கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை பிணையில் எடுக்க கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதா சட்டத்தரணிகள் குழு, தண்டனையை தடை செய்யக் கோரும் உத்திகளை பரிசீலித்து வருகின்றனர்.
”நாங்கள் நாளை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்கிறோம்” என்று ஜெயலலிதாவின் மூத்த சட்டத்தரணி பி.குமார் செய்தியாளர்களிடம்; தெரிவித்துள்ளார்.
நாளையதினம் மனு தாக்கல் செய்யப்பட்டாலும் உயர் நீதிமன்றத்தின் விடுப்பு அமர்வு செவ்வாயன்றே மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று தெரியவருகிறது.
உயர் நீதிமன்றம் தற்போது தசரா விடுமுறை நாளில் உள்ளது. செப்.29 முதல் அக்டோபர் 6ம் திகதி வரை தசரா விடுமுறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவுக்கு தண்டனை 3 ஆண்டுகளுக்கு மேல் விதிக்கப்பட்டுள்ளதால் உயர் நீதிமன்றமே பிணை அளிக்க முடியும்.
இந்தநிலையில் சட்டத்தரணிகளின் கையில் உள்ள ஒரு ஆயுதம், கிரிமினல் பிரிவு மனுவாகும்
இந்த மனுவைச் செய்தால் தண்டனை மற்றும் குற்றம் என்ற தீர்ப்பிற்கும் தடை வாங்கி விடலாம் என்று சட்டத்தரணிகள் எண்ணுகின்றனர்
ஒருவேளை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தால் சட்டப்பேரவை பதவி தகுதி இழப்பு என்பது ஒன்றுமில்லாமல் ஆகிவிடும்.
ஆனால் உயர் நீதிமன்றங்கள் ஊழல் வழக்கில் பொதுவாக இடைக்கால தடை கொடுக்காது என்றே கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர். ஆகியோர் வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு விட்டாலே அவரது பதவி தானாகவே தகுதி இழப்பு அடைந்து விடும்.
இதற்கு முன்பு இந்த வகையான தீர்ப்பிற்கு பின்பு 3 மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்து தகுதி இழப்பை முறியடிக்கலாம்.
எனினும் அது இப்போது முடியாது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் சட்டத்தரணிகள், இந்த வழக்கு தீர்ப்பின் நகலைப் பெற்று அதை வைத்து விவாதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVht3.html
Geen opmerkingen:
Een reactie posten