[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 05:12.52 PM GMT ]
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்குப் பற்றிய செய்தி இன்று வெளிவந்தவுடனேயே தமிழகமெங்கும் பெரும் பதட்டம் நிலவுவதுடன், பெரிய அளவிலான வன்முறைகளும் வெடித்துள்ளன.
இந்த சிறைத்தண்டனை மற்றும் ஜெயலலிதாவின் பின்னணி, ஈழத்தமிழர் விவகாரங்களில் அவரது பங்கு குறித்து கனடாவிலிருக்கும் சிரேஸ்ட ஆய்வாளர் சுதர்மா லங்காசிறி வானொலியில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
1998ம் ஆண்டு முதல்வராக இணைந்த ஒரு ஆண்டிற்குள்ளேயே இந்திய மத்திய ஆட்சியையே புரட்டிப் போட்டவர். 2014ம் ஆண்டுத் தேர்தலில் மூன்றாம் அணி வென்றிருந்தால் பிரதமராவர் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
18 வருடங்களிற்கு முன்னர் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு என்றாவது ஒரு நாள் ஜெயலலிதாவைக் சிக்கலிற்குள் மாட்டிக் கொள்ளும் என்பதைத் தெரிந்திருந்தாலும், அவர் இந்த இறுதி விசாரணையின் போது விடுதலைப் புலிகளினால் தனக்கு அச்சுறுத்தல் உண்டு என்றது அவரை ஒரு பச்சை அரசியல்வாதியாகக்காட்டியது.
எம்.ஜி.ஆர் மறைந்த போது உடன்கட்டை ஏற முயன்றதான செய்தி, பின்னர் தனது வீட்டிற்கு அருகில் கடை வைத்திருந்த சசிகலாவை தனது இல்லத்தில் ஒருவராக ஆக்கி வாழ்ந்து வந்தது போன்ற சர்ச்சைகள் பல இருந்தாலும் நிறையப் படித்தவர், ஆளுமை மகிக்கவராக தன்னை பல இடங்களிலும் காட்டியிருக்கிறார் என்பது உள்ளிட்ட பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVhp1.html
கராட்டி மாஸ்ரர் பிடிக்க வந்தவர்களுக்கு அடித்திருக்கலாமே! இளைஞர்கள் தனித்து வாழ கொழும்பு நல்லதல்ல!-ஆணைக்குழு தலைவர்
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 11:52.09 PM GMT ]
மேலும் கொழும்பில் கராட்டி ஆசிரியராக இருந்த மகனை வெள்ளை வானில் வந்தவர்கள் பிடித்துச் சென்றதாக தாய் சாட்சியமளிக்கும் போதே தலைவர் நகைச்சுவையாக இந்த வினாவை தொடுத்திருந்தார்.
மேலும் இங்கு விடுதலைப் புலிகள் பிடித்துச் சென்று விடுவார்கள், பயத்தில் கொழும்பிற்கு எனது மகனை அனுப்பி வைத்தேன். அவர் அங்கு வந்து கராட்டியில் பயிற்சி பெற்றுள்ளார்.
அதற்குப் பின்னர் பயிற்சி நிலையம் ஒன்றை வைத்து நடாத்தி வந்தார். அப்போது நானும் எனது மகளும் ஊரில் இருந்தோம் . மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா அனுப்பி வைப்பார்.
எனினும் நான் 5 வருடங்கள் மகனைப் பார்க்கவில்லை. கொழும்பு செல்ல விடுதலைப்புலிகள் அனுமதி தரவில்லை. இருப்பினும் ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் உரையாடுவோம்.
ஆனால் இப்படி நடந்து போச்சு எங்க இருக்கிறார். என்ன ஆனார் என்று ஒன்றுமாய் தெரியவில்லை என்று தெரிவித்தார். அதன்போதே ஆணைக்குழுவின் தலைவர் மேற்கூறிய வினாவை நகைச்சுவையான வினாவை தொடுத்தார்.
இளம் பிள்ளைகள் தனித்து வாழ கொழும்பு நல்லத்தல்ல! ஆணைக்குழு தலைவர் பரணகம
பெற்றோரது கண்காணிப்பு இல்லாமல் இளம் பிள்ளைகள் தனித்து தன்னிச்சையாக வாழ்வதற்கு கொழும்பு பொருத்தமான இடமல்ல என ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார்.
கொழும்பில் மகன் இருந்தபோது வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டார் என்ற சாட்சியத்தினை தாயொருவர் பதிவு செய்தார். அதன்போதே தலைவர் மேற்கூறப்பட்ட அறிவுரையினை தாயாருக்கு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சில பிள்ளைகள் பெற்றாரை விட்டு தூர விலகிப் போனால் அங்கு போதைவஸ்த்துக்களை பயன்படுத்துவதும் குறுக்கு வழிகளிலும் சென்று வருகின்றனர். இதனால் பெரிய பாதிப்பு ஏற்படும்.
மகனின் விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி இருக்க வேண்டும். பிள்ளைகள் எப்போதும் பாதுகாக்க வேண்டியது பெற்றோரது கடமை எனவே கொழும்பில் பிள்ளைகள் இருக்கும் பெற்றோர்கள் மிகவும் அவதானத்துவிடன் இருக்க வேண்டும்.
அத்துடன் இளம்பிள்ளைகள் வாழ்க்கைக்கு கொழும்பு பொருத்தமான இடமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVhp2.html
Geen opmerkingen:
Een reactie posten