ஈராக்கின் தலைநகர் பக்தாத்திற்கு சுமார் 1 மைல் தொலைவில் தீவிரவாதிகள் நிலைகொண்டுள்ளதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்தி ஐரோப்பாமற்றும் அமெரிக்காவில் உள்ள மக்களை பெரும் அதிர்சிக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்கா அரபு நாடுகள் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள், ஈராக்கில் நிலைகொண்டுள்ள ISIS தீவிரவாதிகள் மீது பாரிய விமான தாக்குதலை நடத்தி வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியது. தீவிரவாதிகள் பாரிய அளவில் அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்க சார்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த இயக்கம் பலத்தை இழந்துவிட்டது என்றும் கூறப்பட்டது. ஆனால் இன் நிலையில் அவர்கள் முன்னேறி ஈராக்கின் தலைநகர் வரை வந்துவிட்டார்கள்.
பல மாநிலங்களை தமது கட்டுபாட்டில் வைத்துள்ள அவர்கள், தற்போது தலைநகரை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள். விரைவில் தலைநகர் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால் அமெரிக்கா பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இதுவரை நடத்தியுள்ள தாக்குதலால் அவர்கள் எப்பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்பதே பொருள் ஆகும். குறிப்பாக பிரித்தானிய 20 மில்லியன் ஸ்டேலிங் பவுன்ஸை செலவுசெய்துபல ஏவுகணைகளை கொள்வனவு செய்துள்ளது. இவை அனைத்தும் ஈராக்கில் பாவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இவர்கள் இவ்வாறு ஆயுதங்களை வாங்கிக் குவித்து, பின்னர் அதனை சரியாகப் பாவிக்காமல் தீவிரவாதிகளை அழிக்காமலும் விட்டுவிடுகிறார்கள்.
பிரித்தானியாவில் தற்போழுது ஆட்சியில் உள்ள கான்சர்வேட்டிவ் கட்சியின் நிலைப்பாடு படுமோசமாக உள்ளது. 2015ல் நடக்கவுள்ள தேர்தலில் லேபர் கட்சி ஆட்சிக்கு வரும்வேளை தான் சில மாறுதல்களும் நல்ல முன்னேற்றங்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் நம்புகிறார்கள்.
Geen opmerkingen:
Een reactie posten