தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 september 2014

அகதிகள் வெளியேற்றத்தை தடுக்கக்கோரும் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது!


காணாமல்போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்! அரசாங்கம் தீர்மானம்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 11:47.26 PM GMT ]
இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விடுதலைப் புலிகளுடன் இறுதிக் கட்டப் போர் நடைபெற்ற போது இலங்கையில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயினர்.
அவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போனவர்களை மரணித்தவர்களாக கருதி சான்றிதழ் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நஷ்டஈடு வழங்கி, மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்கும் பட்சத்தில் காணாமல் போனவர்களின் உறவுகளைத் திருப்திப்படுத்திவிட முடியும் என்று அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgr1.html


பொன்.செல்வராசா எம்.பியை "வாயை மூடுமாறு" கூறிய காத்தான்குடி நகர முதல்வர்!- மட்டு.அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அமளிதுமளி
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 12:11.23 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவை "வாயை மூடுமாறு" காத்தான்குடி நகரசபை தலைவர் அஸ்பர் கூறியதனால் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் நேற்று திங்கட்கிழமை  நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களும் அவற்றின் முன்னேற்றம் பற்றியும் ஆராயப்பட்டன.
மேலும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திட்டங்கள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டிலான அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் 14,261 திட்டங்களுக்காக 7,812 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 2,121 அபிவிருத்தித் திட்டங்கள் முடிவடைந்துள்ளது.
இதன்போது வாவி மற்றும் நீரியல்வளம் தொடர்பிலான கலந்துரையாடலின் போது காத்தான்குடி பிரதேச சபை தவிசாளர் அஸ்வர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா ஆகியோருக்கு இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினரை வாயை மூடுமாறு காத்தான்குடி பிரதேச சபை தவிசாளர் அஸ்வர் கூறியபோது அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காத்தான்குடி பிரதேச சபை தவிசாளர் அஸ்வர் தனது கூற்றினை வாபஸ் பெறாவிட்டால் அபிவிருத்திக்குழு கூட்டத்தினை நடத்த முடியாத நிலையேற்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்ட நிலையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதன்போது மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், வாயை மூடுமாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 
ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அவ்வாறு நீங்கள் கூறமுடியாது. அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறு கோரியதற்கு இணங்க காத்தான்குடி பிரதேச சபை தவிசாளர் அஸ்வரினால் அக்கூற்று வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பி.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வாரியபொல யுவதி பொலிஸாரிடம் 10 லட்சம் ரூபா நட்டஈடு கோரி வழக்கு தாக்கல்!
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 12:19.34 AM GMT ]
குருநாகல் வாரியபொலவில் கடந்த மாதம் தம்மை கேலி செய்த இளைஞர் ஒருவரை தாக்கிய யுவதி நேற்று இலங்கை உயர்நீதிமன்றத்தில் பொலிஸாருக்கு எதிராக அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதன்போது அவர் தமக்கு பொலிஸார் ஒரு மில்லியன் ரூபாய்களை நட்டஈடாக வழங்கவேண்டும் என்று கோரியுள்ளார்.
அத்துடன் தமது அடிப்படை உரிமையான சட்டத்தின் முன் சமவுரிமை பாதுகாப்புää பொலிஸார் தம்மை கைதுசெய்தமையால் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
மனுதாரரான அமல்கா திலினி தமது மனுவில் தாம் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் நிலையில், வாரியப்பொல நகருக்கு வந்த போது ஒருவர் தம்மிடம் தொலைபேசி இலக்கத்தை கோரியதாகவும் அதனை தாம் வழங்க மறுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தம்மீதான பாலியல் பார்வையை தவிர்த்துக் கொள்வதற்காகவே தாம் இளைஞரை தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgr3.html


அகதிகள் வெளியேற்றத்தை தடுக்கக்கோரும் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது!
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 12:26.45 AM GMT ]
இலங்கையில் அடைக்கலம் பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளை நாடு கடத்தும் பணிகள் நிறுத்தப்படவேண்டும் என்று கோரிய மனுவை இலங்கையின் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போதே மன்றம் இதனை நிராகரித்தது
இந்த மனுவை மனித உரிமைகள் குழு ஒன்று தாக்கல் செய்திருந்தது.
குறித்த அகதிகள் நாடு கடத்தப்பட்டால் அவர்களுக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எனினும் வீசா முடிவடைந்த நிலையில் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் உரிமை தமக்கு இருப்பதாக இலங்கை அரசாங்கம் வாதாடியது.
அத்துடன் 1951 அகதிகள் பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திடாமையால் குறித்த அகதிகளுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற முடியாது என்றும் அரசாங்கம் வாதிட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgr4.html

Geen opmerkingen:

Een reactie posten