தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 september 2014

பங்ளாதேஷ் சென்றுள்ள பிரிட்டன் உளவுப்படை !

பங்ளாதேஷ் நாட்டிற்கு பிரித்தானிய உளவுப்படையினர் விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈராக் மற்றும் சிரியா போன்ற நாடுகளில் காலூன்றியுள்ள  ISIS தீவிரவாத இயக்கத்தில் பல வெளிநாட்டவர்கள் இணைந்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக பிரித்தானியர்கள், அவுஸ்திரேலியர்கள் மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் கூட இணைந்துள்ளார்கள். இவர்களே அவ்வியக்கத்தை மேலும் பலப்படுத்தி வருகிறார்கள் என்று அமெரிக்கா கருதுகிறது. பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த பல முஸ்லீம் இளைஞர்கள் ISIS இயக்கத்தில் இணைந்து, அவர்கள் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளர்கள். சுமீம் ரகுமான் என்னும் பிரித்தானிய முஸ்லீமை கடந்த பல மாதங்களாக பிரித்தானிய உளவுப் படை தேடிவந்தது.
இறுதியாக அவர் பங்ளாதேஷில் நிலைகொண்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனை அவர்கள் பங்ளாதேஷ் பொலிசாருக்கு கொடுத்து ரகுமானை கைதுசெய்யக் கோரினார்கள். பிரிட்டன் பொலிசாரின் கோரிக்கையை ஏற்று பங்ளாதேஷ் பொலிசார் அதிரடியாக ரகுமானை கைதுசெய்தார்கள். அந்தவேளை அவர் ISIS  இயக்கத்திற்கு ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார். பங்ளாதேஷில் உள்ள, பல இளைஞர்களை ரகுமான் இதுபோன்று இணைத்துள்ளார் என்று , கூறப்படுகிறது. இவ்வாறு இணையும் இளைஞர்களுக்கு எங்கே பயிற்சி நடக்கிறது. அவர்கள் எவ்வாறு நாடு கடத்தப்படுகிறார்கள் என்பது போன்ற விடையங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதனை அறியவே, பிரித்தானிய உளவுப் பிரிவினர் தற்போது பங்ளாதேஷ் கிளம்பியுள்ளார்கள்.
அவர்கள் ரகுமானை விசாரணை செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/1115.html

Geen opmerkingen:

Een reactie posten