இன் நிலையில் கடந்த 23ம் திகதி ஓமார் என்னும் முஸ்லீம் நபர் இந்த சுவரை கடந்து உள்ளே சென்றுவிட்டார். முதலில் அவரை காவலாளிகள் கைதுசெய்து விட்டார்கள் என்ற தகவல் வெளியானது. பின்னர் நேற்றைய தினம் இது தொடர்பான முழு அறிக்கை ஒன்று வெளியானது. அதில் குறித்த அந்த முஸ்லீம் நபர், தாம் நினைத்ததை விட வேகமாக முன்னேறி செல்ல முடியாத இடம் வரை சென்றுவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் திடீரென நடந்ததால், காவலாளிகள் உஷார் அடைய முன்னரே, அவர் ஓட ஆரம்பித்து, வெள்ளை மாளிகைக்கு மிக நெருக்கமாகச் சென்றுவிட்டாராம். இதுவரை எவரும் இவ்வளவு தூரம் சென்றது இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை பாரதூரமான ஒரு அச்சுறுத்தல் என்று வெள்ளை மாளிகையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அத்தோடு ஓபாமாவின் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படும் வகையில் இது அமைந்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். வெள்ளைமாளிகைக்கு அதிபர் ஓபாமா எப்போது வருகிறார், எப்போது செல்கிறார் என்பது தொடர்பாக அறிந்துகொள்வதே கடினமான விடையம். அதிலும் ஓபாமா வெள்ளை மாளிகையில் இருப்பதும், பின்னர் அவர் ஹெலிகொப்டர் நோக்கிச் செல்லும் வேளை பார்த்து குறித்த இந்த அத்துமீறியது பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக அமெரிக்க ஊடகம் ஒன்று கருத்து தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
Geen opmerkingen:
Een reactie posten