தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 september 2014

ஊவாவில் முதலமைச்சர் ஆனார் ஜனாதிபதியின் பெறா மகன் (படங்கள் இணைப்பு)

பிரான்ஸ் சென்ற கப்பலில் தீ! சிக்கிக்கொண்ட தமிழர்கள் !
நேற்றைய தினம்(29) பிரித்தானியா டோவரில் இருந்து பிரான்ஸ் நோக்கிச் சென்ற கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 337 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கப்பலின் இயந்திர அறையில் முதலில் தீ மூண்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு காரில் செல்ல பலர், இந்தக் கப்பலை தான் பாவிக்கிறார்கள். கார்களை ஏற்றக்கூடிய இந்தக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால், 2 தமிழ் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பிரான்சில் இருந்து லண்டன் வந்து மீண்டும் பிரான்ஸ் திரும்பிக்கொண்டு இருந்தவேளை இச் சம்பவம் இடம்பெற்றதாக அவர்கள் கூறுகிறார்கள்.

கரும் புகை எழுந்ததாகவும், ஆபத்து மணிகள் அடிக்கப்பட்டு, பின்னர் பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் இயந்திர அறையில் மூண்ட தீயை உடனடியாக உதவியாளர்கள் அணைத்துள்ளார்கள்.
30 Sep 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1412070298&archive=&start_from=&ucat=1&
ஊவாவில் முதலமைச்சர் ஆனார் ஜனாதிபதியின் பெறா மகன் (படங்கள் இணைப்பு)
ஊவா மாகாண முதலமைச்சராக சசீந்திர ராஜபக்‌ஷ இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இன்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விலேயே அவர் முதலமைச்சராக சந்திப்பிரமாணம் செய்துகொண்டார்.

இவர் ஜனாதிபதியின் சகோதரரும் சபாநாயகருமான சமல் ராஜபக்‌ஷவின் புதல்வராவார். 2009 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை ஊவா மாகாண முதலமைச்சராக கடமை புரிந்த சசீந்திர ராஜபக்‌ஷ மீண்டும் ஊவா மாகாண புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார். ஊவா மாகாண சபைக்கான புதிய அமைச்சர்களும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டனர். கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற ஊவா மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் 19 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




30 Sep 2014

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1412075095&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten