கொழும்பின் உயர்தர பாடசாலை மாணவனொருவனும் அதே பாடசாலை ஆசிரியை ஒருவரும் பேஸ்புக் நட்பின் மூலம் காதலில் விழுந்த சம்பவம் தற்போது குற்றவியல் புலனாய்வுத்துறை பொலிசாரின் விசாரணையில் உள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கொழும்பின் பிரபல பாடசாலையொன்றின் மாணவனொருவன் போலிப் பெயரில் பேஸ்புக் கணக்கொன்றைத் தொடக்கி, அதன் மூலம் பெண்ணொருவருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளான்.
இருவரும் இணையத்தில் ஆரம்பித்த அரட்டை, காதலாக மலர்ந்து இதயங்களை இணைத்துவிட்டது. அதன் பின்னர் இருவரும் முதன்முதலாக சந்தித்துக் கொண்ட போதுதான் இருவருக்குமே அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த மாணவன் தனது பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரையே பேஸ்புக் மூலம் காதலித்திருந்தான்.
ஆசிரியையும் போலிப் பெயரில் பேஸ்புக் கணக்கு வைத்திருந்தது அப்போதுதான் தெரிய வந்துள்ளது.
அதனையடுத்து அவர்களுக்கிடையில் மூண்ட மோதல் தற்போது குற்றவியல் புலனாய்வுத்துறை பொலிசாரின் விசாரணை வரை நீண்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgrz.html
Geen opmerkingen:
Een reactie posten