தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 september 2014

கிளிநொச்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை! படையிருக்கு எதிராக அதிகளவான முறைப்பாடுகள்!



காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வுகள் கிளிநொச்சி- முழுங்காவில் பகுதியில் இன்றைய தினம் நடைபெற்றுள்ள நிலையில் 39 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதிகளவான முறைப்பாடுகள் படையிருக்கும், கடற்படையினருக்கும் எதிரான முறைப்பாடுகளாக அமைந்துள்ளன.
மேலும் குறித்த அமர்வு நாளைய தினமும் நடைபெறவுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 9மணி தொடக்கம் மாலை 5.30மணிவரையில் மேற்படி அமர்வு நடைபெற்றிருந்தது.
இதன்போது 2006ம் ஆண்டு தொடக்கம் கிளிநொச்சி மாவட்டத்தை மையப்படுத்தி போர் உச்சம் பெற்றிருந்த சமயம், மக்கள் எதற்கா க இடம்பெயர்ந்தார்கள்? எனவும், 2009ம் ஆண்டு போர் நிறைவடைந்ததன் பின்னர் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மக்கள் சென்றிருந்த சமயம் மக்களுடன் புலிகளும் உள்ளே வந்தனரா? என்பது தொடர்பாகவும் ஆணைக்குழு மக்களிடம் தீவிரமான விசாரணை நடத்தியிருந்தது.
எனினும் மேற்படி விசாரணைகளின் போது தாம் இடம்பெயர்ந்தமைக்கு காரணம் படையினரின் ஷெல் மற்றும் விமானக் குண்டுவீச்சுத் த hக்குதல்களே என மக்கள் குற்றம்சாட்டியதுடன், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும்போது தம்மோடு புலிகள் வரவில்லை. எனவும், புலிகள் தம்மை தடுக்கவில்லை. எனவும் மக்கள் கூறியுள்ளனர்.
அண்மையில் மேற்படி ஆணைக்குழுவிற்கு ஒத்தாசை மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கும் நோக்கில் சர்வதேச நிபுணர்கள் 3பேர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதுவரையில் நடைபெற்ற அமர்வுகளில் கேட்காத மேற்படி இரு கேள்விகளை ஆணைக்குழு இம்முறை மக்களிடம் கேட்டுள்ளது.
இதேபோன்று போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது உறவுகளை தொலைத்தவர்கள் சிலர் சாட்சியம் வழங்கினர்.
இதன்போது போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், இரணைப்பாலை, இரட்டைவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் மீது படையினர் இடையறாத ஷெல் வீச்சு தாக்குதல் நடத்தியமை மற்றும் சரமாரியான துப்பாக்கிச் சூடு நடத்தியமை தொடர்பில் மக்கள் சுட்டிக்காட்டியதுடன், இவ்வாறான பல காரணங்களினால் திக்கு திசை தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த சன நெரிசல் மத்தியில் தங்கள் உறவினர்களை, கைவிட்டமை தொடர்பில் மக்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும் இவ்வாறான நிலமையின்போது மக்கள் இறந்தனரா? அவ்வாறான ஷெல் மற்றும் துப்பாக்கிச் சூடு எப்பகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டது? மக்களோடு புலிகள் நின்ற னரா போன்ற கேள்விகளை ஆணைக்குழு மக்கள் மீது தொடுத்திருந்தது.
இதற்கு மக்கள் பதிலளிக்கையில் ஷெல் மற்றும் துப்பாக்கிச் சூடு படையினர் பக்கமிருந்து வந்தமையினையும், தங்களோடு புலிகள் நின்றிருக்கவில்லை. என்பதனையும் மிக ஆணித்தரமாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
மேலும் போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளால் கட்டாயத்தின் பெயரில் பிடித்துச் செல்லப்பட்ட பலரை தாங்கள் பின்ன ர் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் காயமடைந்த நிலையிலும், படையினரால் தடுத்துவைக்கப்பட்ட நிலையிலும் கண்டதாகவும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் பலர் சாட்சியமளித்துள்ளனர்.
இந்நிலையில் மேற்படி அமர்வு நாளைய தினமும் முழங்காவில் மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளதுடன், அடுத்து பூநகரி பகுதியிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVho6.html

Geen opmerkingen:

Een reactie posten