[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 09:58.02 AM GMT ]
ஊவா மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு, பொலிஸ் மா அதிபர் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த விசாரணைகள் முடியும் வரை ஊவா மாகாணத்தில் தங்கியிருந்து விசாரணைகளை மேற்பார்வை செய்யுமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVix1.html
மகிந்தவுடன் அவுஸ்திரேலியப் பிரதமர் நியூயோர்க்கில் சந்திப்பு
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 10:40.45 AM GMT ]
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69வது அமர்வின் ஓரமாக இடம்பெற்ற இந்த சுமுகமான கலந்துரையாடலின் போது இருதரப்புச் சம்பந்தமான பல விடயங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.
பொருளாதார, அபிவிருத்தி துறைகளில் இலங்கையின் அண்மைய நிலை தொடர்பாகவும், இலங்கையின் நல்லிணக்கப் பணிகள் தொடர்பாகவும் பிரதமருக்கு ஜனாதிபதி ராஜபக்ச விளக்கினார்.
மேலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிறப்பாக செயற்படுவதாகவும் இலங்கையின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 7.8 சதவீதமாக இருப்பது சிறப்பான ஒரு விடயம் எனவும் டோனி அபோட் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவுஸ்திரேலியா எதிர்கொள்ளும் மனிதக் கடத்தலை எதிர்கொள்வதற்கு இலங்கை வழங்கியுள்ள உதவிக்கு தாம் மிகவும் நன்றி தெரிவிப்பதாகவும் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVix2.html
இலவச பாடசாலை புத்தகங்களை விற்பனை செய்ய முயற்சி- ஆயுதங்கள் மீட்பு
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 02:29.58 PM GMT ]
விற்பனைக்காக கொண்டு சென்ற பாடசாலை மாணவர்களின் இலவச புத்தகங்களை நோர்வூட் பொலிஸார் இன்று மாலை கைப்பற்றியுள்ளனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒரு தோட்ட பகுதியை சேர்ந்த தமிழ் வித்தியாலயத்தில் இருந்து குறித்த புத்தகங்களை ஹற்றன் பகுதியில் ஒரு வர்த்தக நிலையத்திற்கு வான் ஒன்றில் கொண்டு செல்வதாக குறித்த பாடசாலை பகுதியில் உள்ள பெற்றோர்கள் 119 பொலிஸ் அவசர பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் நோர்வூட் பொலிஸார் சுற்றிவளைத்து குறித்த புத்தகங்களை கைப்பற்றியுள்ளனர்.
தரம் 6 யிலிருந்து 11ம் தரம் வரை உள்ள 2009, 2010, 2011, 2012 ஆகிய வருடங்களில் வெளியாகியுள்ள புத்தகங்கள் எனவும் இவைகள் 400 கிலோ இருந்ததாகவும் இதில் சுமார் 1000 புத்தகங்கள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த புத்தகங்களை அனுமதியோடு விற்பனை செய்தார்களா அல்லது சட்டவிரோதமாக விற்பனை செய்தார்களா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தகங்களை அனுமதியோடு விற்பனை செய்வதாக இருந்தால், குறித்த புத்தகங்களில் இரத்து செய்யும் ரப்பர் முத்திரை கட்டாயமாக இருக்க வேண்டும் என கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைப்பற்றப்பட்ட புத்தகங்களில் அவ்வாறான ரப்பர் முத்திரை காணப்படவில்லை என நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆயுதங்கள் மீட்பு
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், கொலை குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் துப்பாக்கி ஒன்றும் டி56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் மற்றும் கத்திகள் இன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இந்த இராணுவ வீரர், தனது மனைவியின் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்து தப்பி சென்றுள்ளார்.
இதனையடுத்து குறித்த இராணுவ வீரரைக் கைது செய்த பொலிஸார், குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஹற்றன் பதில் நீதவான் உத்தரவின் படி பொலிஸ் நிலையத்தில் வைத்து சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVho0.html
Geen opmerkingen:
Een reactie posten