[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 08:22.19 AM GMT ]
நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி ரத்னகலா விசாரிக்கிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும், தங்களது வழக்கறிஞர்கள் மூலமாக தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஒவ்வொரு ஜாமீன் மனுவுடன் தீர்ப்பின் நகலும் ஆயிரம் பக்கங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா தனது ஜாமீன் மனுவில்,
‘’தனக்கு 66வயது ஆகிறது. சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு நோய் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை எடுத்டுக்கொள்ள வேண்டும். பெங்களூர் சிறைச்சாலையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதால் அச்சுறுத்தல் உள்ளது. மேலும், 100 கோடி அபராதம் என்பது நிறைவேற்ற முடியாத நிபந்தனை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர, தான் ஒரு சாதாரண நபர் அல்ல மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருக்கிறேன் என்றும், தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிமுக தொண்டர்கள் உள்ளனர்.
அவர்களிடத்தில் தனக்கு நல்ல பெயர் இருக்கிறது என்றும், ஜாமீனில் சென்றால் எங்கும் தப்பி ஓடமாட்டேன். வெளியே சென்றால் சாட்சிகளை கலைக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgoz.html
விராது தேரருக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பு
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 08:43.31 AM GMT ]
விராது தேரரின் தங்குமிடம், அதனைச் சுற்றிய பகுதிகள், அவர் செல்லும் பாதைகளில் பாதுகாப்புக்கென சுமார் ஆயிரம் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு மேலதிகமாக விசேட கமாண்டோ படையினரில் ஐம்பது பேர் விராது தேரரின் பயணங்களின் போதும், பொது பல சேனா கூட்டத்தில் அவர் உரையாற்றியபோதும் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.
இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்.பி.) ஒருவர் ஒருங்கிணைத்திருந்தார். இதற்கான பணிப்புரைகள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமிருந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்தன.
இவற்றுக்கு மேலதிகமாக விராது தேரர் இலங்கையில் இருக்கும் காலப் பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம் என்று ஜனாதிபதிக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அவ்வாறு எந்தவொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்று விடக் கூடாது என்பதற்காக முஸ்லிம் சமூக முக்கியஸ்தர்களின் நடமாட்டங்கள் புலனாய்வுப் பிரிவினரால் கண்காணிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆர்ப்பாட்டங்களை தடுக்கும் நோக்கில் கலகம் அடக்கும் பொலிசாரை தயார் நிலையில் வைத்திருக்கவும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.
இவ்வாறாக ஒரு நாட்டின் அதிபருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் விராது தேரருக்கு வழங்கப்பட்டிருந்தன. இது குறித்து அவர் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgo1.html
கண்ணீர் மல்க பதவியேற்றார் தமிழகத்தின் புதிய முதல்வர்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 08:25.44 AM GMT ]
ஆளுநர் மாளிகையில் பிற்பகலில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரோசையா, ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பன்னீர் செல்வத்துடன் மற்ற அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர்.
இந்த பதவியேற்பு விழாவில் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
கடந்த 2001ஆம் ஆண்டு செம்படம்பர் முதல் 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgo0.html
Geen opmerkingen:
Een reactie posten