தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 september 2014

மகிந்தர் நியுயோர்க்கிலில் தண்ணி பார்டி !

மகிந்தரின் வலது கரம், மற்றும் பிரத்தியேகச் செயலாளர் போல வேலைசெய்யும் சஜின்வாஸ் குணவர்த்தன மதுபோதையில் கிறிஸ் நோறிசை தாக்கியுள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் கிறிஸ் நோரிசை அடித்து விழுத்தி காலால் உதைத்துள்ளார் சஜின் வாஸ். இதனால் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார் கிறிஸ் நோறிஸ். இலங்கை திரும்பிய மகிந்தர் இதுகுறித்து எந்த செய்தியும் வரக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவை ஊடகங்களுக்கு பிறப்பித்துள்ளார் என்ற ரகசிய செய்தியும் கசிந்துள்ளது.
என்ன நடந்தது ?
நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவினால் மோசமாக தாக்கப்பட்டதை தொடர்ந்து பிரித்தானியாவிற்கான இலங்கை தூதுவர் கிறிஸ் நோனிஸ் பதவிவிலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியுயோர்க்கிலிருந்து நாடு திரும்பியுள்ள மகிந்த ராஜபக்ச இந்த சம்பவத்தை இருட்டடிப்பு செய்யுமாறு அரச ஊடகங்களுக்கு உத்தரவிட்டுள்ள அதேவேளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுடன் நேரடியாக பேச்சுக்களை மேற்கொண்டுள்ளார்.
டிலான் ஜனாதிபதியுடன் அமெரிக்கா சென்றவர்களுக்கு விருந்துபசாரமொன்றை வழங்கியதாகவும், அந்த விருந்தில் நோனிஸ், சஜின் மற்றும் வெளிவிவகார செயலாளர் சேனுகா செனிவரத்தின ஆகியோர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட சம்பவம் நியுயோர்க்கில் உள்ள- டிலான் ஆரியவன்ச என்பவருடைய இல்லத்திலேயே இடம்பெற்றுள்ளது-டிலான் சிறிலங்கன் எயர்லைன்சின் நியுயோர்க் இயக்குநராகவுள்ளார். இந்த விருந்தில் மதுபோதையிலிருந்த சஜின் வாஸ் குணவர்த்தன நோனிசுடன் வாக்குவாதத்தை ஆரம்பித்துள்ளார். அவரை தகாத வார்த்தைகளால் திட்டிய சஜின் அவரை அடித்து கீழே தள்ளி காலால் மிதித்துள்ளார் . இதன் காரணமாக நோனிசிற்க்கு கால் விரலில் காயம் ஏற்பட்டுள்ளது.
சேனுகா செனிவரத்தின தொடர்பாக ஆபாச வார்த்தை பிரயோகங்கள் இடம்பெற்றதாகவும் தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து விருந்திலிருந்து வெளியேறிய நோனிஸ்,நேராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தங்கியிருந்த இடத்திற்க்கு சென்று தனது இராஜினாமா கடிதத்தை வழங்கிய பின்னர் மறுநாள் பிரிட்டன் திரும்பியுள்ளார் என மேலும் அறியப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/1102.html

Geen opmerkingen:

Een reactie posten