தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 september 2014

நாட்டை மாற்றியமைக்க நாங்கள் தயார்: தயவு செய்து மாறுங்கள்!- பொதுபல சேனா!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்தர்களுக்காக குரல் கொடுக்கும் தலைவருக்கு 5 ஆயிரம் விகாரைகள் மூலமாக 50 லட்சம் வாக்குகளை திரட்டும் பணியில் பொதுபல சேனா ஈடுபடும் என அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற அந்த அமைப்பின் தேசிய மாநாட்டில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
50 லட்சம் சிங்கள பௌத்த வாக்குகளுக்கு மேலதிகமாக வடக்கு கிழக்கில் உள்ள இந்து மற்றும் முஸ்லிம் மக்களிடம் இருந்து 15 வாக்குகளை பெற்றுக்கொடுக்க போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்தர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி எழுச்சி பெற்று வரும் அடிப்படைவாத அமைப்புகளிடம் இருந்து அவர்களை காப்பாற்றி, அந்த அமைப்புகளுக்கு வேலியிடப்படும்.
பௌத்த கொள்ளையின் அடிப்படையில் அரசாங்கத்தை ஆட்சி செய்யும், நாட்டை சிங்கள பௌத்த நாடாக கருதும் எந்த அரசியல் கட்சியின் தலைவர் தேர்தலில் நின்றாலும் அவருக்கு ஆதரவு வழங்கப்படும்.
மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க இவர்கள் எவர் போட்டியிட்டாலும் அவர்களை ஆட்சியில் அமர்த்தும் பலம் எம்மிடமே உள்ளது.
இதுவரை காலமும் திருட்டு மோசடியாளர்களினால் ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் முறைமையை நாம் மாற்றுவோம்.
பச்சை, நீலம், சிகப்பு நிறங்களை தூக்கி எறிந்து விட்டு பௌத்த கொடியை மாத்திரம் ஏந்த வேண்டும்.
நாட்டில் சிங்கள பௌத்த ஆட்சியை ஏற்படுத்தவே நாங்கள் முயற்சித்து வருகின்றோம்.
மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க என அனைவரும் விழித்து கொள்ள வேண்டும்.
விழித்து சிங்கள பௌத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள அழிவை பார்க்க வேண்டும். கட்சிகளாக பிளவுப்பட்டிருந்தது போதும். டி.எஸ். சேனாநாயக்க, பண்டாரநாயக்க, கார்ல்மார்க்ஸ் போன்றோர் எமது தலைவர்கள் அல்ல.
புத்த பகவானே எமது தலைவர். நாட்டை மாற்றியமைக்க நாங்கள் தயார். தயவு செய்து நீங்கள் மாறுங்கள்.
அப்படியில்லை என்றால் அதற்கும் நாங்கள் தயார் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி-

Geen opmerkingen:

Een reactie posten