சுமார் 15 ஏக்கர் காணி இன்றைய தினம் பறிக்கப்பட்டு புதிய எல்லைகள் போடப்பட்டுவிட்டதாக வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெயநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 8ம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் படைத்தளபதிகள் கூடி பெருவிழா எடுத்து 264 ஏக்கர் மக்களுடைய நிலத்தை மக்களிடம் மீண்டும் விவசாயத்திற்காக கையளித்தார்கள்.
இந்நிலையில் இன்றைய தினம் 27ம் திகதி அவ்வாறு வழங்கப்பட்ட காணியில் ஐந்து குடும்பங்களுக்குச் சொந்தமான 15ஏக்கர் நிலத்தை சுற்றி இன்றைய தினம் விமானப்படையினர் வேலி அமைத்துள்ளனர்.
வாவட்டிக்குளம் என்ற குளத்திற்கு கீழ் உ ள்ள விவசாய நிலத்தை சுற்றியே இவ்வாறு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மக்கள் விமானப் படையினரிடம் சென்று விசாரித்தபோது, எங்களுடைய நிலம் உங்களுக்கு கொடுத்தோம். இப்போது எமக்கு தேவை என கூறி மக்களை திருப்பி அனுப்பியிருக்கின்றார்கள்.
இந்நிலையில் மக்கள் இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்துவதற்காக அரசாங்க அதிபருக்கு தொலைபேசி அiழைப்பினை எடுத்தபோது, அவர் அழைப்பினை எடுக்கவில்லை.
இதேவேளை குறித்த நிலங்களை மக்களுக்கு வழங்கும் பொழுதே பத்திரம் ஒன்றினை மக்களுக்கு வழங்கியிருப்பதுடன், வேறு ஒரு பத்திரத்தில் மக்களிடம் கையெழுத்தும் பெற்றிருக்கின்றார்கள்.
ஒரு பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால், இந்த நிலம் பாதுகாப்பு தேவைகளுக்காக எடுக்கப்பட்ட நிலம் அதனை மக்களுடைய வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு ஜனாதிபதி அவர்கள் உங்களுக்கு வழங்கி வைக்கின்றார்கள் என்றவாறாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிலம் மக்களுக்குச் சொந்தமான உறுதியுள்ள நிலங்கள்.
குறிப்பாக எடுக்கப்பட்டுள்ள 15 ஏக்கர் நிலத்தில் எல்.மெர்சி- 2 ஏக்கர், சி.சந்திரலீலா- 2 ஏக்கர், தங்கவேலாயுதம்- 4 ஏக்கர், சரவணமுத்து- 4 ஏக்கர், கே.ரஜனி-3 ஏக்கர் ஆகியோர் தங்களது காணியை இழந்துள்ளனர்.
இது அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலமாகும். எனவே எதிர்காலத்தில் கொடுக்கப்பட்ட அத்தனை நிலத்தையும் பிடுங்கிக் கொண்டாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றார்.
தொடர்புடைய செய்தி- மீண்டும் போர்?: கையெழுத்திட்டு காணிகளை மீட்ட மக்கள்
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgwz.html
Geen opmerkingen:
Een reactie posten