தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 september 2014

நவ்ரு தீவில் அதிகரிக்கும் பாலியல் துன்புறுத்தல்கள்! விசாரணை கோருகிறார் செனட்டர் ஷார ஹன் யங்!


மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலையத்தில் 105 மாணவர்கள் சித்தி (செய்தித் துளிகள்)
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 09:16.43 AM GMT ]
இவ்வாண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்தில் 105 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்தார்.
வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளின் படி வாழைச்சேனை கோறளைப்பற்று கல்வி கோட்டத்தில் 52 மாணவர்களும், ஏறாவூர்ப்பற்று 2 கல்விக் கோட்டத்தில் 50 மாணவர்களும், வாகரை கோறளைப்பற்று வடக்கு கல்விக் கோட்டத்தில் 3 மாணவர்களும் சித்தி பெற்றுள்ளனர்.
செங்கலடி விவேகானந்த வித்தியாலய மாணவன் சுதாகரன் அனோஜன் 186 புள்ளிகளை பெற்று வலயத்தில் முதலிடத்தையும், மட்டக்களகப்பு மாவட்டத்தில் 8ம் இடத்தையும் பெற்றுள்ளார்.
வாழைச்சேனை இந்துக் கல்லுரியில் 29 மாணவர்களும், செங்கலடி மத்திய கல்லூரியில் 17 மாணவர்களும், வந்தாறுமூலை மத்திய மாகா வித்தியாத்தில் 11 மாணவர்களும், வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் 11 மாணவர்களும், கிரான் விவேகானந்தா வித்தியாலயத்தில் 7 மாணவர்களும், செங்கலடி விவேகானந்த வித்தியாலயத்தில் 5 மாணவர்களும் சித்தி பெற்றுள்ளனர்.
கடந்த வருடத்தை ஒப்பிடும் போது இம்முறை பரீட்சைப் பெறுபேறுகளில் முன்னேற்றமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மஸ்கெலியாவில் குளவி தாக்குதல்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா லங்கா தோட்டத்தில் இன்று காலை 9.00 மணியளவில் குளவி கொட்டியதால் 16 பேர் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிந்த வேளையில் தேயிலை பகுதியிலிருந்த குளவி கூடு கலைந்து வந்து இவ்வாறு தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
குளவி கொட்டுக்கு இழக்கானவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
பாசிக்குடாவில் மூழ்கிக் கிடக்கும் நான்கு கப்பல்கள்
கிழக்கு மாகாணம் பாசிக்குடா கடற்பகுதியில் நான்கு கப்பல்கள் மூழ்கிக் கிடப்பதாக கடல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவை நான்கும் மிக நீண்டகாலத்துக்கு முன்னரே அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குரிய கப்பல்களாக இருக்கலாம் என்றும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக கடல்தொல்பொருள் ஆய்வாளர் ரசிக முத்துக்குமாரண தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தக் கப்பல்கள் நீராவி தொழில்நுட்பத்தில் இயங்கிய கப்பல்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
எனினும் இவை எந்த நாடுகளுக்குரிய கப்பல்கள் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த நான்கு கப்பல்களிலும் தங்கம், வெள்ளி போன்ற பெறுமதியான பொருட்கள் புதைந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தற்போது இந்தக் கப்பல்களை நீருக்கடியிலிருந்து வெளியே கொண்டுவருவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgu1.html


நவ்ரு தீவில் அதிகரிக்கும் பாலியல் துன்புறுத்தல்கள்! விசாரணை கோருகிறார் செனட்டர் ஷார ஹன் யங்
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 09:48.06 AM GMT ]
நவ்ரு தீவு அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு அதிகமாக உட்படுத்தப்படுவதாக அவுஸ்திரேலியா செனட்டர் ஷார ஹன் யங் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நவ்ரு தீவு அதிகாரிகள் பலவந்தமாக பெண்கள் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உடனடியாக இந்த விடயம் சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என்று குடிவரவு அமைச்சர் மோரிசனுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு மொரிசன் ஓரிரு சம்பவங்களே நடந்துள்ளது என்று பதில் அளித்துள்ளார்.
இந்த விடயத்துக்கு உடனடியாக விசாரணை செய்து அவர்களுக்கு நல்லதொரு தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும் என்றும் சென்ட்டர் ஷார ஹன் யங் வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgu2.html

Geen opmerkingen:

Een reactie posten