தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 september 2014

வடமாகாண முதலீட்டாளர்களுடன் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா கலந்துரையாடல்

ஹரின் வாக்குறுதியை மீறியதால் பதவி விலகுவதில்லை!– உதய கம்மன்பில அறிவிப்பு
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 12:27.55 PM GMT ]
ஹரின் பெர்னாண்டோ அளித்த வாக்குறுதியை மீறியதால் தான் பதவி விலகுவதில்லை என மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உதய கம்மன்பில பதவி விலகுவாரா? இல்லையா? என்பதை அறிவிக்கும் விசேட ஊடகவியாளர் சந்திப்பு இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்:
ஹரின் பெர்னாண்டோ 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெறும் பட்சத்தில் தான் அமைச்சர் பதவியைத் துறப்பதாகத் தெரிவித்தேன்.
இதன்போது மற்றுமொரு நிபந்தனை விதிக்கப்பட்டது.
அதாவது தேர்தல் சுவரொட்டிகள், விளம்பரங்கள் இல்லாமல் போட்டியிட்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெரும் பட்சத்திலேயே தான் பதவி விலகுவதாக அறிவித்தேன்.
என்றாலும் ஹரின் பெர்னாண்டோ நிபந்தனைகளை மீறி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.
இதன் காரணமாகவே ஹரின் பெர்னாண்டோ 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார் எனத் தெரிவித்தார்.
ஊவா மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னதாக இடம்பெற்ற தொலைக்காட்சி விவாதமொன்றில் அமைச்சர் உதய கம்மன்பில குறித்த சவாலை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgp6.html
அரசாங்கத்துக்கெதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் செல்லும் ரங்கே பண்டார
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 12:34.05 PM GMT ]
ஐ.தே.க. வின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அரசாங்கத்துக்கெதிரான முறைப்பாடொன்றைச் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தனக்கெதிராக அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக பாலித ரங்கே பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதேச சபைத் தலைவரை தாக்கியதாக பொய் வழக்குகளின் கீழ் தன்னைக் கைது செய்திருந்ததாக குறிப்பிட்டார்.
தான் ஒருபோதும் பிரதேச சபைத் தலைவரை தாக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று அதிகாலை தனது ஹோட்டல் மீது 29 துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் அரசாங்கத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் அரசாங்கத்துக் கெதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை மேற்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgp7.html

பதில் பிரதம நீதியரசராக சலீம் மர்ஸுப் நியமனம்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 01:35.42 PM GMT ]
பதில் பிரதம நீதியரசராக சிரேஷ்ட உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்ஸுப் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் இதில் கலந்து கொண்டார்.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் வெளிநாடு சென்றுள்ள காரணத்தினால், சலீம் மர்ஸுப் பதில் பிரதம நீதியரசராக பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgqz.html

வடமாகாண முதலீட்டாளர்களுடன் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா கலந்துரையாடல்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 01:37.22 PM GMT ]
வடமாகாணத்தில் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இன்று வடக்கு முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் ஈர்ப்பு சக்தி வாய்ந்த வடக்கில் முதலீடுக என்ற தொனிப்பொருளில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதில், அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் லக்ஸ்மன் ஜயவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார், சில்வேஸ்திரி அலென்ரின், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ்,
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சந்தரம் அருமைநாயகம், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், வடக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் கிருபாகரன் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ்,
தவறான வழிநடத்தல்கள் காரணமாக மக்கள் அளவுக்கதிகமாக இழப்புக்களை எதிர்கொண்டிருந்தனர். உயிர் இழப்புக்களை ஈடு செய்ய முடியாது இருந்த போதிலும் ஏனையவற்றை ஈடுசெய்வதற்கு நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
வடமாகாணத்தில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஆகாய, கடல்வழி ஊடான போக்குவரத்து ஒரளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவையினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் அடுத்த மாதம் 13 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
எனவே முதலீட்டாளர்கள் இங்கு துணிந்து தமது முதலீடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgq0.html

Geen opmerkingen:

Een reactie posten