தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 september 2014

ஜெயலலிதாவுக்கு சிறையில் வயிற்று வலி!



எங்கள் பாடசாலையை காப்பாற்றுங்கள்: அந்தூர் தேசிய பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 10:43.26 AM GMT ]
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்களால் திங்கட்கிழமை ஏற்பாடு செய்த ஆர்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்கள் பாடசாலை பிரதான கதவை மூடி பாடசாலை முன்பாக பாரிய ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களுக்குரிய பாடசாலையில் கணித, விஞ்ஞான ஆய்வு கூடமும், கட்டடமும் பறிமுதல் செய்யப்பட்டு அருகாமையில் உள்ள ஆயிஷா பெண்கள் பாடசாலைக்கு செல்லவுள்ளதனால் எதிர்காலத்தில் நீண்ட வரலாற்றினை கொண்ட அந்நூர் பாடசாலையில் கணித, விஞ்ஞான துறைகள் உருவாகி விட கூடாது என்பதற்காகவே இந்த நாசகார வேலைத்திட்டம் நடைபெறுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பிரதான கோரிக்கையாக காணப்பட்டது.
மேலும் அயல் ஊர்களான ஓட்டமாவடி, மீராவோடையில் உள்ள பாடசாலைகளில் விஞ்ஞான, கணித துறைகளை வளர்ப்பதற்கான முயற்சிகளும், நடைமுறைகளும் மிகக் கூடுதலாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், ஆரம்பத்தில் ஒன்றான இருந்த பாடசாலையானது ஆண்கள், பெண்கள் என திட்டமிட்டு பிரிக்கப்பட்ட பிற்பாடே பின்னடைவை சந்தித்து வருவதாகவும் உணர்ச்சிகரமான சுட்டிக் காட்டிய மாணவர்கள் இது சம்பந்தமான துண்டுப் பிரசுரம் ஒன்றிணையும் வெளியிட்டனர்.
மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக உடனடியாக பாடசாலைக்கு முன்னாள் உள்ள வீதிக்கு விரைந்து வந்த வாழைச்சேனை பொலிஸ் அதிகாரிகள் பாடசாலை அதிபர் பிர்தௌலுடனும்,ஆசிரியர்களுடனும், பொதுமக்களுடனும் இதுசம்பந்தமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
ஆனாலும் வலய கல்விப் பணிப்பாளர் உடனடியாக இதற்குரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் பலர் காயமுற்றனர்.
இதில் உயர்தர மாணவன் ஒருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெற்றோர்களே உங்கள் சிந்தனைக்கு என தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரம் மாணவர்களால் இதன்போது வெளியிடப்பட்டது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாங்கள் உங்கள் செல்வங்கள், இவ்வூரின் எதிர்காலம் எங்கள் கையில் உள்ளது.
எங்களை உருவாக்கும் எங்கள் பாடசாலை தற்போது பாரிய அபாயம் ஒன்றில் உள்ளது.
எங்களுக்கு உரிய எங்கள் பாடசாலையின் கணித, விஞ்ஞான ஆய்வு கூடம் பறிமுதல் செய்யப்படுகின்றது.
எதிர்காலத்தில் எங்கள் பாடசாலையில் கணித, விஞ்ஞான வகுப்புக்கள் உருவாகி விட கூடாது என்பதற்காகவே இந்த வேலைத் திட்டம் நடைபெறுகின்றது.
கணித, விஞ்ஞான துறையை வளர்ப்பதற்காக எந்த முயற்சியும் செய்யப்படவில்லை.மாறாக அதனைத் தடுக்கும் சதி பகிரங்கமாக அரங்கேற்றப்படுகின்றது.
ஆனால் எங்கள் ஊர்களான ஓட்டமாவடி, மீரவோடை போன்ற பிரதேசங்களில் கணித விஞ்ஞான துறையை வளர்ப்பதற்கான வேலைத்திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகின்றது.
எமது பாடசாலை பிரிக்கப்பட்டதன் பின் பாரிய பின்னடைவு உருவாகி ஒரு ஆரம்ப பாடசாலை அமைப்பதற்கு எவ்வளவு சிக்கல் ஏற்பட்டது என்பதை யாவரும் அறிவர்.
தொகுதிப் பாடங்கள், இணைப்புப் பாடங்கள், கற்கும் மாணவர்கள் இடமின்மையால் பிரதான மண்டபம், நூலகம், கணனி அறை என்பவற்றை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் எம்மிடமிருக்கும் பாரிய கட்டடிடம் பறிபோனால் இன்னும் பிரச்சனை அதிகமாகும்.
பாடசாலைக்கு எனத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை அபிவிருத்திக் குழு பாடசாலையை விருத்தி செய்வதில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
அதற்கு எதிர்மாறாக செயற்படும் அதிசயம் இந்த பாடசாலையில் நடந்து கொண்டிருக்கின்றது.
எனவே பெற்றோர்களே, சமூக நலன் விரும்பிகளே, மௌலவிமார்களே, புத்திஜீவிகளே நீங்களும் இப்பிரச்சினையில் தலையீடு செய்து இப்பாடசாலையின் வளத்தைப் பாதுகாப்பதோடு ஆயிஷா பெண்கள் வித்தியாலயத்திற்கு தேவையான வளங்களை புதிதாக பெற்றுக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgpz.html
ஜெயலலிதாவுக்கு சிறையில் வயிற்று வலி!
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 11:55.09 AM GMT ]
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு லேசான வயிற்று வலி ஏற்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதித்தது.
இதையடுத்து ஜெயலலிதா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில், 23 ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கைதி எண்.7402 வழங்கப்பட்டுள்ளது.
நேற்று காலை அவர், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் குடித்துவிட்டு நடை பயிற்சி மேற்கொண்டார். அதன் பிறகு, அவரது உதவியாளர் வெளியில் இருந்து வாங்கி வந்த இட்லி-வடையை சாப்பிட்டார். மதியம் உணவு சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுத்த ஜெயலலதா சற்று சோர்வாக காணப்பட்டார்.
நேற்று மாலை ஜெயலலிதாவுக்கு திடீரென சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சிறை ஊழியர்களிடம் தனக்கு சர்க்கரை அளவு அதிகரித்து விட்டது, கண் பார்வை மங்குகிறது என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து உடனடியாக சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு ஜெயலலிதா அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அங்கு, அவருக்கு சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது. பிறகு டாக்டர்கள், ஜெயலலிதா உடல் நிலை நன்கு திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
இதையடுத்து, சிகிச்சை பெற்ற சிறிது நேரத்தில் ஜெயலலிதா மீண்டும் அவரது அறைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்.
இதற்கிடையே சசிகலா தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதால் அவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.
அதேநேரம், இளவரசியும் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூற அவரும் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்.
அவர்கள், தங்களுக்கு புதிய வகை உணவு ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறியதையடுத்து, அவர்களுக்கு பப்பாளி, எலுமிச்சை மற்றும் பழ வகைகள், பால் கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மூவரும் பழ வகைகளை மட்டுமே சாப்பிட்டுள்ளனர்.
இன்று ஜெயலலிதா, காலை 5.30 மணிக்கு எழுந்து நடைபயிற்சி முடித்திருக்கிறார். அதன்பின் அவர், வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட உணவை சாப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவை சந்தித்து பேச இன்று நிறைய பேர் மனு கொடுத்திருந்தனர். ஆனால், எல்லாரையும் ஜெயலலிதா சந்திக்கவில்லை.
முதலில் அவர், அ.தி.மு.க. வழக்கறிஞர்களை சந்தித்து பேசினர். ஜாமீன் மனு தாக்கல் செய்வது குறித்து அவர்களுடன் விவாதித்தார்.
ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள அறை முன்பு பாதுகாப்புக்காக பெண் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். .
ஜெயலலிதாவுக்கு பெண் கைதிகள் அணியும் வெள்ளை நிற சேலை வழங்கப்பட்டது. ஆனால் அந்த சேலையை ஜெயலலிதா அணியவில்லை.
வி.ஐ.பி. என்பதால் இதை அவரது முடிவுக்கே சிறைத்துறை அதிகாரிகள் விட்டுவிட்டனர்.
ஜெயலலிதா பயன்படுத்த உடைகள் மற்றும் தேவையான பொருட்கள் ஒரு வானில் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த வான், பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துக்குள் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் இருந்து தனக்கு தேவையானவற்றை ஜெயலலிதா எடுத்து பயன்படுத்தி வருகிறார்.
ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள அறை 12க்கு 18 அடி சுற்றளவு கொண்டது. அதில், நாற்காலிகள், பிரிட்ஜ், டி.வி. வசதி செய்யப்பட்டுள்ளது.
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் 2,100 பேர் வரை தான் அடைத்து வைக்க வசதி உள்ளது. ஆனால் தற்போது, அங்கு 4,200 பேர் வரை அடைக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgp0.html

Geen opmerkingen:

Een reactie posten