மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்தின் நவகிரிநகர் 38ம் கிராமத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மக்கள் சந்திப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டார்.
இச்சந்திப்பில் இப்பகுதி மக்கள் தாங்கள் காட்டு யானைகளால் தாக்கப்படுவது சார்பாகவும், காட்டு யானைகளின் தாக்கத்தில் இருந்து தம்மை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு உதவுமாறும் வேண்டுதல் விடுத்தனர்.
அத்தோடு தங்களது பாடசாலைக்கு ஒரு கணனி இயந்திரத்தை கோரியதுடன், விநாயகர் ஆலயத்தின் புனரமைப்புக்கு உதவி கோரினர்.
மேலும் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வீட்டுத் திட்டத்தில் தங்கள் பகுதியில் வீடு வசதி இன்று வசிப்பவர்களுக்கு வீடு உதவி பெற்றுத்தரவும், 325000 ரூபாவில் கட்டடப்பட்ட வீடு இன்றும் முடிவடையாத நிலையில் உள்ளதையும், தமக்கு பொதுக் கிணறுகள் குறைபாடாக உள்ளதால் நீர் பெற சிரமப்படுவதாகவும் தெரிவித்ததுடன், தமது கிராமத்துக்கு வைத்திய சேவையை பெற்றுத் தருமாறும், அதேவேளை தமது பிரதான வீதி மத்திய நீர்ப்பாசன திணைக்களத்துக்கு உரியதாக உள்ளதால் அது புனரமைக்கப்படாமையால் போக்குவரத்து ரீதியாக பல சிரமங்களை தாங்களும், தூர இடத்திற்கு செல்லும் மாணவர்களும் சிரமப்படுகின்றனர் என தெரிவித்தனர்.
இவ்விடயமாக மக்களின் குறைபாடுகளை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் பாடசாலைக்கு கணனி உதவி பெற்றுத் தர முயற்சிப்பதாகவும், 2015ம் ஆண்டு ஆலய புனரமைப்புக்கு தமது பன்முகபடுத்தபட்ட நிதியில் ஒதுக்குவதாகவும், வீட்டுத் திட்டம் சார்பாக பிரதேச செயலாளர் உட்பட்ட அதிகாரிகளுடன் கதைத்து இயன்றவரை நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியதுடன், யானைகளை வெளியேற்ற தனியார் காணிகள் காடாக உள்ளதால் இவ்விடயமாக உரிய அதிகாரிகளுடன் கதைத்து ஏற்பாடு செய்வதாகவும் குறிப்பிட்டார்.
இவ்வேளை பொதுக் கிணறுகள் அமைப்பது சார்பாகவும் முயற்சிகள் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு நீர்பாசன மாவட்ட பணிப்பாளர், களுவாஞ்சிக்குடி பொறியியலாளர் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு இவ் நீர்ப்பாசன வீதிகள் புனரமைக்கப்பட வேண்டிய அவசியம் சார்பாகவும் உரையாடினார்.
இதன் பின் அப்பகுதி முகாமைத்துவ குழுவை நீர்பாசன பணிப்பாளரையும், களுவாஞ்சிக்குடி காரியாலய பொறியியலாளரையும் சந்திக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
இவ்வாறு பல விடயங்கள் பாராளுமன்ற உறுப்பினரால் ஆராயப்பட்டது.
அம்பாறை மாவட்ட சிங்கள கிராமத்தின் எல்லையில் இக்கிராமம் இருப்பதால் இப்பகுதி மக்கள் அடிக்கடி யுத்த சூழலால் பாதிக்கப்படுவதும், இடம்பெயர்வதுமாக வாழ்ந்தவர்கள்.
அன்றாடம் விவசாயத்தின் மூலம் வாழ்க்கையை நடாத்தி வருபவர்கள், பல கிலோ மீற்றர் சென்றே இம்மக்கள் பேருந்து ஏறி சென்று தங்களது கடமைகளை மேற்கொள்கின்றனர்.
நீண்டகாலத்துக்கு பின் தமிழ் அரசியல்வாதி தமது பகுதிக்கு வந்து தங்களை சந்தித்ததை இட்டு தாங்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினரினால் நவகிரி கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில் மரம் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பின் போது கிழக்கு இந்து ஒன்றியச் செயலாளர் கதிர்பாரதிதாசன் ,ஆன்மீக தொண்டரும் ,ஆயுள் வேத வைத்தியருமான எஸ்.விஸ்வலிங்கம் நவகிரி கண்ணகி அம்மன் ஆலய பிரதம குரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhr3.html
Geen opmerkingen:
Een reactie posten