தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 september 2014

தமிழகத்தில் இன்று இயல்புநிலை! அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை!!

மட்டக்களப்பில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 08:41.01 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மகிழூர், நாகபுரம் பேக்கரி வீதியில் உள்ள வீட்டில் இருந்து செல்லத்தம்பி தங்கவேல் (68வயது)  என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கடந்த 35 வருடமாக குடும்பத்தினை பிரிந்து தனிமையில் இருந்துவந்ததாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் இன்று பிற்பகல் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதியான தியாகேஸ்வரன் ஸ்தலத்துக்கு வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhs5.html
ஊவாவின் அரசுக்கு ஆசனங்கள் குறைய வீரவன்ஸவே காரணம்!- குற்றம் சுமத்தும் தோல்வியடைந்த வேட்பாளர்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 09:14.36 AM GMT ]
மொனராகலையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆசனங்கள் குறைய காரணம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ஸ என அந்த கட்சியின் ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் உதயகுமார குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊவா மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மொனரகலையில் 10 ஆசனங்கள் இருந்தன. அது 8 ஆக குறைந்தமைக்கு அமைச்சர் வீரவன்ஸவே பொறுப்புக் கூறவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து விலகி சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட உதயகுமாரவுக்கு கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
அமைச்சர் விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டதால், உதயகுமாரவிற்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், அவர் சுயேட்சையாக போட்டியிட்டு 3 ஆயிரத்து 781 வாக்குகளை பெற்றார்.
தான் பெற்ற வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு சேர்ந்திருந்தால் மேலும் இரண்டு ஆசனங்கள் கிடைத்திருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் உதயகுமார தேர்தலில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhs7.html

அதிமுக தொண்டர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை - ஜெயலலிதாவுக்காக 17 வயது மாணவி தீக்குளித்தார்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 10:58.12 AM GMT ]
காஞ்சிபுரம் அருகேயுள்ள குருவிமலையில் அதிமுக தொண்டர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதன் காரணமாக அந்த பிரதேசத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக குருவிமலை கிளையின் உதவிச் செயலராக பொறுப்பேற்றிருந்த பாபு (45), இவர், தனது வீட்டருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் மரத்தில் தூக்கில் தொங்கியதை ஊர்க்காரர்கள் சிலர் பார்த்து அவரது வீட்டுக்கு தகவல் வழங்கினர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து மனமுடைந்த நிலையில் அவர் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை காஞ்சிபுரத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறையின் போது பேருந்து ஒன்று கொளுத்தப்பட்டது.
இன்று காலை முதல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால் ஹர்த்தால் போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதாவுக்காக 17 வயது மாணவி தீக்குளித்தார்
மதுரை எலுமலை அருகே 17வயது பள்ளிச் மாணவி தீக்குளித்து உயிர்துறக்க முயன்றதால் பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு அளித்த தண்டனையைத் தாங்க முடியாமல் நாகலட்சுமி என்ற இந்த பள்ளிச் சிறுமி தீக்குளித்தார்.
இதன்போது உடல் முழுதும் 80 தீக்காயங்களுடன் இந்தப் பெண் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜெயலலிதாவின் இலவச சைக்கிள் மற்றும் மடிக்கணினி திட்டத்தினால் நாகலட்சுமி பயனடைந்தவராவார்.
இதனால் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினால் அவர் மனம் உடைந்ததாக கூடுதல் பொலிஸ் கண்காணிப்பாளர் கோபால்சாமி தெரிவித்தார்.
வாங்கி நாராயணபுரத்தில் வசித்து வரும் பிளஸ் 2வில் படிக்கும் பெண் வீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிப் பற்ற வைத்து கொண்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhtz.html
தமிழக வன்முறைகள் தொடர்பில் பொலிஸார் மீது வைகோ கண்டனம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 11:14.29 AM GMT ]
ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு எதிரொலியாக அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்ட போது பொலிஸார் அதனை கட்டுப்படுத்தாமை குறித்து குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வைகோ இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல்-டி-குன்ஹா வரலாறு போற்றும் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கின்றார்.
தண்டனை பெற்றவர் மேல்நீதிமன்றத்தில் முறையீடு செய்து கொள்ளலாம்.
எனினும் நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் ஆளும்கட்சியான அண்ணா தி.மு.க.வினர் அராஜக வன்முறையில் ஈடுபட்டனர்.
கடைகளை உடைத்து நொறுக்கினர், பேருந்துகள், வாகனங்களைத் தாக்கித் தீவைத்துக் கொளுத்தினர். வணிக நிறுவனங்கள் கற்களை வீசிப் பொருள் சேதம் ஏற்படுத்தினர். ஒரு பாவமும் அறியாத பொதுமக்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகினர்.
இவை அனைத்தையும் பொலிஸார் கைகட்டி வேடிக்கை பார்த்த அநீதியும் நிகழ்ந்தது. குற்றங்களுக்குத் துணைபோனது.
முதல் அமைச்சர்தான் சிறை சென்றாரே தவிர, அரசு நிர்வாகம் என்பது அதிகாரிகளால் இயக்கப்படுவதாகும். போலிஸார் என்பவர்கள் சட்டத்தின் பணியாளர்கள், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியவர்கள். 2001ம் ஆண்டில் இதுபோல ஜெயலலிதாவுக்குத் தண்டனைத் தீர்ப்பு வந்த போது, தர்மபுரியில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிகள் மூவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர்.
அன்று நடந்த வன்முறைக் கொடுமையைக் கருத்தில் கொண்டு அண்ணா தி.மு.க.வினர் பாடம் கற்றார்களா? இல்லை. கட்சித் தலைமை அவர்களை நெறிப்படுத்தியதா? என்றால் அதுவும் இல்லை.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பில் இருந்த முதல் அமைச்சர், பெங்களூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்விதமாக இருப்பினும் தமிழகத்தில் அமைதி காக்க வேண்டும்’ என்று தன் கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டிய கடமையைச் செய்யத் தவறினார்.
அதற்கு மாறாகää அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பெங்களூரில் வந்து குவிவதற்கு, அவருக்குத் தெரிந்தே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இன்றைக்கும் தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் பேருந்துப் போக்குவரத்து இல்லை.
ஞாயிற்றுக்கிழமையில் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் திறக்கப்படும் கடைகளும் அச்சத்தால் மூடிக் கிடக்கின்றன.
பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்புத் தரவேண்டியது அரசு நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை ஆகும். ஆனால், நேற்று அரசு இயந்திரம் முற்றிலும் செயலற்றுக் கிடந்தது. ஆளுங்கட்சி அராஜகத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டது.
அதனால்தான் நேற்று பகலில் தமிழகம் முழுவதிலும் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டது. பொதுமக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாமல், தொலைக்காட்சி ஊடகங்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தான சூழல் ஆகும்.
இதற்கு முன்பு இப்படி நடைபெற்ற அராஜகச் சம்பவங்களின் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நீதிமன்றமே ஆணையிட்டது.
இதனை மனதில் கொண்டு, நேற்றைய அராஜகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களின் அச்சத்தைப் போக்குகின்ற விதத்தில் வன்முறையாளர்கள் மீது பொலிஸார்; கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVht0.html
தமிழகத்தில் இன்று இயல்புநிலை! அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 11:34.47 AM GMT ]
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதை எதிர்த்து தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே வன்முறைகள் வெடித்தன.
எனினும் இன்று சற்றே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து போக்குவரத்துக்கள் படிப்படியாக தமிழகமெங்கும் தொடங்க சென்னையில் கடைகள், மற்றும் உணவு விடுதிகள் திறக்கத் தொடங்கியுள்ளன.
மத்திய அரசு,  தமிழக அரசுக்கு சட்டம் ஒழுங்கை பராமரிக்குமாறு அறிவுறுத்தியதையடுத்து வன்முறைச் சம்பவங்கள் கட்டுக்குள் வந்துள்ளன.
இன்று எந்தவித அசம்பாவிதமும் இதுவரை நடைபெறவில்லை. ஆனாலும், தமிழகம் - பெங்களூர் இடையே பேருந்து போக்குவரத்து இன்னமும் தொடங்கப்படவில்லை.
மதுரை உட்பட தெற்கு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்கு பேருந்து போக்குவரத்து பெரும்பாலான இடங்களில் மீண்டும் தொடங்கியது. அசம்பாவிதங்கள் எதுவும் இதுவரை நிகழவில்லை.
இருப்பினும் புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை உள்ளிட்ட சில இடங்களில் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆனால் கடைகள், விடுதிகள் பல இன்னமும் மூடப்பட்டுள்ளன.
தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துத் தொடங்கியது. சில இடங்களில் மட்டும் கடைகள் இன்னமும் திறக்கப்படவில்லை.
ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியாக இருந்த ஸ்ரீரங்கத்தில் இன்று கடைகள் திறக்கப்பட்டன. இருப்பினும் தனியார் பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகள்; ஓடவில்லை.
இராமேஸ்வரத்தில் பிற ஊர்களுக்கான பேருந்து சேவை இன்னும் ரத்து செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளன.
தேனியில் பொலிஸ் அனுமதி பெற்ற பின்பு பேருந்து போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா நகரமான பாண்டிச்சேரியில் கடைகள்,  விடுதிகள் திறந்திருந்தாலும் ஊர் வெறிச்சோடியே காணப்படுகிறது
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVht1.html

Geen opmerkingen:

Een reactie posten