தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 september 2014

வடக்கில் 6000 பேரின் காணிகள் மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன: விக்னேஸ்வரன்!



ஜனாதிபதி மகிந்த குழம்பிப் போயுள்ளார்: இரா.சம்பந்தன்
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 04:02.50 PM GMT ]
சமூக,பொருளாதார , கலாச்சார உரிமைகள் மற்றும் மனித உரிமைகள், மக்களுடைய பாதுகாப்பு சம்பந்தமாக சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இதனை எவரும் மறுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சின் புதிய தலைவர் மாவை.சேனாதிராசா, மற்றும் செயலாளர் கி.துரைராசசிங்கம் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள துளசி மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில், அதன் தலைவர் கி.சேயோன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய கலாச்சாரம், பாரம்பரியம், மரபுகள், போன்றவற்றிற்கு மாறாக நிலைமைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவற்றினை சர்வதேச சமூகம் மாற்றியமைத்து நல்லணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற பாதையில் நாங்கள் முன்னேறுவதற்கு, அனைவரும் உதவ வேண்டும். இதுபற்றி ஜனாதிபதி, சர்வதேசத்திடம் கூறியிருக்கின்றார்.
ஆனாலும் அதனுடைய விளத்தை அவர் கூறவில்லை. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்களை மீறியதன் காரணமாகத்தான், இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணை ஐக்கிய நாடுகள் சபையில் நறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தவிடயம் தொடர்பாக தெளிவு வரவேண்டியது அவசியம். ஐக்கிய நாடுகள் பிரேரணையின் அடிப்படையில் இலங்கை அரசு ஏற்றுக் கொண்ட பல விடயங்களிலிருந்து தற்போது அதிலிருந்து விலகி வேறு வழியில் முயற்சிக்கின்றார்கள் என கருதப்படுகின்றது.
சமீபகாலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறுகையில், இந்த நாட்டில் சிறுபான்மையினம் என்று எவரும் இல்லை. இந்த நாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும், ஒரே மக்கள். ஆனால் ஒரு வித்தியாசம்தான் இருக்கின்றது.
இந்த நாட்டை நேசிப்பவர்கள், நாட்டை நேசிக்காதவர்கள் என இரண்டு பிரிவினர்கள்தான் உள்ளார்கள். இந்த வேற்றுமையினைத்தவிர வேறு, வேற்றுமைகள் எதுவும் இங்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய- இலங்கை ஒப்பதந்தத்தில், இலங்கை நாட்டில் வெவ்வேறு மக்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கது தனித்துவத்தைப் பேணுவதற்கும் உரிமையுண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் ஒவ்வாருவரும் அவர்கள் அனைவரும் அவர்களது தனித்துவத்தினைப் பேணுவதற்கு உரிமையுண்டு. அந்த அடிப்படையில் இந்த நாட்டில் ஆட்சி அமைய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் சமீப காலமாக சிறுபான்மையினம் இந்த நாட்டில் இல்லை என கூறிய ஜனாதிபதி, இந்த நாட்டில் பெரும்பான்மையினம் இல்லை என்று சொல்லவில்லை.
அரசியல் தீர்வு காணாமல் வடகிழக்கில் பெரிதளவில் இராணுவத்தினரைக் குடியேற்றி, பெரும்பான்மையினத்தவர்களைக் குடியேற்றி அவர்களுக்கு ஏற்ற வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது.
ஆனால் தமிழ் மக்கள் புனர்வாழ்வு இல்லாமல், குடியிருக்க இடம் இல்லாமல் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டால் இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ற விடயம் இல்லமல் போய்விடும்.
துரதிஸ்டவசமாக நாங்கள் கிழக்கு மாகாண சபையினைக் கைப்பற்றவில்லை. இதனை நாங்கள் செய்திருக்கலாம். அதனை நாங்கள் செய்யத் தவறிவிட்டோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய ரீதியில் பலம் பொற்றிருக்கின்றது. தற்போது முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம்.
எதிர்காலத்தில் முக்கிய தீர்வுவை நோக்கவுள்ளோம். எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தோர்தல் இடம்பெறலாம்.
எமது மக்களின் போராட்டம், நியாயமான போராட்டம். இதற்கு நீதி வழங்கப்பட வேண்டும். இதனை அங்கீகரிக்க வேண்டும் என சர்வதேச சமூகம் முயற்சிக்கின்து.
ஆனால் தீர்வு காணப்படாமல் அது தொடர முடியாது என நாங்கள் நிரூபிக்க வேண்டும். எமது மக்கள் தமது சாத்வீகப் போராட்டத்தில் கூலமாக நிருபிக்க வேண்டும்.
இவற்றினை எதிர் வருகின்ற தேர்ததில் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை எவ்வாறு பலப்படுத்தலாம், என்ற சிந்திக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம். சாத்வீகப் போராட்டம் நடைபெறுகின்றபோது கட்சி ரீதியாகப் பலப்படுத்தப்படல் வேண்டும்.
எமது முஸ்லிம் சகோதரர்கள் இணைந்து செயற்பட வேண்டும். இவ்வாறு பலரது அதரவுகளையும் பெற்றுக் கொள்கின்றபோது சர்வதேசத்தின் ஆதரவும், பலமும் அதிகரிக்கும். ஆனால் தற்போது இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச குழம்பிப் போயிருக்கின்றார் என அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVho7.html
வடக்கில் 6000 பேரின் காணிகள் மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன: விக்னேஸ்வரன்
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 04:39.58 PM GMT ]
வடக்கில் ஆறாயிரம் பேரின் காணிகள் மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வட மாகாண சுற்றுலாத்துறை தொடர்பிலான நூல் ஒன்று இன்று வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற விக்னேஸ்வரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினரும், கடற்படையினரும் விவாசயத்தில் மட்டுமன்றி மீன்பிடியிலும் ஈடுபடுகின்றனர். வடக்கில் சுற்றுலாத்துறையை இலக்கு வைத்து கட்டடங்கள் நிர்மானிக்கப்படுகின்றன.
காங்கேசன்துறை, காரைநகர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிர்மாணப் பணிகள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.
நிர்மானப் பணிகளுக்காக எமது மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன. மக்கள் முகாம்களில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் வாழ்வதற்கு ஓர் பொறிமுறைமையை உருவாக்க முடியாத ஓர் நிலைமயை வட மாகாணசபை எதிர்நோக்கி வருகின்றது.
6000 வடக்கு மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வதற்கான உரிமையில் இராணுவத்தினர் தலையீடு செய்துவ வருகின்றனர்.
இது தொடர்பில் நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. காணி சுவீகரிப்பு தொடர்பில் 2000த்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வடக்கு மக்களின் காணிகளை சுவீகரித்துக் கொள்ளும் நோக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVhpy.html

Geen opmerkingen:

Een reactie posten