தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 september 2014

ஜெயலலிதாவுக்காக ஆஜராக மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வருகை?- இன்று ஜாமீன் மனு தாக்கல்!

மின்கட்டண குறைப்பு! செப்.16ம் திகதி முதல் அமுல்! வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம்!
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 12:36.55 AM GMT ]
மின்கட்டணம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று மின்வலு சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். 
நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயற்பட ஆரம்பித்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் 25சதவீத மின்கட்டணம் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
25 சதவீத மின்கட்டண குறைப்பானது குடியிருப்பாளர்களுக்கு பாரிய நன்மையைப் பெற்றுக் கொடுத்துள்ளது. 25வீத மின்சார கட்டண குறைப்பு இம்மாதம் (செப்டம்பர்) 16ம் திகதி முதல் அமுலாகும். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரம் வெளியிடப்படும்.
இதேவேளை செப்டம்பர் மாத மின்சார கட்டணத்தில் 25வீதம் கட்டணக்கழிவு பெறாத சகலருக்கும் அடுத்த மாத மின்கட்டணத்துடன் 25வீதம் கழிக்கப்படும்.
இந்த மின்கட்டண குறைப்பு தொடர்பாக நிதி அமைச்சு, மின்வலு சக்தி அமைச்சு, இலங்கை மின்சார சபை ஆகியன மின்கட்டண குறைப்பு தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhv2.html
சசிந்திர ராஜபக்சவிற்கு எதிராக ஜே.வி.பி வழக்கு!
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 12:47.01 AM GMT ]
ஊவா மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவிற்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து ஜே.வி.பி கட்சி கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
720 மில்லியன் மக்கள் பணம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக, மாகாணசபையின் நிதி துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாகாணசபை கலைக்கப்படுவதற்கு முன்னர் இந்தப் பணம், முதலமைச்சர் சசீந்திரவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
பணத்தை வழங்குதவற்கு அனுமதி வழங்கிய மாகாண பிரதம செயலாளருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மாகாணசபையின் அனுமதியுடனா இந்தப் பணம் முதலமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது குறித்து நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்படும்.
ஒதுக்கப்பட்ட பணத்தை முதலமைச்சர் சசீந்திர தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தினார்.
நீர் பம்பிகள், தையல் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இந்தப் பணத்தைக் கொண்டு கொள்வனவு செய்து, கட்சி ஆதரவாளர்களுக்கு சசீந்திர வழங்கியதாக விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhv3.html
ஆளும் கட்சி அமைச்சர் 450 மில்லியன் மோசடியில் ஈடுபட்டுள்ளார்!– லக்ஸ்மன் கிரியல்ல
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 12:53.49 AM GMT ]
ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் 450 மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இவ்வாறு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து விசாரணைகளுக்கு முகம் கொடுக்காது, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளரை அமைச்சர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
நாட்டின் சட்டம் ஒழுங்கு பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது.
17ம் திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்தப்பட வேண்டும்.
நாட்டின் சகல சட்டங்களும் அரச நிறுவனங்களும் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
17ம் திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றின் 225 பேரில் 224 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
இந்தியாவின் நீதிமன்றக் கட்டமைப்பு மிகவும் சுயாதீனமானது.
இதன் காரணமாகவே மிகவும் பலம்பொருந்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் 17ம் திருத்தச சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
எனினும் அரசாங்கம் அந்த சட்டத்தை ரத்து செய்து, நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை முடக்கியுள்ளது என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா கைது தொடர்பில் சிங்கள ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhv4.html

ஜெயலலிதாவுக்காக ஆஜராக மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வருகை?- இன்று ஜாமீன் மனு தாக்கல்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 01:06.28 AM GMT ]
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கேட்டு கர்நாடக ஹைகோர்ட்டில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தால், 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கும்பட்சத்தில் அதற்கு ஹைகோர்ட் மட்டுமே ஜாமீன் அளிக்க முடியும், கீழ் கோர்ட்டுகள் அளிக்க முடியாது என்பது விதிமுறை. எனவே, கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெயலலிதா தரப்பில் ஜாமீன் கேட்டு இன்று மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
கர்நாடகாவில் தற்போது தசரா காரணமாக, கோர்ட்டுகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிக்கும் கோர்ட் மட்டுமே ஹைகோர்ட்டில் இயங்கிவருகிறது. முக்கிய பெஞ்ச் செயல்படவில்லை.
இந்நிலையில், ஜெயலலிதா தரப்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத் மலானி இன்று பெங்களூர் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா தரப்பில், ஜாமீன் மனுவை அவரே தாக்கல் செய்ய உள்ளதாகவும், அடுத்தகட்டமாக நடைபெறும் விசாரணைகளின்போதும் ராம் ஜெத்மலானி ஆஜராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராம் ஜெத்மலானி பாஜகவில் இருந்தவர். சமீபத்தில் விலகினார். மேலும், நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை ராம் ஜெத்மலானி விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹாவுக்கு, ராம் ஜெத்மலானி கண்டனம்
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி குன்ஹாவுக்கு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபாரதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு மூத்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‘’ஜெயலலிதாவுக்கு இந்த தீர்ப்பை வழங்கியதன் நீதிபதி குன்ஹா நீதித்துறையில் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார்.
சட்டப்படி இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. அபாராதம் விதித்ததில் குன்ஹா நீதிக் கோட்பாடுகளை மீறிவிட்டார்.
ஊழல் தடுப்பு சட்ட விதிகளின்படி இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை.
ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள் வேண்டுமானால் இந்த தீர்ப்பை ஏற்கலாம்.
ஆனால், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வழக்கறிஞர் என்ற முறையில் இந்த தீர்ப்பை எதிர்க்கிறேன்.
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ற முறையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா? என்று ஆழமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது  என்று கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhv5.html

Geen opmerkingen:

Een reactie posten