டோவரில் இருந்து பிரான்ஸ் சென்ற கப்பலில் தீ: சிக்கிக்கொண்ட தமிழர்கள் !
[ Sep 30, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 10865 ]
நேற்றைய தினம்(29) பிரித்தானியா டோவரில் இருந்து பிரான்ஸ் நோக்கிச் சென்ற கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 337 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கப்பலின் இயந்திர அறையில் முதலில் தீ மூண்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு காரில் செல்ல பலர், இந்தக் கப்பலை தான் பாவிக்கிறார்கள். கார்களை ஏற்றக்கூடிய இந்தக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால், 2 தமிழ் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பிரான்சில் இருந்து லண்டன் வந்து மீண்டும் பிரான்ஸ் திரும்பிக்கொண்டு இருந்தவேளை இச் சம்பவம் இடம்பெற்றதாக அவர்கள் கூறுகிறார்கள்.
கரும் புகை எழுந்ததாகவும், ஆபத்து மணிகள் அடிக்கப்பட்டு, பின்னர் பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டதாகவும் அவர்கள் அதிர்வு இணையத்திற்கு மேலும் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் இயந்திர அறையில் மூண்ட தீயை உடனடியாக உதவியாளர்கள் அணைத்துள்ளார்கள்.
http://www.athirvu.com/newsdetail/1107.html
அமெரிக்காவில் மகிந்தர் அடித்த கூத்து ! இதோ புகைப்படங்கள் !
[ Sep 30, 2014 04:58:20 AM | வாசித்தோர் : 27220 ]
அமெரிக்காவிற்கு மகிந்தர் சென்று பின்னர் அங்கிருந்து நேற்று நாடு திரும்பினார். அதற்கு முன்னதாக அங்கே நடந்த தண்ணிப் பார்டியில் கலந்துகொண்டு விட்டு அவர் விடுதிக்குச் சென்றபின்னரே, அவரது வலது கை என்று கூறப்படும் சஜின் வாஸ் கிறிஸ் நொரிசை கடுமையாக தாக்கியுள்ளார். இச் செய்தியை நாம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம். இதேவேளை சஜின் வாஸ் மகிந்தரோடு எவ்வாறான உறவில் உள்ளார் என்பதும், அவர் நமால் ராஜபக்ஷவுடன் எவ்வளவு நெருக்கமாக உள்ளார் என்பதற்குமான ஆதார புகைப்படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெளிவிவகார செயலாளர் சேனுகா செனிவரத்தினவுடன் கடந்த புத்தாண்டு அன்று நமால் ராஜபக்ஷ நடனமாடி இருந்தார். ஆனால் சேனுகாவை இம்முறை தகாத வார்த்தையால் திட்டி தீர்த்துள்ளார், சஜின் வாஸ். கடும் மது போதையில் , கிறிஸ் நொரிசை தாக்கியதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

மேலே உள்ள சில படங்கள் அமெரிக்காவில் எடுக்கப்பட்டவை அல்ல. ஆனால் மகிந்த அன் கோவின் ரவுடித்தனத்தையும் அவர்களோடு இணைந்துள்ள நபர்களையும் அடையாளம் காட்ட சில புகைப்படங்களை இணைத்துள்ளோம்.
http://www.athirvu.com/newsdetail/1109.html

Geen opmerkingen:
Een reactie posten