பெங்களூரு: “எங்களை, ஜெயலலிதா புறக்கணித்தாலும், அவரை சிறையில் அடைத்தது அதிர்ச்சியாக இருக்கிறது,” என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூத்த சகோதரர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், டி.நரசிபுரா தாலுகா, ஸ்ரீரங்கராஜபுராவில் வசித்து வருபவர் வாசுதேவன், 78. இவர், ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் முதல் மனைவி ஜெயாவின் மகன். இவருடன் பிறந்தவர் ஷைலஜா. ஜெயலலிதாவின் தாயார் சந்தியா. இவர் ஜெயராமின் இரண்டாவது மனைவி. ஜெயலலிதா உடன் பிறந்தவர் ஜெயகுமார். இவர்களில், ஷைலஜா பெங்களூரில் வசிக்கிறார்.
தன் நினைவுகள் பற்றி வாசுதேவன் கூறியதாவது:ஜெயகுமார் பற்றி, எனக்கு எதுவும் தெரியாது. எங்களுடைய தாத்தா ரங்காச்சார், மைசூரு அரண்மனையில், நான்காம் கிருஷ்ணராஜ உடையார் மன்னராக இருந்த போது, அரண்மனை வைத்தியராக இருந்துள்ளதாக தெரிவித்தனர்.ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், கணக்கில் காட்டப்பட்ட நகைகளில், சில நகைகள், என் தாயார் திருமணத்தின்போது, கிருஷ்ணராஜ உடையார் அன்பளிப்பாக கொடுத்தது.
jaannan
நாங்கள், வறுமையில் வாடுவது அவருக்கு தெரியும்.நாங்கள், ஜெயலலிதாவின், உறவினர்கள் என்பது பத்திரிகை மூலம் வெளியில் தெரிந்தபோது, எங்கள் மீது, மானநஷ்ட வழக்கு ஒன்றை, சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் தொடர்ந்ததால், மேற்கொண்டு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.என் மகன் விபத்து ஒன்றில் இறந்ததையடுத்து, என் மனைவியும் இறந்து விட்டார்.
தற்போது, கிராம மக்கள் உதவியுடன் தனிமையில் வசிக்கிறேன். கர்நாடகா அரசு, மாதந்தோறும் அளிக்கும், 400 ரூபாய் பென்ஷனில் காலம் தள்ளி வருகிறேன்.எங்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்து, எங்களை ஜெயலலிதா புறக்கணித்தாலும், சொத்து குவிப்பு வழக்கில், அவருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கேட்டதும், அதிர்ச்சியாக இருந்தது.

தமிழகத்தில் ‘அம்மா’ என்ற பெயருடன் பிரபலமாக விளங்கினாலும், சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்று தான். அவரது அரசியல் வாழ்க்கையில் நிச்சயமாக, பின்னடைவு தான். இருந்தாலும், அவரை சிறையில் அடைத்ததை, நாங்கள் விரும்பவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.