இந்த ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்காக வந்திருந்த ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர், காணாமல்போன தன் மகன் தொடர்பாக கதறி அழுதுள்ளார்.
ஆணைக்குழுவையும், ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும், ஈபி.டி.பி மற்றும் புலனாய்வாளர்களையும் மிக மோசமாக காறி துப்பாத குறையாக திட்டித் தீர்த்ததுள்ளார்.
அத்துடன், என்னுடைய பிள்ளையை கொன்றுவிட்டார்கள், என் பிள்ளையின் உயிருக்கு 2 ஆடு சமமாகுமா? என கேள்வி எழுப்பியதுடன், இறைவனின் நீதி ஒன்று இருக்கின்றது. அது உங்களை அழிக்கும்.
இல்லையேல் கண்ணகி மதுரையை எரித்தால்போல் நான் உங்களை எரிப்பேன் என சாபமிட்டுச் சென்றுள்ளார்.
விடுதலைப் புலிகள் பொதுமக்களை கேடயங்களாக பயன்படுத்தினார்களா?- ஆணைக்குழு எழுப்பிய கேள்விகள்
காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு 2ம் அமர்வுகள் கிளிநொச்சி- முழங்காவில் பகுதியில் இன்றைய தினம் நடைபெற்றது.
இன்று 43 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதிகளவான முறைப்பாடுகள் படையிருக்கும், புலனாய்வாளர்களுக்கும் எதிரான முறைப்பாடுகளாக அமைந்துள்ள துடன், ஆணைக்குழுவின் அடுத்த அமர்வுகள் நாளை பூநகரியில் நடைபெறவுள்ளது.
காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணிவரையில் மேற்படி அமர்வுகள் நடைபெற்றிருந்தது. இதில் கடந்த காலத்தில் நடைபெற்ற அமர்வுகளில் இவ் ஆணைக்குழுவினால் கேட்கப்படாத பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 2009ம் ஆண்டு போர் நிறைவடைந்ததன் பின்னர் பொதுமக்கள் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றபோது படையினர் மக்களை நாகரீகமாக நடத்தினரா?
படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மக்கள் செல்லும்போது படையினர் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினரா?
தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தினார்களா? என பல கேள்விகளை ஆணைக்குழு எழுப்பியிருந்தது.
எனினும் இதற்குப் பதிலளித்த மக்கள், படையினர் எமக்கு உணவு கொடுத்தார்கள். எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. ஆனால் தொடர்ச்சியாக எறிகணை தாக்குதல்களை நடத்தினார்கள் என சாட்சியத்தில் குறிப்பிட்டனர்.
இதேவேளை, அ.நிக்ஸன் என்பவர் தன்னுடைய மகன், மருமகள், பேரன் ஆகியோர் 2009ம் ஆண்டு இரணைப்பாலை பகுதியில் கடுமையான ஷெல் வீச்சினால் காணாமல்போனமை தொடர்பாக சாட்சியமளிக்கையில்,
எவ்வாறு அவர்களைத் தவறவிட்டீர்கள்? பின்னர் அவர்களைத் தேடவில்லையா? என ஆணைக்குழு கேள்வியினை கேட்டிருந்தது.
இதற்குப் பதிலளித்த அவர், தொடர்ந்தும் அவர்களை தேட முடியாத நிலை காணப்பட்டது. தொடர்ச்சியாக ஷெல் வீசப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்குள் படையினர் எங்களைச் சுற்றி வளைத்து விட்டார்கள். பின்னர் தேட முடியவில்லை என சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
மேலும், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும்போது எவ்வாறான பாதை வழியாக வந்தீர்கள்? வந்த வழியில் மக்கள் காயமடைந்தும், உயிரிழந்தும் கிடந்தனரா? என ஆணைக்குழு அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்குப் பதிலளித்த அவர், நாங்கள் நெஞ்சளவு நீர் உள்ள பகுதிக்குள்ளாக வந்தோம். நாங்கள் வந்த வழி முழுவதும் மக்கள் இறந்து கிடந்தார்கள். காயமடைந்த பலர் அந்த காயங்கள் பழுதடைந்த நிலையில், குற்றுயிராக கிடந்தார்கள். ஆனால் தொடர்ச்சியாக ஷெல் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அதனால் யாரும் யாரையும் தூக்கும் மனோநிலையில் கூட இல்லை என சாட்சியமளித்தார்.
இதேபோன்று படையினரின் கட்டுப்பாட்டுக்குள் காணாமல்போனவர்கள், காணாமல்போனதன் பின்னர் இருக்கிறார் என அலைக்கழிக்கப்பட்டமை தொடர்பிலும் அதிகளவாள முறைப்பாடுகள் இன்றைய தினம் பதிவு செய்யப்பட்டிருந்தன.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhx1.html
Geen opmerkingen:
Een reactie posten