[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 04:18.23 PM GMT ]
ஜனாதிபதி ஊடக பிரிவு காரியாலம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நியூயோர்க் சென்ற ஜனாதிபதி இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பவுள்ளார்.
இந்தநிலையில், வணக்கத்திற்குரிய பாப்பரசர் எதிர்வரும் வருடம் ஜனவரி 13ம் திகதி காலை 9 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி தளத்தை வந்தடையும் பாப்பரசர் திறந்த வாகனத்தின் ஊடாக கொழும்பு நீர்கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கவுள்ளார்.
இதனையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சர்வமதத் தலைவர்களுடன் பாப்பரசர் கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhu4.html
ஒன்றரைக்கோடி ரூபா தங்கம்! முழங்காலில் கட்டிக்கொண்டு கடத்த முயற்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 04:24.12 PM GMT ]
இன்று அதிகாலை நடைபெற்ற இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருப்பவர் மிஹின் லங்கா விமான சேவையின் ஊழியர் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது. 25 வயதான இவர் கண்டியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வருகின்றது.
தலா ஒரு கிலோ கிராம் வீதம் மூன்று பார்சல்களில் பொதி செய்யப்பட்ட தங்கத்தை தனது முழங்கால் பகுதியில் மறைத்து கட்டிக் கொண்டு விமான நிலையத்தை விட்டு இவர் வெளியேற முயற்சித்துள்ளார்.
எனினும் இடைநடுவில் இவர் கழிவறைக்குச் சென்றிருந்த போது, இவரின் முழங்கால் பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொதி கட்டப்பட்டிருப்பது கண்டு வேறொரு நபர் சுங்கப் பகுதியினருக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதனையடுத்து விமான சேவையின் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபாவாகும்.
இந்த வருடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தில் இதுவே அதிக பெறுமதி கொண்டது என்று சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhu6.html
ஆடு வேண்டுமா எனக் கேட்ட ஆணைக்குழு! திட்டித் தீர்த்த வயதான தாய்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 04:20.50 PM GMT ]
காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தன்னுடைய பிள்ளை தொடர்பில் முறைப்பாடு கொடுக்க வந்த வயதான தாயிடம் ஆடு வேண்டுமா என ஆணைக்குழு கேட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, ஆணைக்குழுவிற்கும், அரசாங்கம் மற்றும் ஒட்டுக் குழுக்களுக்கும் காறி முகத்தில் உமிழாத குறையாக அந்த வயதான தாய் திட்டித் தீர்த்துள்ளார்.
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 2ம் நாள் அமர்வு இன்றைய தினம் முழங்காவில் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போது ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர், காணாமல்போன தன் மகன் தொடர்பாக சாட்சியம் வழங்குவதற்கு வருகை தந்திருந்தார்.
இந்த நிலையில், அரசாங்க உதவிகள் கிடைத்துள்ளதா? என ஜனாதிபதி ஆணைக்குழு அவரிடம் கேள்வி எழுப்பியது.
இதற்கு குறித்த தாய், தனக்கு எவ்விதமான உதவிகளும் கிடைக்கவில்லை. என பதிலளித்தார். அதன் பின்னர் உங்களால் என்ன சுயதொழில் செய்ய முடியும்? என ஆணைக்குழு கேள்வி எழுப்பியதுடன், ஆடு வளர்க்க முடியுமா? என கேட்டனர்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த, குறித்த தாய், ஆணைக்குழுவையும், ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும், ஈபி.டி.பி மற்றும் புலனாய்வாளர்களையும் மிக மோசமாக காறி துப்பாத குறையாக திட்டித் தீர்த்ததுள்ளார்.
அத்துடன், என்னுடைய பிள்ளையை கொன்றுவிட்டார்கள், என் பிள்ளையின் உயிருக்கு 2 ஆடு சமமாகுமா? என கேள்வி எழுப்பியதுடன், இறைவனின் நீதி ஒன்று இருக்கின்றது. அது உங்களை அழிக்கும்.
இல்லையேல் கண்ணகி மதுரையை எரித்தால்போல் நான் உங்களை எரிப்பேன் என சாபமிட்டுச் சென்றுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhu5.html
Geen opmerkingen:
Een reactie posten