வடக்கில் இன்னும் சுமார் 2500 வரையான விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் மறைந்திருப்பதாக அரசாங்கம் புதுக்கதை கட்டிவிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசாங்கத்தின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது.
நாட்டில் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் முன்னெடுக்காததே அதற்கான காரணமாகும்.
இந்நிலையில் எதிர்வரும் தேர்தல்களில் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தயவுடன் வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ள அரசாங்கம் நாடியுள்ளது.
அதன் முதற்கட்டமாக வடக்கு மாகாணத்தில் சுமார் 2500 வரையான விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் மறைந்து வாழ்வதாக அரசாங்கமே புரளியொன்றைக் கிளப்பி விட்டுள்ளது.
மேலும் எதுவித புனர்வாழ்வுக்கும் உட்படுத்தப்படாத இவர்கள், எதிர்வரும் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அரசாங்கம் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.
வடக்குகிழக்கில் விடுதலைப்புலிகள் மீண்டும் இணைவதாக வெளியாகும் செய்தி பொய்!- இந்தியா
இலங்கைக்கு இந்தியா 1.6 பில்லியன் டொலர்களை போருக்கு பின்னர் அபிவிருத்தி உதவிகளாக வழங்கியுள்ளது.
எனினும் அதன் மூலமான முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக மீண்டும்; ஒருமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதாக் கட்சியின் சர்வதேச விவகார அழைப்பாளர் விஜய் ஜொலி இந்த கருத்தை இலங்கையின் ஆங்கில இதழ் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே இதே கருத்தை இந்திய உயர்ஸ்தானிகரும் கொழும்பில் வைத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமது உதவிகள் இலங்கையில் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையிலேயே வழங்கப்பட்டது. எனினும் இலங்கை அரசாங்கம் அதில் தோல்வி கண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மோடி அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான கொள்கை புதிய போத்தலில் பழைய வைன் என்ற அளவில் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையின் வடக்குகிழக்கில் விடுதலைப் புலிகள் மீண்டும் இணைகிறார்கள் என்ற கூறப்படுவதில் எவ்வித உண்மைகளும் இல்லை என்றும் ஜொலி குறிப்பிட்டார்.
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுடன் தொடர்புகளை கொண்டிருப்பது தவறு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் இலங்கை பிரசன்னம் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் அல்ல. எனினும் இந்தியாவின் சீனாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானிப்பதாக ஜொலி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgr0.html

Geen opmerkingen:
Een reactie posten