இலங்கையில் வெவ்வேறு இரண்டு சம்பவங்களில் வயோதிக பெண்கள் இருவர் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
காலி பிரதேசத்தில் 105 வயதான பெண்ணொருவர் ஐந்து பேர் கொண்ட இளைஞர் கும்பலினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குற்றவாளிகள் தொடர்பில் இதுவரை எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று அநுராதபுரம், தம்புத்தேக பகுதியிலும் 85 வயதான வயோதிக பெண்ணொருவர் மூன்று பேரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன் பலாங்கொடையில் 103 வயதுடைய வயோதிகப் பெண் ஒருவரை 15 வயது பாடசாலை மாணவனொருவன் கத்தியால் குத்தி, படுகொலை செய்திருந்த சம்பவம் நடைபெற்றது குறி்ப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVho3.html
Geen opmerkingen:
Een reactie posten