும்புகின்றார்.
ஐ.நா. பொதுக்கூட்டத் தொடரில் மகிந்தவின் பிரசன்னம், சந்திப்புக்கள் என்பவற்றைப் பார்க்கும் போது அவர் நிறையவே முன்னேறியிருக்கிறார். குறிப்பாக அவரது முகத்தில் இருக்கும் தெளிவில்லாத் தன்மை இந்த முறை மாறியிருந்தது.
முஸ்லிம்களின் வாக்குக்களைக் கவர்வதற்காக இஸ்ரேலை புறந்தள்ளி, பாலஸ்தீனிய ஆதரவு மற்றும் ஒரு மில்லியன் டொலர்கள் கையளிப்பு என்பவற்றோடு தனது வெற்றிக்காக அதி நவீன தொழில்நுட்பப் பாவனையை ஆரம்பித்துவிட்டார்.
யுத்தக் குற்ற விசாரணைக்கான ஒன்றுமே பிரச்சினையில்லை. மகிந்த மிகவும் பலத்துடன் இருக்கிறார்.
சகல நாட்டுத் தலைவர்களும் சந்திக்கிறார்கள் என்ற கருவை விதைப்பதற்காக இலங்கையில் உள்ள சகல படைமுகாம்களிலும் ஐ. நாவில் ராஜபச்ச ஆற்றிய உரை நேரடியாக ஒலிபரப்பப்பட்டது என்பது உள்ளிட்ட பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgp4.html

Geen opmerkingen:

Een reactie posten