நவ்ரு முகாம் உள்ள சிறுவர்கள் இன்று அவுஸ்ரேலியா தூதரகத்துக்கு முன்பாக அமைதி போராட்டத்தை தற்போது நடத்தி வருவதாக அகதிகள் அதிரடி கூட்டனி அமைப்பாளர் இயன் தெரிவித்துள்ளார்.
சுமார் 80 சிறுவர்கள் இந்த அமைதியான எதிர்ப்பு ஊர்வலத்தை மேற்கொண்டதுடன், நவ்ரு தீவில் உள்ள அவுஸ்ரேலியாவுக்கான உயர் ஆணையகத்துக்கு முன் சென்று தங்களது மகஜரை கையளித்துள்ளனர்.
இதில் கலந்து கொண்டவர்கள் மொரிசனின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கடும் கோசத்தையும் எழுப்பியுள்ளனர்.
தாங்களை கால வரையரையற்ற தடுப்பில் முகாமில் வைப்பது மனித உரிமை மீறலாகும் என்றும் இது அகதிகள் சட்டம் மீறப்பட்டும் செயல் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதன் போது தன்னை தானே துன்புறுத்திய 4 சிறுவர்கள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவுஸ்ரேலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இயன் தெரிவித்துள்ளார்.
நங்கள் விட்டுக் கொடுப்பதற்கு உயிரை தவிர வேறு ஒன்றும் இல்லை, எங்களை கொன்றுவிடுங்கள் என்று சிறுவர்கள் கூறியது மிகவும் வேதனைக்குரிய விடயமாக உள்ளதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இவர்களின் இந்த நிலைமையை கண்டித்து மிக விரைவில் பாரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgoy.html
Geen opmerkingen:
Een reactie posten