தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 september 2014

ஜெயலலிதா அவசர ஜாமீன் மனு மீது நாளை விசாரணை!


ஊவா மாகாண தமிழ் முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தை நிராகரித்துள்ளனர்: வேலாயுதம்
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 10:05.34 AM GMT ]
ஊவா மாகாண தமிழ் முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தை நிராகரித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணத்தில் வாழ்ந்து வரும் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து இம்முறை அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். அரசாங்கத்திற்கு சிறந்த பாடமொன்றை புகட்டியுள்ளனர்.
நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்வதனால் வாழ்வதற்காக உரிமையே பாரியளவில் சவாலுக்குள்ளாகியுள்ளது.
தேர்தல் வெற்றியை இலக்கு வைத்து அரசாங்கம் பாரியளவில் நிவாரணங்களையும் அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுத்தது. அதேநேரம் அரசாங்கம் பாரியளவில் தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபட்டது.
எனினும் இந்த அழுத்தங்களுக்கு எதிராக ஊவா மாகாண தமிழ் முஸ்லிம் மக்கள் சிறந்த பாடமொன்றை அரசாங்கத்திற்கு புகட்டியுள்ளனர்.
தமிழ் முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தை வேண்டாம் என்றே குறிப்பிடுகின்றனர்.
சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாஷைகளை ஓரளவிற்கேனும் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலான 13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அடிக்கடி குரல் கொடுக்கும் விமல் வீரவன்ச தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் எதிராக குரல்கொடுக்கும் இனவாத அமைப்புக்களுடன் இணைந்து கொண்டு செயற்படுகின்றார்.
நாட்டின் தேசிய இனப்பிரச்சினை விவகாரங்களில் இந்தியாவும் தென் ஆபிரிக்காவும் தலையீடு செய்யக் கூடாது எனக் கோரும் அதிகாரம் விமல் வீரவன்சவிற்கு கிடையாது.
பல்வேறு இன மக்களிடையே ஐக்கியம் ஏற்படுவதனை எதிர்க்கும் இவ்வாறான நபர்களின் நடவடிக்கைகளினால் தமிழ் முஸ்லிம் மக்கள் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை நாடுவதாக வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgu5.html


யாழ். மீனவர் படகில் ஒன்றரை கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது- தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 10:10.19 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் மீனவர் படகொன்றில் இருந்து ஒன்றரைக் கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மாதகல் பிரதேசத்தில் மீனவர் படகொன்றில் மீன்வலைகளின் அடியில் இந்த தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 86 லட்சம் ரூபா என்று தெரிய வந்துள்ளது.
இந்தியாவுக்கு கடத்துவதற்காக இந்த தங்கம் எடுத்துச் செல்லப்பட இருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அத்துமீறிய தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்
தமிழக மீனவர்கள் 16 பேர் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகர் மற்றும் மாதகல் கடல்பகுதியில் இவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோதே கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது இவர்கள் பயன்படுத்திய 4 படகுகளும் கைப்பற்றப்பட்டன.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் 76 மீனவர்களையும் விடுவிக்க மஹிந்த ராஜபக்ச உத்தரவு
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 76 தமிழக மீனவர்களையும் விடுவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
இந்த தகவலை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகமும் உறுதி செய்துள்ளது.
இந்திய பிரதமரை நியூயோர்க்கில் சந்தித்த பின்னரே இந்த முடிவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எடுத்துள்ளார்.
குறித்த மீனவர்கள் யாவரும் இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு திகதிகளில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்களாவர்.
எனினும் அவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgu6.html


தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு! இருவர் காயம்
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 10:15.47 AM GMT ]
தெஹிவளையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
தெஹிவளை பெரேரா மாவத்தையில் இந்தச் சம்பவம் இன்று நண்பகல் அளவில் நடைபெற்றுள்ளது.
காரில் வந்த ஒரு மர்ம நபர் இரண்டு இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் ஒருவர் மன்ன மஞ்சு என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான நபர்கள் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்களா என்பது குறித்தும் பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgu7.html


ஜெயலலிதா அவசர ஜாமீன் மனு மீது நாளை விசாரணை
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 10:30.47 AM GMT ]
ஜெயலலிதாவின் ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனுவை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது கர்நாடக நீதிமன்றம்.
இதையடுத்து ஜெயலலிதா வழக்கறிஞர் குமார், நாளையே விசாரிக்கக் கோரி ஜெயலலிதா தரப்பில் அவசர மனு தாக்கல் செய்தார்.
கர்நாடக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் தேசாயிடம் வழக்குரைஞர் குமார் மனுவை அளித்தார்.
இதற்கிடையில், கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஜான் மைக்கேல் டி.குன்ஹா 15 நிமிடங்கள் ஆலோசனை செய்தார்.
பின்னர், ஜெயலலிதாவின் ஜாமின் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கர்நாடகா ஐகோர்ட்டில் ஒரு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை, ஐகோர்ட் பதிவாளர் ஏற்றுக் கொண்டதை அடுத்து, ஜெயலலிதாவின் ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgvy.html

Geen opmerkingen:

Een reactie posten