தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 september 2014

சர்வதேசத்திற்கு பதிலளிக்கும் கட்டாயத்திற்குள் அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது: சம்பந்தன்

ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 8 ஆம் திகதி
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 08:18.23 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டாவது தவணைக்கான பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நவம்பர் 19ம் திகதி இரவு அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வருடம் ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்த அதிகம் வாய்ப்பிருப்பதாக தெரியவருகிறது.
எனினும் எவரது நிலைப்பாட்டின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்பது தெரியவில்லை.
எவ்வாறாயினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக கொழும்பில் அலுவலகம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhs2.html
ஐ.தே.கட்சி எம்.பி பாலித ரங்கே பண்டார கைது - பிணையில் விடுதலை!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 08:33.47 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டரா கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், கருவலகஸ்வெவ பொலிஸாரினால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கருவலகஸ்வெவ பிரதேச சபையின் தலைவர் நீல் வீரசிங்க மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பாலித ரங்கே பண்டாரவுக்கு பிணை
கருவலகஸ்வெவ பிரதேச சபையின் தலைவர் நீல் வீரசிங்கவைத் தாக்கியதாக கருவலகஸ்வெல பொலிஸாரால் இன்று(28) கைதுசெய்யப்பட்ட, ஐ.தே.கவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார உட்பட மேலும் இருவரை தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் புத்தளம் நீதவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
கருவலகஸ்வெவ பிரதேச சபையின் தலைவர், பாலித ரங்கே பண்டார தன்னனைத் தாக்கியதாக, கருவலகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் இன்று காலை செய்த முறைப்பாட்டையடுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பொலிஸார், சந்தேகநபர்களை இன்று பகல் புத்தளம் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சுனில் ஜயவர்தன முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, அவர்களைப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhs3.html

சர்வதேசத்திற்கு பதிலளிக்கும் கட்டாயத்திற்குள் அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது: சம்பந்தன்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 08:33.48 AM GMT ]
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர், பொதுச்செயலாளரை வரவேற்கும் நிகழ்வும் மற்றும் இரா.சம்பந்தன் அவர்களை பாராட்டும் நிகழ்வும் நேற்று அம்பாறையில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சியினரின் ஏற்பாட்டில் நேற்று மாலை 4.00 மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்வில், அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பிரதேச சபை வீதியில் இருந்து அதிதிகள் மலர் மாலை அணிவித்து கலாசார மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.சுமத்திரன், ஈ.சரவணபவன், பா.அரியநேத்திரன் ஆகியோரும், தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் கி.துரைராஜசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட தலைவருமான வில்லியம் தோமஸ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், மு.இராஜேஸ்வரன், கல்முனை மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் அ.அமிர்தலிங்கம் மற்றும் மாநகரசபை , பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கட்சித் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கூட்மைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் உரையாற்றுகையில்,
இலங்கை அரசு தமிழர் பிரச்சினைகளில் இதுவரை காலமும் அக்கறையுடன் நடக்கவில்லை நடந்திருந்தால் நேர்மையாக பக்குவமாக இலங்கைக்குள் தீர்வினை காண்பதற்கு நாங்கள் தயாராக இருந்திருப்போம்.
எமது மக்களின் அரசியல், பொருளாதாரம், கலை, கலாசாரம் போன்ற தேவைகளை நிறைவேற்ற வேண்டிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால் இணங்கி சென்றிருப்போம். ஆனால் அவ்வாறு இல்லை.
நாங்கள் இன்று இக்கட்டான காலகட்டத்தில் நிற்கின்றோம். தமிழ் மக்கள் பிரச்சினை இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேசம் எமது தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்று கிடைக்க வேண்டும் என்பதிலும், போர் இடம் பெற்ற காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவற்றிக்கு சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனவும் என எடுத்துரைத்து.
விசாரணைகள் இன்று நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இதில் சர்வதேசம் கரிசனையாகவும் இருக்கின்றது.
இலங்கை அரசாங்கம் அனைத்தையும் தட்டிக்கழிக்கும் நிலைமாறி பதிலளிக்கக் கூடிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எமது பிரச்சினையில் நீண்ட காலமாக அக்கறைகாட்டி வந்த இந்திய மத்திய அரசு தற்பொழுது இலங்கைத் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளது.
நாங்கள் இதனை கருத்தில் கொண்டு மிகவும் துரிதகதியில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். இதற்காக மக்கள் எம்முடன் இணைந்து செல்கின்றனர்.
இந்த பிரச்சினைக்கு ஏதோ ஒரு வகையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய நிரந்தர தீர்வினை பெறுவதற்காக விரைவாக செயற்பட வேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு கூடுதலான பிரச்சினைகள் இருக்கின்றது. இதனை மறுப்பதற்கில்லை.
அம்பாறையில் 1981 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்டதை விட சற்று குறைவாகவே தமிழ் மக்களில் விகிதாசாரம் தற்பொழுது இருக்கின்றது.
அந்த வகையில் 1981 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் 42 விகிதமாகவும், சிங்களவர்கள் 38 விகிதமானவர்களும், தமிழர்கள் 20 வீதமானவர்களும் இருந்தார்கள். ஆனால் தற்பொழுது தமிழர்கள் 18 வீதமாக குறைவடைந்து காணப்படுகின்றனர்.
வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு நிரந்தரமான நடைமுறை படுத்தக் கூடிய தீர்வொன்று எட்ட வேண்டுமாக இருந்தால் இயன்றளவு இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை அரவணைத்து அந்த பாதையில் செல்ல வேண்டிய தேவை எமக்கு உண்டு.
இவற்றுக்காக முஸ்லிம் தலைவர்களுடன் பேசுவோம் நியாயத்தின் நீதியின் அடிப்படையில் பேசுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.
அம்பாறைத் தொகுதி 1977 ஆண்டு உருவாக்கப்பட்டது. நிரந்தர தீர்வொன்றின் மூலம் இந்த தொகுதி பிரிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் உங்கள் விகிதாசாரத்தினை 33 வீதங்களுக்கு மேல் பெருக்க வேண்டும். அவ்வாறு அதிகரிக்கின்ற பட்சத்தில் இந்த தொகுதியில் உங்கள் ஆதிக்கம் நிலைநாட்டப்படுவதற்கு வாய்ப்புண்டு.
இதனை தவிர அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் உரிமையை உறுதி செய்வதற்காக ஒருவரோடு ஒருவர் ஒத்து செல்ல வேண்டும்.
பல நாடுகளிலே ஒரு கொள்கை இருக்கின்றது அதாவது ஒரு பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் அடிப்படையில் இரட்டை பெரும்பான்மை உருவாக்கப்படுவதன் ஊடாகத்தான் இதனை மேற்கொள்ள முடியும்.
இதனை அம்பாறை மாவட்டத்தில் மாத்திரமின்றி வடகிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு பயன்படுத்தப்படுவது ஒரு முறையாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.
இதனால் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை பாதுகாக்க வேண்டியும் ஏற்படலாம். அம்பாறை மாவட்ட மக்கள் இதில் நீங்கள் கரிசினையாக இருப்பனை நாங்கள் அறிகின்றோம். இவ் விடயம் பற்றி நிபுணர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
இன்று சர்வதேச அங்கீகாரத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது. தமிழ் மக்கள் பிரச்சினை சம்பந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன்தான் போச வேண்டும் என்று சர்வதேசம் கூறுமளவுக்கு எமது மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக கூட்டமைப்பு உள்ளது என்பதனை நிருபித்துக் காட்டியமைதான்.
இதனால் தான் அந்த அந்தஸ்து இன்று எமக்கு கிடைந்துள்ளது. இதனை தெடர்ந்து எதிர்வருங்காலங்களில் நிரூபித்துக் காட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மகிந்த குழம்பிப் போயுள்ளார்: இரா.சம்பந்தன் - தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் வரவேற்கும் நிகழ்வு!
சமூக,பொருளாதார , கலாச்சார உரிமைகள் மற்றும் மனித உரிமைகள், மக்களுடைய பாதுகாப்பு சம்பந்தமாக சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இதனை எவரும் மறுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சின் புதிய தலைவர் மாவை.சேனாதிராசா, மற்றும் செயலாளர் கி.துரைராசசிங்கம் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள துளசி மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில், அதன் தலைவர் கி.சேயோன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய கலாச்சாரம், பாரம்பரியம், மரபுகள், போன்றவற்றிற்கு மாறாக நிலைமைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவற்றினை சர்வதேச சமூகம் மாற்றியமைத்து நல்லணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற பாதையில் நாங்கள் முன்னேறுவதற்கு, அனைவரும் உதவ வேண்டும். இதுபற்றி ஜனாதிபதி, சர்வதேசத்திடம் கூறியிருக்கின்றார்.
ஆனாலும் அதனுடைய விளத்தை அவர் கூறவில்லை. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்களை மீறியதன் காரணமாகத்தான், இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணை ஐக்கிய நாடுகள் சபையில் நறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தவிடயம் தொடர்பாக தெளிவு வரவேண்டியது அவசியம். ஐக்கிய நாடுகள் பிரேரணையின் அடிப்படையில் இலங்கை அரசு ஏற்றுக் கொண்ட பல விடயங்களிலிருந்து தற்போது அதிலிருந்து விலகி வேறு வழியில் முயற்சிக்கின்றார்கள் என கருதப்படுகின்றது.
சமீபகாலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறுகையில், இந்த நாட்டில் சிறுபான்மையினம் என்று எவரும் இல்லை. இந்த நாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும், ஒரே மக்கள். ஆனால் ஒரு வித்தியாசம்தான் இருக்கின்றது.
இந்த நாட்டை நேசிப்பவர்கள், நாட்டை நேசிக்காதவர்கள் என இரண்டு பிரிவினர்கள்தான் உள்ளார்கள். இந்த வேற்றுமையினைத்தவிர வேறு, வேற்றுமைகள் எதுவும் இங்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய- இலங்கை ஒப்பதந்தத்தில், இலங்கை நாட்டில் வெவ்வேறு மக்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கது தனித்துவத்தைப் பேணுவதற்கும் உரிமையுண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் ஒவ்வாருவரும் அவர்கள் அனைவரும் அவர்களது தனித்துவத்தினைப் பேணுவதற்கு உரிமையுண்டு. அந்த அடிப்படையில் இந்த நாட்டில் ஆட்சி அமைய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் சமீப காலமாக சிறுபான்மையினம் இந்த நாட்டில் இல்லை என கூறிய ஜனாதிபதி, இந்த நாட்டில் பெரும்பான்மையினம் இல்லை என்று சொல்லவில்லை.
அரசியல் தீர்வு காணாமல் வடகிழக்கில் பெரிதளவில் இராணுவத்தினரைக் குடியேற்றி, பெரும்பான்மையினத்தவர்களைக் குடியேற்றி அவர்களுக்கு ஏற்ற வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது.
ஆனால் தமிழ் மக்கள் புனர்வாழ்வு இல்லாமல், குடியிருக்க இடம் இல்லாமல் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டால் இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ற விடயம் இல்லமல் போய்விடும்.
துரதிஸ்டவசமாக நாங்கள் கிழக்கு மாகாண சபையினைக் கைப்பற்றவில்லை. இதனை நாங்கள் செய்திருக்கலாம். அதனை நாங்கள் செய்யத் தவறிவிட்டோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய ரீதியில் பலம் பொற்றிருக்கின்றது. தற்போது முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம்.
எதிர்காலத்தில் முக்கிய தீர்வுவை நோக்கவுள்ளோம். எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தோர்தல் இடம்பெறலாம்.
எமது மக்களின் போராட்டம், நியாயமான போராட்டம். இதற்கு நீதி வழங்கப்பட வேண்டும். இதனை அங்கீகரிக்க வேண்டும் என சர்வதேச சமூகம் முயற்சிக்கின்து.
ஆனால் தீர்வு காணப்படாமல் அது தொடர முடியாது என நாங்கள் நிரூபிக்க வேண்டும். எமது மக்கள் தமது சாத்வீகப் போராட்டத்தில் கூலமாக நிருபிக்க வேண்டும்.
இவற்றினை எதிர் வருகின்ற தேர்ததில் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை எவ்வாறு பலப்படுத்தலாம், என்ற சிந்திக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம். சாத்வீகப் போராட்டம் நடைபெறுகின்றபோது கட்சி ரீதியாகப் பலப்படுத்தப்படல் வேண்டும்.
எமது முஸ்லிம் சகோதரர்கள் இணைந்து செயற்பட வேண்டும். இவ்வாறு பலரது அதரவுகளையும் பெற்றுக் கொள்கின்றபோது சர்வதேசத்தின் ஆதரவும், பலமும் அதிகரிக்கும். ஆனால் தற்போது இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச குழம்பிப் போயிருக்கின்றார் என அவர் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர், பொதுச்செயலாளரை வரவேற்கும் நிகழ்வும்
இரா.சம்பந்தன் அவர்களை பாராட்டும் நிகழ்வும் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி நடாத்திய பாராட்டு நிகழ்வும், வரவேற்பு பெருவிழாவும், இன்று 27.09.2014 சனிக்கிழமை காலை 9.00 மணிக்குகல்லடி மணிக்கூட்டுக்கோபுரத்தில் இருந்து ஆரம்பமாகியதுடன் அதிதிகள் மலர்மாலை அணிவித்து துளசி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித்தலைவர் கி.சேயோன் தலமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராட்டு பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் எட்டாவது தலைவராக பணியாற்றி தானாகவே விலகிக்கொண்டவரும் த.தே.கூட்டமைப்பின் தன்னிகரற்ற தலைவராகவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடத்தின் தலைவராகவும் இராஜதந்திர பணிகளை முன்னெடுக்கும் பெரும் தலைவர், இரா.சம்பந்தனிற்கு பொன்னாடைபோர்த்தி வாழ்த்துப்பா வாசிக்கப்பட்டு பாராட்டி தாயகத்தலைமகன் எனும் பட்டத்தினையும் வழங்கி கௌரவித்தனர்.
அதனைத்தொடர்ந்து வரவேற்பு பெற்றவர்கள் வரிசையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் பதவியினை ஏற்றிருக்கும் இனப்பற்றாளன் மாவை சேனாதிராசா புதிய செயலாளர் மண்ணின் மைந்தன் கி.துரைராஜசிங்கம் ஆகியோருக்கு மலர்மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்கி வரவேற்கப்பட்டார்கள்.
அதனைத்தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் அனைத்து நிகழ்வுகளும் ஆரம்பமாகின.
 இந்நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், தமிழரசிக்கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராசா, செயலாளர் நாயகம் கி.துரைராஜசிங்கம், மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், ஈ.சரவணபவன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா ஆகியோர் அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர்.
முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சு வார்த்தைகளை  தவிர்த்து கொள்ள வேண்டும் - அம்பாறை மாவட்ட த.தே.கூ உறுப்பினர்கள்
அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக கல்முனையில் த.தே.கூட்டமைப்பு தலைமைகள் முஸ்லிம் காங்கிரசுடன் பேசுவதனை தவிர்த்துக்கொள்ளல் வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அவர்களின் தலைமைகளுக்கு கடிதல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த கால அரசியலும், தற்கால அரசியலும் நன்கு அறிந்திருந்தும் எமது மாவட்டத்தில் உள்ள எவரது கருத்துக்களுக்கும் இடமளியாது தாங்களாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவெடுப்பது பெரும் வேதனையைத்தருகின்றது.
அம்பாறையில் அதுவும் குறிப்பாக கல்முனையில் பேச்சு நடத்துவதனை தாங்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றோம் என த.தே.கூட்டமைப்பின் தலைமைக்கு அனைத்து அம்பாறை மாவட்ட த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் கையொப்பம் இட்டு கடிதம் ஒன்றினை கையளித்து இருக்கின்றனர்.
இம்முடிவினை எடுத்ததற்கான காரணங்களை பின்வருமாறு பட்டியல்படுத்தி இருக்கின்றார்கள்.
கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு நேரடி எதிரியாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்தமை.,
மத்திய மற்றும் கிழக்கு மாகாணசபையின் ஊடாக வழங்கப்படும் வேலை வாய்ப்புக்களில் முற்றாக தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டமை.
கிழக்கு மாகாணசபை ஊடாக பகிர்ந்தளிக்கப்படும் அபிவிருத்தி விடயங்களில் தமிழர்பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றது.
கல்முனை மாநகரசபை. போத்துவில் பிரதேச சபை ஊடாக தமிழர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதிகள்.
கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட ஆட்டோ சங்கத்தின் பிரச்சனை.
வீதிகளுக்கு பெயர் மாற்றுவதற்கான பிரச்சனை
நில ஆக்கிரமிப்பு, கலாசார சீர்கேடுகள் போன்ற பிரச்சினைகள் அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவையாவற்றையும் அறிந்திருந்தும் இவர்களுடன் பேச்சு நடத்தியாகவேண்டுமா என ஒட்டு மொத்த த.தே.கூட்டமைப்பினரும் தலைமைகளுக்கு கடிதம் மூலம் தங்களது கையொப்பத்தினை இட்டு கையளித்திருப்பதாக அம்பாறை மாவட்ட த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhs4.html

Geen opmerkingen:

Een reactie posten