உணர்ச்சிகரமாக உரையாற்றிய மோடி ராஜபக்சவை சந்தித்தார்…
அங்கு இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் கொய்ராலா ஆகியோரையும் மோடி சந்தித்து பேசுவார் என்று வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளரான சையது அக்பரூதின் ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி ஷேக் ஹசீனா, மகிந்த ராஜபக்சே, சுஷில் கொய்ராலா ஆகியோரை இன்று சந்தித்து பேசினார்.
எனினும் இச்சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பது இது வரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மறுநாள் மறுநாள் வாஷிங்டன் செல்லும் மோடி, 29 மற்றும் 30-ந் தேதிகளில் அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். அமெரிக்காவின் பல்வேறு மாகாண கவர்னர்களையும், கூகுள் மற்றும் பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர்களையும் மோடி சந்தித்து பேசுகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/82816.html
புலம்பெயர் தமிழர்களை நெருக்கமான உறவிற்கு அழைக்கும் BJP
அரசாங்கத்திற்க்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்க்கும் இடையிலான பரஸ்பர சந்தேகமே முக்கிய விடயமாகவுள்ளது, அதிகாரப்பகிர்வு என்பது மிக முக்கியமான விடயம், சகல தரப்பும் ஏனைய தரப்பின் மீது நம்பிக்கை கொண்டிருந்தாலே இது சாத்தியமாகும். சந்தேகமே சகல முயற்சிகளையும் தோல்வியடைச்செய்கின்றது, இரு தரப்பும் சாதகமான நடவடிக்கைகள் மூலமாக இதற்க்கு தீர்வு காணவேண்டும்.
விடுதலைப்புலிகள் மீண்டும் ஒருங்கிணைவார்கள் போன்ற அச்சங்கள் ஆதாரமற்றவை, புலம்பெயர் தமிழர்கள் தமிழ் அரசியல் கட்சிகளுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளது உண்மையே, இதில் தவறு எதுவுமில்லை, இலங்கையர்களின் வாரிசுகளே இன்று புலம்பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். அவர்கள் வன்முறையை போதிக்கவில்லை, மாறாக இலங்கையில் வாழும் தங்களுடைய உறவுகளுக்க அமைதியான தீர்வை விரும்புகின்றனர்.
தங்களுக்கு புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புள்ளதை தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது சரியானதே, ஆனால் அரசியல் முடிவுகளை எடுப்பது தமிழ்தேசிய கூட்டமைப்பே.பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அனைத்து கட்சிகளும் பங்குகொள்வதை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை, தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது வேறு கட்சியோ கலந்து கொள்ளாவிட்டால் பாராளுமன்ற தெரிவுக்குழு அர்த்தமிழந்ததாகிவிடும், ஆகவே அரசாங்கமே முயற்சிகளை மேற்கொண்டு பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும்.
இந்திய உதவிகள் மக்களை சென்று சேர்வதில் காணப்படும் முன்னேற்றம் குறித்து நாங்கள் திருப்பதியடையவில்லை, இது மிகவும் மெதுவானதாக காணப்படுகின்றது, அரசாங்கத்திற்க்கும் மக்களின் தேவைகளுக்கும் இடையிலான நம்பிக்கையின்மைக்கு தீர்வு காணப்படவேண்டும்.
அதிகாரப்பகிர்வை வலியுறுத்துவது இந்தியா அல்ல, இலங்கை அளித்த வாக்குறுதிகளே காப்பாற்றப்பட வேண்டியுள்ளது, நாங்கள் அனைவரும் இலங்கை தமிழர்களின் கரிசனைகளை மாத்திரம் முன்வைக்கிறோம். நாங்கள் அழுத்தங்களை கொடுக்கவில்லை, மாறாக இந்த விடயத்தில் எமக்குள்ள பழுத்த அனுபவத்தை அடிப்படையாகவைத்து பணிவாக ஆலோசனை வழங்குகிறோம். ஏன குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/82824.html
Geen opmerkingen:
Een reactie posten