தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 september 2014

இரத்தினபுரியில் பொது இடத்தில் பெண்ணை தாக்கிய பொலிஸ் அதிகாரி

வாரியபொல பஸ் நிலையத்திற்கு அருகில் அண்மையில் இளம் பெண்ணொருவர், தன்னை கேலி செய்த இளைஞரை பகிரங்கமாக தாக்கிய சம்பவம் இலங்கையில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இதற்கு முற்றிலும் மாறான சம்பவம் ஒன்று இரத்தினபுரி பஸ் நிலையத்திற்கு எதிரில் நடைபெற்றுள்ளது.
பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள காணொளி ஒன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டியவாறு பொது இடத்தில் பலர் முன்னிலையில் பெண்ணொருவரை தாக்குகிறார்.
தன்னை தாக்க வேண்டாம் என அந்த பெண் கூறிய போதிலும் பொலிஸ் அதிகாரி பெண்ணை தாக்குவது போல் இந்த காட்சி வெளியிடப்பட்டுள்ளது.


http://www.jvpnews.com/srilanka/82834.html

Geen opmerkingen:

Een reactie posten