தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 september 2014

சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் மாணவன் விடுதலை கோரி ஆர்ப்பாட்டம்


ஆட்டம் காண தொடங்கும் விமல் வீரவன்சவின் கட்சி!
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 09:50.17 AM GMT ]
விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி கட்சி ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது.
கட்சியின் சில உறுப்பினர்கள் தற்போது கட்சியை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய சுதந்திர முன்னணியின் மஹாவ பிரதேச சபையின் உறுப்பினர் மஹிந்த பக்மீவௌ உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்கவிடம் குறித்த உறுப்பினர்கள் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
தமது ஆதரவாளர்களுக்கு அதிகளவு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வதாக பக்மீவௌ தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாகவும் கட்சியின் முக்கிய முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் கட்சியை விட்டு வெளியேறியிருந்தார்.
இவ்வாறு கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கட்சியை விட்டு நாளுக்கு நாள் விலகிச் செல்கின்றமை கட்சியை வலுவிழக்கச் செய்யும் என சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgu3.html


சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் மாணவன் விடுதலை கோரி ஆர்ப்பாட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 10:01.25 AM GMT ]
தடுத்து வைக்கப்பட்டுள்ள சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் மாணவரை விடுதலை செய்யுமாறு கோரி நாளை ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் மாணவரான செந்தில்குமார் எதுவித குற்றச்சாட்டுகளும் இன்றி பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதுவரை அவர் விடுதலை செய்யப்படவில்லை.
இதனைக் கண்டித்துள்ள பல்கலைக்கழக அனைத்து மாணவர் ஒன்றியம், அவரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgu4.html



Geen opmerkingen:

Een reactie posten