[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 03:44.21 PM GMT ]
ஜெயலலிதாக ஓர் கருத்துச் சொல்பவர் மட்டுமே.
தமிழகத்தில் ஜெயலலிதாவிற்கு ஆட்சியிருந்த போதிலும், மத்தியில் சொற்பளவு ஆசனங்களே காணப்படுகின்றன.
இந்தியா தீர்மானங்கள் எடுக்கும் போது தமிழகத்தை மட்டும் கருத்திற்கொள்ளாது.
இந்தியாவின் ஓர் மாநிலமே தமிழ் நாடாகும்.
ஜெயலலிதா கைது செய்யப்பட்டமை மற்றும் தண்டனை விதிக்கப்பட்டமை இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.
இந்த தண்டனை விதிப்பின் மூலம் இந்திய நீதிமன்றக் கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை வெளியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhu2.html
விடுதலைப் புலிகள் பொதுமக்களை கேடயங்களாக பயன்படுத்தினார்களா?- ஆணைக்குழு எழுப்பிய கேள்விகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 03:53.51 PM GMT ]
காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு 2ம் அமர்வுகள் கிளிநொச்சி- முழங்காவில் பகுதியில் இன்றைய தினம் நடைபெற்றது.
இன்று 43 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதிகளவான முறைப்பாடுகள் படையிருக்கும், புலனாய்வாளர்களுக்கும் எதிரான முறைப்பாடுகளாக அமைந்துள்ள துடன், ஆணைக்குழுவின் அடுத்த அமர்வுகள் நாளை பூநகரியில் நடைபெறவுள்ளது.
காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணிவரையில் மேற்படி அமர்வுகள் நடைபெற்றிருந்தது. இதில் கடந்த காலத்தில் நடைபெற்ற அமர்வுகளில் இவ் ஆணைக்குழுவினால் கேட்கப்படாத பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 2009ம் ஆண்டு போர் நிறைவடைந்ததன் பின்னர் பொதுமக்கள் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றபோது படையினர் மக்களை நாகரீகமாக நடத்தினரா?
படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மக்கள் செல்லும்போது படையினர் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினரா?
தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தினார்களா? என பல கேள்விகளை ஆணைக்குழு எழுப்பியிருந்தது.
எனினும் இதற்குப் பதிலளித்த மக்கள், படையினர் எமக்கு உணவு கொடுத்தார்கள். எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. ஆனால் தொடர்ச்சியாக எறிகணை தாக்குதல்களை நடத்தினார்கள் என சாட்சியத்தில் குறிப்பிட்டனர்.
இதேவேளை, அ.நிக்ஸன் என்பவர் தன்னுடைய மகன், மருமகள், பேரன் ஆகியோர் 2009ம் ஆண்டு இரணைப்பாலை பகுதியில் கடுமையான ஷெல் வீச்சினால் காணாமல்போனமை தொடர்பாக சாட்சியமளிக்கையில்,
எவ்வாறு அவர்களைத் தவறவிட்டீர்கள்? பின்னர் அவர்களைத் தேடவில்லையா? என ஆணைக்குழு கேள்வியினை கேட்டிருந்தது.
இதற்குப் பதிலளித்த அவர், தொடர்ந்தும் அவர்களை தேட முடியாத நிலை காணப்பட்டது. தொடர்ச்சியாக ஷெல் வீசப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்குள் படையினர் எங்களைச் சுற்றி வளைத்து விட்டார்கள். பின்னர் தேட முடியவில்லை என சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
மேலும், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும்போது எவ்வாறான பாதை வழியாக வந்தீர்கள்? வந்த வழியில் மக்கள் காயமடைந்தும், உயிரிழந்தும் கிடந்தனரா? என ஆணைக்குழு அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்குப் பதிலளித்த அவர், நாங்கள் நெஞ்சளவு நீர் உள்ள பகுதிக்குள்ளாக வந்தோம். நாங்கள் வந்த வழி முழுவதும் மக்கள் இறந்து கிடந்தார்கள். காயமடைந்த பலர் அந்த காயங்கள் பழுதடைந்த நிலையில், குற்றுயிராக கிடந்தார்கள். ஆனால் தொடர்ச்சியாக ஷெல் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அதனால் யாரும் யாரையும் தூக்கும் மனோநிலையில் கூட இல்லை என சாட்சியமளித்தார்.
இதேபோன்று படையினரின் கட்டுப்பாட்டுக்குள் காணாமல்போனவர்கள், காணாமல்போனதன் பின்னர் இருக்கிறார் என அலைக்கழிக்கப்பட்டமை தொடர்பிலும் அதிகளவாள முறைப்பாடுகள் இன்றைய தினம் பதிவு செய்யப்பட்டிருந்தன.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhu3.html
Geen opmerkingen:
Een reactie posten