தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 september 2014

வடக்கு கிழக்கு மாகாணங்களோடு தொடர்பை ஏற்படுத்தப் போவதாக ரொறன்ரோ மேயர் வேட்பாளர் அறிவிப்பு!


பொதுபல சேனாவின் நடவடிக்கைகளினால் அரசாங்கத்திற்கு பாதிப்பு: வாசுதேவ நாணயக்கார
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 02:44.04 AM GMT ]
பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகளினால் அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணசபைத் தேர்தலின் போது ஆளும் கட்சிக்கான சிறுபான்மை மக்களின் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகள் இந்த பின்னடைவிற்கு முக்கியமான காரணியாக அமைந்துள்ளது.
வறட்சியைப் பயன்படுத்திக்கொண்டு மக்களை ஆத்திரமூட்ட வைக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்தது.
இவ்வாறான ஓர் நிலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு பெரும்பான்மையான மக்கள் வாக்களித்தமை வரவேற்கப்பட வேண்டியதாகும். எனினும், சிறுபான்மை மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களிக்கத் தவறியுள்ளனர்.
குறிப்பாக முஸ்லிம் மக்களின் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகளே பிரதான காரணியாகும்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வாக்குகளையே ஜே.வி.பி பெற்றுக்கொண்டுள்ளது.
கடந்த கால மாகாணசபைத் தேர்தல்கள் மற்றும் ஜனாதிபதிக்கு காணப்படும் பிரபல்யம் ஆகியவற்றை கருத்திற்கொண்டால், ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சிக்கு வெற்றியீட்ட முடியும்.
எனினும் ஜனாதிபதி முறைமை இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
ஜனாதிபதி நாடாளுமன்றிற்கு வரவேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் அதற்கு ஆதரவளிக்கப்படும் எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேசிய மொழிகள் அமைச்சில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgs5.html

வடக்கு கிழக்கு மாகாணங்களோடு தொடர்பை ஏற்படுத்தப் போவதாக ரொறன்ரோ மேயர் வேட்பாளர் அறிவிப்பு!
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 02:40.12 AM GMT ]
தமிழ் சமூகத்தின் பலத்தை முழுவதும் பயன்படுத்த இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளோடு கலந்துரையாட, தான் தயாராக இருப்பதாக ரொறன்ரோ மேயர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் ஜோன் ரோறி தெரிவித்தார்.
நேற்று முன்தினம் தமிழ் ஊடகங்களோடான செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்  இதனை அறிவித்தார்.
வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவர்களோடு தான் பேசியதாகவும் அப்போது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கோடு மட்டுமல்ல தமிழர்கள் பெருமளவு வாழும் ரொறன்ரோ நகரத்துக்கும் நன்மை தரக்கூடிய வாய்ப்புக்களை உருவாக்குவது பற்றிக் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.
"ரொறன்ரோவில் பெருமளவு தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பலர் வெற்றிகரமான தொழில்முனைவர்களாக இருக்கிறார்கள். இந்த வலிமையை நாம் ரொறன்ரோவில் உள்ள எல்லாச் சமூகங்களும் பயன்படுமாறு செய்ய வேண்டும்".
இலங்கைக்குப் பயணம் செய்து அங்குள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பல தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளோடு சந்தித்தவன் என்ற முறையில் நான் தமிழர்களுடைய வரலாற்றைவும் இந்த நகரம் ஒரு சிறந்த நகரமாக உருவெடுப்பதற்கு அவர்களது அன்றாட பங்களிப்புப் பற்றியும் தெரிந்து வைத்துள்ளேன்.
தமிழ்ச் சமூகத்தின் முழு அளவிலான பங்களிப்பு இன்னும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. அந்த சமூகத்தின் பங்களிப்பை ஏனைய சமூகங்களும் பயன்பெறுமாறு செய்வதற்கு நாங்கள் மேலும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டிய அவசியத்தை நிச்சயப்படுத்த வேண்டும்.
நான் மேயராகத் தெரிவு செய்யப்பட்டால் அவைத் தலைவர் (திரு சி.வி.கே. சிவஞானம்) மூலமாக ரொறன்ரோவுக்கு வருகை தருமாறு முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களுக்கும் தீவில் தெரிவு செய்யப்பட்ட ஏனைய அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு அனுப்புவேன் என ஜோன் ரோறி குறிப்பிட்டார்.
மேலும், அங்குள்ள தமிழ் அமைப்புக்களை ஒன்றுபடுத்தி மாநகர அரசு எவ்வாறு ஒரு தமிழ்ப் பண்பாட்டு மையத்தையும் மூத்தோர் காப்பு இல்லத்தையும் அமைக்க உதவியாக இருக்க முடியும் என்பதற்கான வழிவகைகள் ஆராயப்படும் என்பதற்கான வாக்குறுதியையும் அளித்தார்.
எல்லோருக்கும் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது, இளைஞர் மத்தியில் காணப்படும் வேலையின்மை விழுக்காட்டை குறைப்பது, போக்குவரத்தை மேம்படுத்தல், ரொறன்ரோவில் முதலீடு செய்யத் தொழில் நிறுவனங்களை ஈர்ப்பது ஆகியவற்றைச் செய்யப் போவதாகவும் ரோறி தெரிவித்தார்.


Geen opmerkingen:

Een reactie posten