தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 september 2014

நவ்ரு முகாமில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் சிறுவர்கள்!

ஊடகவியலாளர்களை பின்தொடரும் கோத்தபாய: கருத்தரங்கை குழப்பிய புலனாய்வு பிரிவினர்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 07:06.09 AM GMT ]
ஊடக நெறிமுறை சம்பந்தமாக தமது உறுப்பினர்களுக்கு விளக்குவதற்காக இலங்கை இணைய ஊடகவியலாளர்கள் சங்கம் நேற்று நடத்தவிருந்த கருத்தரங்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் குழப்பியுள்ளனர்.
நீர்கொழும்பு ராணி பீச் ரிசோர்ட்டில் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஹொட்டல் உரிமையாளரை நேற்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், கருத்தரங்கில் சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் குழு கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனால், பொதுமக்கள் ஹொட்டலுக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்த தயாராகி வருவதாகவும் கருத்தரங்கை நிறுத்துமாறும் அச்சுறுத்தி, எச்சரித்துள்ளனர்.
இதனையடுத்து ஹொட்டல் உரிமையாளர் ஊடக அமைப்பின் தலைவர் பிரடி கமகேவை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.
சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் கருத்தரங்கில் கலந்து கொள்ளவில்லை எனவும் அந்த தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் இலங்கையில் இருப்பது தனக்கு தெரியாது எனவும் கமகே கூறியுள்ளார்.
இதற்கு முன்னர், நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றுக்கு புலி முத்திரை குத்தப்பட்டதால், இந்த கருத்தரங்கில் வடக்கை சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை எனவும் அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், மீண்டும் ஹொட்ட உரிமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், கருத்தரங்கை நடத்த இடமளிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
இதனையடுத்து சிவில் உடையில் வந்த சுமார் 7 முதல் 8 நபர்கள் ஹொட்டலில் நடக்கும் கருத்தரங்கிற்கு சனல் 4 ஊடகவியலாளர்கள் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளதுடன் கருத்தரங்கை நடத்தினால், பார்த்து கொள்ள முடியும் என கூறியுள்ளனர்.
இந்த அச்சுறுத்தல்களை அடுத்து அமைப்பாளர்கள் கருத்தரங்கை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர்.
இதனிடையே இலங்கையில் உள்ள ஹொட்டல்களில் தங்கும் நபர்கள் பற்றிய விபரமான பட்டியல் ஒன்றை தினமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என கடந்த வாரம் ஹொட்டல் உரிமையாளர்களுக்கு பகிரங்கப்படுத்தாமல் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த சம்பவங்கள் கோத்தபாய ராஜபக்ஷ தமது சகாக்களை ஊடகவியலாளர்களை பின் தொடர வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
ஊடகவியலாளர்களை பின் தொடரும் கோத்தபாயவின் சகாக்கள் ஊடகவியலாளர் கழிவறைக்கு செல்லும் தகவல்களை முதல் சகல தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
அனைத்து இடங்களிலும் விடுதலைப் புலிகள் மற்றும் சர்வதேச சதித்திட்டங்கள் இருக்கின்றது என்று கோத்தபாய பகல் கனவு கண்டு வருகிறார்.
எது எப்படியிருந்த போதும் ராஜபக்ஷவினர் தமது எதிர்காலம் குறித்து கடும் பயத்தில் இருப்பது இந்த சம்பவங்கள் வெளிக்காட்டுவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhr6.html
ஜெயலலிதா தடைகளைத் தகர்த்தெறிந்து தமிழகத்தின் நல்லாட்சியை தொடருவார்: வேல்முருகன் நம்பிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 07:12.40 AM GMT ]
தமிழக முதல்வர் அவர்கள் மீதான வழக்கின் தீர்ப்பு என்பது தற்போதைய நிலையில் கீழ் நீதிமன்றத்தால் ஒரு மாவட்ட நீதிபதியால் கொடுக்கப்பட்ட தீர்ப்புதானே தவிர இறுதித் தீர்ப்பு அல்ல என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த தீர்ப்பை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே சட்டத்தையும் நீதித்துறையையும் மதித்து ஏற்றுக் கொண்டும் இருக்கிறார். நமது நாட்டின் நீதித்துறை அமைப்பில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவையும் இருக்கின்றன.
உரிய சட்ட நடைமுறைகள் மூலம் நிச்சயமாக தமக்கான தடைகளை தகர்த்தெறிவார் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள். பொய் வழக்கு சதிகளைத் தகர்த்து புரட்டல்காரர்களுக்கு தக்கதோர் பாடத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் புகட்டுகின்ற நாள் வெகுதொலைவில் இல்லை.
தற்போது நீதித்துறை அளித்த தீர்ப்பை ஏற்றுள்ள நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் மக்களுக்கான நல்லாட்சியை தொடர்ந்தும் வழங்கும்.
எப்படி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆட்சி உலகத் தமிழர்களுக்கான நல்லரசாக முன்னுதாரணமிக்க மக்களுக்கான அரசாக திகழ்ந்ததோ அதுபோலவே அவரது தொடர் வழிகாட்டுதலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசும் தமிழினத்துக்கான மக்களுக்கான போற்றுதலுக்குறிய நல்லரசாகவே தொடரும்.
தமிழ்ச் சமூகம் எதிர்கொண்டிருக்கும் உரிமை மீட்பு பிரச்சனைகள், ஈழத் தமிழர் மற்றும் மீனவர் விவகாரங்களில் தமிழர் நலனுக்கான ஒரே அரசாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசும் தொடர்ந்தும் செயல்பட்டு இன எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாகவே திகழும் என குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhr7.html
குப்பை தொட்டிக்குள் குழந்தை எப்படி வந்தது? பொலிஸார் தீவிர விசாரணை
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 07:31.01 AM GMT ]
தமிழகத்தின் கும்மிடிப் பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குப்பை தொட்டியில் பிறந்த சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை காணப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வெள்ளிக்கிழமை இரவு குப்பை தொட்டியில் குழந்தை ஒன்று அழுகுரல் கேட்டுள்ளது.
இதனையடுத்து, அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இது குறித்து அக்கம்பக்கத்தாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தகவல் அறிந்து சிப்காட் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் பாலுசாமி அப்பகுதி மக்களிடம் இது குறித்து விசாரித்ததோடு அந்த குழந்தையை கும்மிடிப்பூண்டி அரசு பொதுமருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்க நடவடிக்கை எடுத்தார்.
தொடர்ந்து அந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு பொதுமருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த குழந்தை கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பாலகுண்டராஜா- தெய்வானை தம்பரியரின் குழந்தை என விசாரணையில் தெரியவந்தது. 
இது குறித்து பெற்றோரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhsz.html

நவ்ரு முகாமில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் சிறுவர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 07:53.02 AM GMT ]
அவுஸ்திரேலியாவில் அகதிகளை ஈவிரக்கமற்ற முறையில் குடிவரவு அமைச்சரும், அவுஸ்திரேலியா அரசாங்கமும் தொடர்ந்து சிறுவர்களை சிறைக்கூடத்தில் அடைத்து வைத்துள்ளது.
இதன் காரணமாக மிகவும் மனமுடைந்த சிறுவர்கள் 3 நாட்களாக கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுவர்களை கம்போடியாவுக்கு அனுப்பும் திட்டத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
26ம் திகதி தொடங்கிய ஆர்ப்பாட்டம் தற்போது சிறுவர்கள் முன்னெடுப்பதாக இயன் தெரிவித்துள்ளார்.
இந்த சிறுவர்களின் எதிர்காலத்துக்கு சர்வதேச அமைப்புகள் உதவுமா, இல்லை இவர்களை மொரிசன் கம்போடியா அனுப்புவாரா?
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhs0.html

Geen opmerkingen:

Een reactie posten