[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 03:31.51 PM GMT ]
இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கே.புஸ்பராஜா (23வயது), ஏ.எம்.ஜமீல் (22வயது), எஸ்.எல்ஏ.ரினோல்ஸ் (22வயது) ஆகிய மூவரே படுகாயமடைந்துள்ளனர்.
சிறைக்கைதிகள் இரு குழுக்களிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்துள்ளதாக தெரியவருகின்றது.
எனினும் மோதல் நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மோதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கொள்ளை குற்றச்சாட்டின் கீழ் தண்டனை வழங்கப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgq4.html
இராணுவத் தேவைக்கு காணி அளவீடு: மக்கள் பிரதிநிதிகளால் மீண்டும் முறியடிப்பு
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 03:42.14 PM GMT ]
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இராணுவத்தினரின் தேவைக்கென நில அளவையாளர்களால் இன்று நிலஅளவீடு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், காணி உரிமையாளர்களினதும், மக்கள் பிரதிநிதிகளினதும் கடுமையான எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.
மண்டலாய், தட்டாங்கோடு, புல்லாவெளி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய ஏறத்தாழ 700 ஏக்கர் அளவிலான காணியைப் படையினர் தங்கள் பயிற்சித் தேவைக்கெனக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக நில அளவீடுகளை மேற்கொள்வதற்காகக் கடந்த யூலை மாதம் 21ஆம் திகதியும் நில அளவையாளர்கள் நிலத்தை அளவீடு செய்யும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள்.
அப்போதும் அங்கு திரண்ட காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகளின் தீவிர எதிர்ப்பால் அம்முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
இப்போது மீண்டும் நில அளவை செய்யப்போவதாக நில அளவைத்திணைக்கள அதிகாரிகளினால் காணி உரிமையாளர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இதையடுத்தே காணி உரிமையாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தி அப்பகுதிக்கு அவர்களையும் வரவழைத்திருந்தனர்.
கடந்தமுறை நில அளவீட்டை மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது பொதுமக்களின் எதிர்ப்பைச் சந்தித்ததன் காரணமாக, நில அளவையாளர்கள் இம்முறை தமது பாதுகாப்புக்குக் காவல்துறையினரை அப்பகுதிக்கு வருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், இன்று அங்கு காவல்துறையினரோ படையினரோ சமூகமளித்திருக்கவில்லை.
இராணுவத்துக்கென நில அளவீடு செய்யப்படவிருந்த 700 ஏக்கர் அளவு காணியும் பொதுமக்களுக்கு உரிய காணி எனவும், அக்காணிக்குரிய முறையான உறுதிகள் தங்களிடம் இருப்பதாகவும், அக்காணிகளில் முன்னர் தாங்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் அங்கு வருகை தந்திருந்த காணி உரிமையாளர்கள் தெரிவித்திருந்தார்கள்.
நில அளவீட்டுக்கு எதிராகக் காணி உரிமையாளர்களோடு சேர்ந்து அங்கு வருகை தந்திருந்த வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வை நகரசபை உப தலைவர் சதீஸ் ஆகியோரும் தங்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்கள்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgq5.html
ஜெயலலிதா போன்று புதிய முதல்வரும் இலங்கை தமிழர்கள் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்!- சுரேஷ் எம்.பி
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 04:22.39 PM GMT ]
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு நிரூபிக்கப்பட்டு அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மீதான ஊழல் வழக்கின் குற்றம் நிரூபிக்கப்பட்டு இந்திய சிறப்பு நீதிமன்றம் சில முடிவுகளை எடுத்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளமையும் அதற்கான தண்டனை உடனடியாக வழங்கப்பட்டுள்ளமையும் இந்தியாவின் நல்லாட்சித் தத்துவத்தின் முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டுவதோடு இந்த தீர்ப்பு முன் மாதிரியானதாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வழக்கின் முடிவானது வெறுமனே தமிழகத்தில் மட்டுமல்லாது முழு இந்தியாவிலும் நல்லாட்சியின் தேவையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அதேபோல் தமிழக முதல்வர் விடயத்தில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கைகள் இந்தியாவின் ஊழல் கட்சிகளுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நல்ல பாடமாகும்.
இலங்கை தமிழர்கள் பிரச்சினைகள் தொடர்பில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பல்வேறு தீர்மானங்களை இந்திய சட்டசபையில் நிறைவேற்றியுள்ளார்.
எனவே, தமிழகத்தின் புதிய முதல்வரும் முன்னாள் முதல்வரைப் போல் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கூடிய கவனமெடுத்து தமிழ் மக்கள் விடயத்தில் துணை நிற்க வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgq7.html
Geen opmerkingen:
Een reactie posten