தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 september 2014

பசில் சுசில் வாய்த்தர்க்கம்!

அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும், அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவுக்கும் இடையில் வாய்தர்க்கம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் சந்தித்த பின்னடைவுக்கு ராஜபக்ச குடும்பத்தினர் மேற்கொண்ட தீர்மானங்களே காரணம் என்று அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்திருந்தார். இது தொடர்பில் பசில் ராஜபக்ச ஜனாதிபதியின் முன்னால் வைத்து சுசில் பிரேமஜெயந்தவை திட்ட முற்பட்டுள்ளார்.

எனினும் ஜனாதிபதி நிற்பதையும் பொறுட்படுத்தாக அமைச்சு சுசில் பிரேமஜெயந்த, ராஜபக்சவின் குடும்பத்தாருக்கு இனியும் அஞ்சிக் கொண்டிருக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். மேலும் தமக்கு இந்த அமைச்சர் பதவி இல்லாது போனால், மீண்டும் சட்டத்தரணியாக நீதிமன்றத்தில் தம்மால் செயற்பட முடியும் என்றும், ஆனால் ராஜபக்சவின் குடும்பத்தாருக்கு அப்படி எதனையும் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார்.
எனினும் இதனை அவதானித்திருந்த மகிந்தராஜபக்ச, சுசில் பிரேம ஜெயந்தவுக்கு எதிராக எதனையும் கூறவில்லை என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிந்தராஜபக்ச குடும்பத்துக்கு மக்கள் ஆதரவு மாத்திரம் இன்றி, அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மத்தியலும் ஆதரவு கணிசமாக குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/82788.html

Geen opmerkingen:

Een reactie posten