தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 september 2014

புலிகளை வைத்து ஆடிய நாடகம் , ஜெயலலிதாவை எப்படி பெரும் சிக்கலில் மாட்டியது

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இறுதி நேரத்தில் எவ்வாறு மாட்டிக்கொண்டார் ? புலிகளை வைத்து ஆடிய நாடகம் , ஜெயலலிதாவை எப்படி பெரும் சிக்கலில் மாட்டியது என்று தெரியுமா ? இதுவரை அறிந்திராத திக் திக் விடையங்கள் இங்கே எழுதப்பட்டுள்ளது. 20ம் திகதி நடக்கவேண்டிய வழக்கை 27 க்கு மாற்றி, தானே பெரும் சிக்கலில் மாட்டினார் செல்வி ஜெயலலிதா . இதோ உண்மைச் சம்பவம் !
வழக்கை 18 வருடம் இழுத்தடித்தாகிவிட்டது. தீர்ப்புத் தேதியை இழுத்தடிக்கும் வேலைகள் இறுதி வரைக்கும் எப்படி நடந்தது தெரியுமா ?'' ''இறுதி விசாரணை முடிந்ததும், தீர்ப்புத் தேதியை அறிவித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, 'இந்த வழக்கில் இன்னும் கூடுதலாக சில ஆவணங்களைப் படிக்க வேண்டியிருக்கிறது. எனவே, தீர்ப்புத் தேதியை செப்டம்பர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன்’ என்றார். அந்தத் தேதியில் எந்த மாற்றமும் இருக்காது என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் தீர்ப்புச் சொல்லும் இடத்தை மாற்ற வேண்டும் என்று கேட்டனர். இவர்கள் இடத்தை மாற்றச் சொல்லி மனுவைக் கொண்டுபோன நேரத்தில், பெங்களூரு போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி சார்பில் அல்சூர்கேட் போலீஸாரும் ஒரு மனுவைக் கொண்டு வந்தனர். அதில், 'இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருப்பவர். அவருக்கு உரிய பாதுகாப்புகளை வழங்க இந்த நீதிமன்ற வளாகம் சரியான இடம் அல்ல.
ஏனென்றால், கடந்த 2012-ம் ஆண்டில், முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி இங்கே வந்து ஆஜரானபோது, கூடியிருந்த பத்திரிகையாளர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அவற்றைக் கருத்தில் கொண்டு தீர்ப்புச் சொல்லும் இடத்தை மாற்ற வேண்டும். கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா தனி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தபோது, பரப்பன அக்ரஹாராவில் நீதிமன்றம் செயல்பட்டது. அது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு வசதியான இடம். எனவே, அங்கு மாற்ற வேண்டும்’ என்று கேட்டிருந்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, 'தீர்ப்புச் சொல்லும் நாளன்று நீதிமன்றம் பரப்பன அக்ரஹாராவில் செயல்படும்’ என்று உத்தரவிட்டார். அத்துடன், 'இங்குள்ள ஆவணங்களை புதிய இடத்துக்கு மாற்றுவதற்கு இரண்டு மூன்று நாள்கள் தேவைப்படும். அதனால் தீர்ப்புத் தேதியை 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்’ என்றும் சொன்னார்!''
''ம்!''
''27-ம் தேதி தீர்ப்பு, அன்றைய தினத்தில் மாற்றம் இல்லை என்று அனைவரும் நினைத்தனர். ஜெயலலிதா தரப்பு எந்த மூவ்மென்டும் இல்லாமல்தான் இருந்தனர். ஆனால், இந்த முறை பெங்களூரு போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டியிடம் இருந்து நேரடியாக ரியாக்ஷன் வந்தது. அவர் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹாவை நேரில் சந்தித்து ஒரு மனுவைக் கொடுத்தார். அதில், 'தீர்ப்புக்காகக் குறிக்கப்பட்டுள்ள 27-ம் தேதியன்று பெங்களூரில் தசரா கொண்டாட்டம், விநாயகர் சிலை ஊர்வலங்கள், டி20 கிரிக்கெட் என்று பல பரபரப்பான நிகழ்ச்சிகள் உள்ளன. அந்த நாளில் இசட் ப்ளஸ் பாதுகாப்பில் உள்ள ஒரு மாநில முதலமைச்சருக்கு பாதுகாப்பு வழங்குவது சிரமம். எனவே, வேறொரு தேதிக்கு தீர்ப்பை மாற்ற வேண்டும்’ என்று கேட்டிருந்தார். மனுவை படித்த நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, 'பெங்களூரில் மொத்த போலீஸ் எண்ணிக்கை எவ்வளவு?’ என்று கேட்டார். அதற்கு எம்.என்.ரெட்டி, '16 ஆயிரம் பேர்’ என்று பதில் சொன்னதும், 'இதை ஏன் நீங்கள் அன்றே சொல்லவில்லை.
தசரா கொண்டாட்டம், விநாயர் சிலை ஊர்வலம் நடப்பது எல்லாம் உங்களுக்கு அன்றே தெரியும்தானே! பிறகு ஏன் கடைசி நேரத்தில் இதுபோன்ற கோரிக்கைகளுடன் வருகிறீர்கள்?’ என்று கேட்டுவிட்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்துள்ளார். பிறகு, 'அவர்களில் 5 ஆயிரம் பேரை நீதிமன்றப் பாதுகாப்புக்கு அனுப்பினாலும், மீதி 11 ஆயிரம் பேரை வைத்து பெங்களூரு சிட்டியின் பாதுகாப்பை கவனித்துக் கொள்ளலாமே?’ என்று நீதிபதி கூறியுள்ளார். அத்துடன், 'இனிமேல் தீர்ப்புத் தேதியை ஒத்திவைக்க முடியாது. வேண்டுமென்றால் டி20, விநாயகர் சிலை ஊர்வலங்களை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி, ரெட்டியை திருப்பி அனுப்பிவிட்டார்!''
''என்ன ஆச்சு பெங்களூரு போலீஸுக்கு?''
''இரண்டு விதமான காரணங்களைச் சொல்கிறார்கள். 'ஜெயலலிதாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து உளவுத் துறை மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸ் அதிகாரிகள் பெங்களூரு வந்தார்கள். அவர்கள், தேவையில்லாத விஷயங்களைக் கேட்டு கர்நாடக போலீஸ் அதிகாரிகளை பயமுறுத்திவிட்டார்கள். ஜெயலலிதாவுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு இருப்பதால் ஏராளமான கண்டிஷன்களைப் போட்டார்கள். இதனால் பயந்துபோன கர்நாடக போலீஸார் இப்படி நாளைக் கடத்துகிறார்கள்’ என்றும், 'பெங்களூரு போலீஸாரை தங்கள் வசப்படுத்தி இப்படி இழுக்கச் சொல்கிறார்கள்’ என்றும் இரண்டு விதமான செய்திகள் உலா வருகின்றன. ஆனால், இதற்கு நீதிபதி குன்ஹா இடம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் டெல்லியின் பக்கமாக ஜெயலலிதா தரப்பு திரும்பியது!''
''அங்கு என்ன நடந்தது?''
''தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களான என்.ராஜாராமன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவை திடீரென சந்தித்தார்கள். 'ஜெயலலிதா தமிழக முதல்வராக இருக்கிறார். அவரது உயிருக்கு விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இயக்கங்களால் ஏற்கெனவே அச்சுறுத்தல் உள்ளது. காவிரி பிரச்னையில் அவர் எடுத்த முயற்சிகளில் வெற்றி பெற்றுள்ளதால் கர்நாடகத்தில் அவருக்கு எதிர்ப்பு உள்ளது. எனவே 27-ம் தேதி பெங்களூருக்கு வரும் ஜெயலலிதாவுக்கு அச்சுறுத்தல் இருக்கும் என்று கருதப்படுகிறது. அந்த நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு வசதிகள் இல்லை. எனவே, ஜெயலலிதாவின் விலைமதிக்க முடியாத உயிரைப் பாதுகாக்க கர்நாடகா நீங்கலாக வேறு ஏதாவது மாநிலத்தில் தீர்ப்பை வழங்க சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறினார்கள். இதனை ஒரு மனுவாகக் கொடுத்தார்கள். 'இதற்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதனை நீங்கள் உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் கொண்டு போய் கொடுங்கள்’ என்று சொன்னார்.
இவர்கள் அந்த மனுவை எடுத்துக்கொண்டு பதிவாளரிடம் போனார்கள். இப்போது அந்தப் பதவியில் இருப்பவர் ரவீந்திரா மைதானி. 'இப்படி ஓர் அதிகாரம் உச்ச நீதிமன்றப் பதிவாளருக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதனால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்காக வேண்டுமானால் தாக்கல் செய்து பாருங்கள்’ என்று சொன்னார்!'' ''ஓஹோ!'' ''உச்ச நீதிமன்றத்துக்குப் போனால் அவர்கள் எந்த மாதிரியான முடிவை எடுப்பார்கள் என்ற குழப்பம் இவர்களுக்கு ஏற்பட்டது. அதனால் தயங்கியபடி கடந்த 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் ஓடியது. இந்த நிலையில் பெங்களூரு நீதிபதி குன்ஹா முன்பு ஆஜரான பெங்களூரு போலீஸ் அதிகாரி, 'நாங்கள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம்’ என்று 25-ம் தேதி காலையில் வந்து மனு கொடுத்தனர். அதனை குன்ஹா வாங்கி வைத்துக் கொண்டார். இப்போது பிரச்னை முடிந்தது மாதிரி தெரிந்தது. இனி ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் 27-ம் தேதி ஆஜராக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. உடனே டெல்லியில் வேறு மூவ் ஆரம்பித்தது!''
''அப்படியா அது என்ன?''
''உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் உச்ச நீதிமன்ற பதிவாளரையும் இரண்டு வழக்கறிஞர்கள் சந்தித்தார்கள் என்று சொன்னேன் அல்லவா? அவர்கள் இருவரும் ஒரு புதிய மனுவைத் தயாரிக்க ஆரம்பித்தார்கள். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சார்பாக வழக்கறிஞர் என்.ராஜாராமன் அந்த மனுவை தாக்கல் செய்தார். பொதுநல வழக்காக இதனைத் தாக்கல் செய்தார்கள். 'நீதிபதி குன்ஹா 27-ம் தேதி தீர்ப்பு தருவதில் உறுதியாக இருக்கிறார். ஜெயலலிதாவின் பாதுகாப்பு விஷயத்தில் அவர் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு முழுப் பொறுப்பை நீதிபதி ஏற்க முடியுமா ? போலீஸாரால் பாதுகாப்பு தரமுடியாது என்று சொன்ன பிறகும் நீதிபதி அதனை ஏற்க மறுக்கிறார். ஜெயலலிதாவுக்கு கர்நாடக மாநிலத்துடன் நல்லுறவு இல்லை. ஏற்கெனவே கன்னட அமைப்புகள் முதல்வர் மீது கடுமையான கோபத்துடன் இருக்கிறார்கள்.
ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்று நினைக்கிறோம். அதனால் தீர்ப்பு தரும் நீதிமன்றத்தை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கேட்கிறோம் அல்லது தீர்ப்புச் சொல்லும் நாளன்று முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று அந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்கள். இந்த மனு 25-ம் தேதி மதியம் 3.30 மணிக்கு நம்பர் ஆகிவிட்டது. 31959/ 2014 என்பதுதான் அந்த நம்பர் என்ற தகவல் சென்னைக்குச் சொல்லப்பட்டது. '26-ம் தேதி காலையில் இதனை விசாரணைக்குக் கொண்டு வந்துவிட வேண்டும்’ என்று அந்த வழக்கறிஞர்கள் இருவரும் முழுவீச்சில் இறங்கினர். 'விசாரணைக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்பந்தமாக நோட்டீஸ் அனுப்பினால் போதும், அதன்மூலமாக ஒரு வாரம் இழுத்துவிடலாம்’ என்று நினைக்கிறது இந்தத் தரப்பு!''
''அப்படியானால்...?''
''27-ம் தேதி காலை 11 மணிக்கு தீர்ப்பு அறிவிக்கப்பட்டால்தான் உறுதி. அதுவரை எதுவும் உறுதி இல்லை!'' ''குன்ஹா என்ன நினைக்கிறாராம்?'' ''சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, ஏறத்தாழ 1,000 பக்கங்களை நெருங்கி வரும் தீர்ப்பை எழுதி முடித்துவிட்டார் என்றே சொல்கிறார்கள். 1,000 பக்கங்கள் என்றால், அரசுத் தரப்பு வாதம் மற்றும் எதிர்தரப்பு வாதத்தை அப்படியே எடுத்துக்கொண்டு அதற்குக் கீழ், நீதிபதி தன்னுடைய தீர்ப்பை எழுதுவார். இதைத்தான் 'ஆபரேஷன் போர்ஷன்’ என்பார்கள். தன்னுடைய லேப்டாப்பில் தானே அவற்றை டைப் செய்துள்ள நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா இதற்காக ஸ்டெனோவைக்கூட அமர்த்திக் கொள்ளவில்லை. அந்த நான்கு நாட்களும் உணவு, தண்ணீர் தவிர வேறு எதற்காகவும் யாரையும் நீதிபதி சந்திக்கவில்லை. தினமும் காலை 11 மணிக்கு நீதிமன்றம் வருகிறார். தனது சேம்பரில் உட்கார்ந்து விடுகிறார். மாலை 5 மணிக்குத்தான் செல்கிறார். தனிப்பட்ட முறையில் யாரையும் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார்.'' ''தீர்ப்பளிக்கும் இடம் தயாராகிவிட்டதா?''
'பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள காந்தி சதனில்தான் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. காந்தி சதன் ஜெயலலிதா தரப்புக்கு புதிதல்ல. கடந்த 2011-ம் ஆண்டு நேரில் ஆஜராகி சாட்சி அளித்த இடம்தான் அது. மற்ற நாள்களில் சிறைக் கைதிகளுக்கான கவுன்சிலிங் மற்றும் ஒழுக்கப் பயிற்சி வகுப்புகள் நடத்தும் இடமாக காந்தி சதன் செயல்படுகிறது. இங்குதான் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது!'' வழங்கப்பட்டதும் அந்த இடமே .
இவ்வாறு பல தில்லுமுல்லுகளைச் செய்து, இடத்தை மாற்றி நேரத்தை மாற்றி புலிகளால் ஆபத்து உண்டு என்று மனுவைக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா. இதுவே அவருக்கும் பெரும் தலையிடியாக மாறியுள்ளது. காரணம் என்னவென்றால் அவரால் அக்டோபர் 5ம் திகதி முதல் வெளியே வரமுடியாது. இன்று சனிக்கிழமை. நாளை ஞாயிறு. பின்னர் பண்டிகை என்பதனால் விடுமுறை. அக்டோபட் 5 ம் திகதியே மீண்டும் நீதிமன்றங்கள் இயக்க ஆரம்பிக்கும். அண்றைய தினமே அவர் பிணையில் வெளியே வரலாம். இது ஒரு கிருமினல் குற்றம் இல்லையென்ற படியாலும், அவர் ஒரு மாநிலத்தின் முன் நாள் முதல்வர் என்ற காரணத்தாலும் அவருக்கு சிலவேளை பிணை வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும், அது கருநாடக அரசைப் பொறுத்த விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/1101.html

Geen opmerkingen:

Een reactie posten