கலைஞர் வீட்டில் ஒரே கொண்டாட்டமாம் .???
http://www.jvpnews.com/srilanka/82821.html
தீர்ப்புக்கு காத்திருக்கும் 4 முக்கிய தலைவர்கள்
இதற்கு முன் குற்ற வழக்கில் தண்டனை பெற்றாலும் அவர்கள் எம்.பி., எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்க முடியும். பதவி பறிபோகாது. ஆனால் சமீபத்தில் சுப்ரீம்கோர்ட்டு அளித்த தீர்ப்பில் குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் உடனடியாக எம்.பி., எம்.எல்.ஏ. பதவி இழப்பார்கள் என்று அதிரடி உத்தர விட்டது.
அதன்படி ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தி.மு.க.வைச் சேர்ந்த செல்வகணபதி ஆகியோர் எம்.பி. பதவி இழந்தார்கள். இதையடுத்து சொத்து வழக்கில் தண்டனை பெற்றதால் ஜெயலலிதா முதல்– அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.
ஜெயலலிதாவை போல் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரும் சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியுள்ளனர். இந்த வழக்கில் மாயாவதி, முலாயம்சிங் யாதவ் குடும்பத்தினர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களும் வழக்கு விசாரணையை சந்தித்து வருகிறார்கள்.
இவர்கள் மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. மேற்கு வங்காளத்தில் நடந்த மிகப்பெரிய சாரதா சிட்பண்ட் மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிக்கியுள்ளனர். இதுபற்றி விசாரித்து வரும் சி.பி.ஐ. முதல்–மந்திரி மம்தா பானர்ஜியையும் நெருங்கி வருகிறது.
ஒடிசாவில் முதல்–மந்திரி நவீன்பட் நாயக் அரசும் சாரதா சிட்பண்ட் மோசடியில் சிக்கி இருக்கிறது. இதே போல் தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் சம்பந்தப்பட்ட 2ஜி ஊழல் வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்த வழக்கிலும் இறுதி தீர்ப்பு வர உள்ளது.
http://www.jvpnews.com/srilanka/82829.html
ஜெ உடன் சிறையில் ஷீலா முக்கிய ஆலோசனை!
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது. இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் தானாகவே முதலமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்து விட்டார்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது.அத்துடன் அவர்களுக்கு விதிக்கப்படும் சிறை தண்டனை காலமும் சேர்த்து கணக்கிடப்படும். அதன்படி, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால் அவர் மொத்தம் 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் ஆலோசகரும், முன்னாள் தலைமை செயலருமான ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றனர். அங்கு, பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவை சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், தமிழகத்தின் அடுத்த முதல்வர் குறித்தும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/82832.html
கர்நாடக ஜெயிலில் மயங்கி விழுந்த சுதாகரன்..
சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக பரப்பன அக்ரஹார ஜெயில் வளாகத்தில் உள்ள மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அவரை சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்க செய்தனர். அங்கு சுதாகரனுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இன்று காலை சுதாகரன் உடல் நலம் தேறியது. இதையடுத்து மீண்டும் அவர் ஜெயிலில் உள்ள அறைக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
http://www.jvpnews.com/srilanka/82851.html
வெண்ணிற ஆடையில் அம்மாவின் பயணம் ஆரம்பம்
ஜெயலலிதா சிறைக்குப் போனதால், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் கூட பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்று கூறப்படும் ஜெயலலிதா, கர்நாடக மாநிலத்தில் பெங்களூர்– மைசூர் நெடுங்சாலையில் மாண்டியா மாவட்டத்தில் மேல்கோட்டை என்ற கிராமத்தில் பிறந்தார். ஜெயலலிதாவின் சித்தி (தாய் சந்தியாவின் தங்கை), வித்யாவதி ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்தார். அடுத்து சந்தியாவும் சினிமா நட்சத்திரமானார். ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பமில்லை என்றாலும், குடும்ப நிலை காரணமாக திரை உலகில் புகுந்தார்.
http://www.jvpnews.com/srilanka/82855.html
அடுத்த முதல்வர் யார்? கூடுகிறது அதிமுக
புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்களின் அவசரக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.வைத்திலிங்கம் உள்பட அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
யாருக்கு வாய்ப்பு?
யாருக்கு வாய்ப்பு?
ஏற்கனவே முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்து அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, மின்சார துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் விசாலாட்சி நெடுஞ்செழியன், நவநீத கிருஷ்ணன் ஆகியோர் பெயர்களும் முதல் அமைச்சர் பதவிக்கு அடிபடுகிறது.
http://www.jvpnews.com/srilanka/82860.html
அம்மாவை சந்திக்க ஷீலா அக்காவுக்கு சிறையில் ஆப்பு
அத்துடன் அவர்களுக்கு விதிக்கப்படும் சிறை தண்டனை காலமும் சேர்த்து கணக்கிடப்படும். ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால் அவர் மொத்தம் 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில் இன்று சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் காலை பெங்களூர் புறப்பட்டு சென்றுள்ளனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க சென்றனர். அவர்கள் அடுத்த முதல்-அமைச்சர் மற்றும் அரசு நடவடிக்கை குறித்து ஜெயலலிதாவிடம் ஆலோசனை நடத்துவார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால் அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க ஷீலா பாலகிருஷ்ணனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. . விடுமுறை நாள் என்பதால் இதுவரை ஜெயலலிதாவை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அக்ரஹாரா சிறைமுன் கடந்த 4 மணி நேரமாக ஷீலா பாலகிருஷ்ணன் காத்திருக்கிறார். ஷீலா பாலகிருஷ்ணனனுடன் சென்ற வெங்கடராமன் உள்ளிட்ட அதிகாரிகளும் காத்திருக்கின்றனர். ஜெயலலிதாவை சந்திக்க சிறப்பு அனுமதி கேட்டு சிறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை சந்திக்க சென்ற அமைச்சர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
http://www.jvpnews.com/srilanka/82863.html
Geen opmerkingen:
Een reactie posten