ஜெயாவின் தலைமைச் செயலகம் வெறிச்சோடியது
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு தலைமைச் செயலகம் நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் புகார் மற்றும் கோரிக்கை அளிப்பதற்கும், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் செயலாளர்களைப் பார்ப் பதற்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் வந்து குவிவது வழக்கம். இதனால் தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை வளாகம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். ஆனால், நேற்று காலை முதலே கோட்டை வெறிச்சோடிக் காணப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா மற்றும் மூத்த அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் உள்ளிட்ட ஏராளமான அமைச்சர்கள் நேற்று கோட்டைக்கு வரவில்லை. சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதி, விளையாட்டுத்துறை அமைச்சர் சுந்தரராஜ், சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சில அமைச்சர்கள் மட்டும் தங்களது அலுவலகங்களுக்கு வந்திருந்தனர். அவர்கள் வழக்கமான அலுவல் களில் ஈடுபட்டி ருந்தபோதிலும், அவர்களைச் சந்திக்க வரு வோரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது.
முதல்வர் ஜெயலலிதா மற்றும் மூத்த அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் உள்ளிட்ட ஏராளமான அமைச்சர்கள் நேற்று கோட்டைக்கு வரவில்லை. சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதி, விளையாட்டுத்துறை அமைச்சர் சுந்தரராஜ், சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சில அமைச்சர்கள் மட்டும் தங்களது அலுவலகங்களுக்கு வந்திருந்தனர். அவர்கள் வழக்கமான அலுவல் களில் ஈடுபட்டி ருந்தபோதிலும், அவர்களைச் சந்திக்க வரு வோரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது.
ஓரு சில ஆய்வுக்கூட்டங் களைத் தவிர குறிப்பிட்டு கூறும் வகையில் எந்த அலுவல்களும் நடைபெற வில்லை. அதேநேரத்தில், கோட்டையில் உள்ள அரசு ஊழியர்கள் மத்தியில், தீர்ப்பு எப்படி வரும் என்பதே முக்கிய விவாதப் பொருளாக இருந்தது.
http://www.jvpnews.com/srilanka/82792.html
அம்மா கம்பிக்குள்! கருணாநிதி வீட்டிற்கு தாக்குதல்
கருணாநிதி வீட்டிற்குள் அதிமுகவினர் சிலர் நுழைய முயன்றனர். அப்போது, திமுகவினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.கருணாநிதி வீட்டின் முன் திமுக தொண்டர்கள் உருட்டுக்கட்டைகள், இரும்புக் கம்பிகள் ஏந்தியவாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/82795.html
அம்மாவிற்கு வந்தது ஆப்பு! அடுத்து BJA அமைச்சர்களா ?
இதனால் அரசியலில் நேர்மை குறைந்து, வன்முறையும், ஊழலும் அதிகமாகிக் கொண்டு வருகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்கும்படியும், தேர்தல் சீர்திருத்தத்தை அமல்படுத்தும்படியும் வலியுறுத்தி வருகிறது தேர்தல் ஆணையம். கிரிமினல் வழக்குகளில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட் டியிடும் தகுதியை இழக்கின்றனர்.
தண் டனைக் காலம் முடிந்த பிறகும், அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் அவர்கள் போட்டியிட முடியாது என்று மக்கள் பிரதி நிதித்துவ சட்டப் பிரிவு 8 (3)ல் கூறப்பட் டுள்ளது. அதே நேரம், பதவியில் இருக்கும் எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கு நீதிமன்றங்கள் தண்டனை விதித்தாலும் கூட, 3 மாதங் களுக்கு அவர்களை தகுதியிழப்பு செய்யக் கூடாது. அதற்குள் மேல் நீதிமன்றங்களில் அவர்கள் மேல்முறையீடு செய்தால், அந்த வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் வரையில் தகுதியிழப்பு செய்யக் கூடாது என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 8(4)ல் கூறப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்பட் டுள்ள இந்த முரண்பாடான சலுகையை சட்டத் திருத்தம் மூலம் நீக்கும்படியும், தண் டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி களின் பதவியை உடனடியாக பறிக்கும் படியும் மத்திய அரசை தேர்தல் ஆணை யம் கூறி வருகிறது. ஆனால், அரசியலில் தங்களுக்கு வேண்டாதவர்களை பழி வாங்குவதற்கு இந்த சட்ட திருத்தத்தை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது எனக் கூறி, அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், லில்லி தாமஸ் என்ற வழக்குரைஞரும், லோக் பிரஹரி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயலாளர் என்.சுக்லாவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகள் 8 (3), 8(4),ல் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தண்டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதி நிதிகளை பதவியில் நீடிக்க அனுமதித்தால், அரசியலில் குற்றவாளிகளின் ஆதிக்கம் மேலோங்க ஊக்கம் அளித்ததுபோல் ஆகிவிடும். மேலும், தண்டனை விதிக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகளை பதவியில் நீடிக்க அனுமதிப்பது, அரசியல் சட்டத் துக்கு விரோதமானது.
எனவே, நீதிமன்றங் களில் தண்டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவியை உடனடியாக பறிக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவர்கள் கோரினர். நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், எஸ்.ஜே. முகோபாத்யா ஆகியோர் அடங்கிய அமர்வு இதை விசாரித்து அளித்த தீர்ப்பில், குற்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப் பட்ட எம்.பி., எம்எல்ஏ.க்கள் பதவியில் நீடிக்கக் கூடாது. மேல் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்தாலும் பதவியில் நீடிக்க முடியாது. தண்டனை விதிக்கப் பட்ட தினத்தில் இருந்தே, அவர்கள் தகுதியிழப்பு பெற்று விடுவார்கள். இந்த தீர்ப்புக்கு முன்பாக தண்டனை பெற்று, மேல்முறையீடு செய்துள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது என்று உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கும், கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கும், உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு அதிர்ச்சியை அளித் துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பார்க்கப் போனால் மத்திய அமைச்சர வையைச் சேர்ந்தவர்களின் கெதி என்ன? என்பது முக்கிய கேள்வியாகும். இதோ அந்தப் பட்டியல்:
பிரதமர் நரேந்திர மோடி – குஜராத் கலவரவழக்கு முதல் மனைவி பெயரை மறைத்தது, மற்றும் வாக்குச்சாவடியில் தேர்தல் சின்னத்தை விதிமுறையை மீறிக் காண்பித்தது தொடர்பான பல்வேறு வழக்குகள் 1. ராஜ்நாத் சிங் – பாபர் மசூதி இடிப்பு வழக்கு
2. அருண் ஜேட்லி – நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு(குஜராத் போலி என் கவுன்டர் வழக்கில் தலையீடு)
3. சுஷ்மா ஸ்வராஜ் – பாபரி மசூதி இடிப்பு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு)
4. வெங்கய்ய நாயுடு – அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, மற்றும் சட்ட விரோத நில ஆக்ர மிப்பு பாபர் மசூதி இடிப்பு வழக்கு
5. நிதின் கட்கரி – 134 135 143, 341, 186, 448, 506 ,188 வரியேய்ப்பு, தொழிற்துறை நிறுவனங்களின் பெயரில் ஏமாற்றுதல், மற்றும் போலியான தகவலில் வங்கிக்கடன் வாங்கியது, (தனது கார் ஓட்டுநர் தோட்ட பாராமரிப்பாளர் பெயரில் கூட கம்பெனி பதிவு செய்து வைத்துள்ளார், நீண்ட நாட்களாக பூட்டிக்கிடந்த ஒரு அடுக்கு மாடிக் கட்டடத்தை தனது அலுவலக முகவரியாக கொடுத்துள்ளார்.) இவருக்கு 7 ஆண்டு முதல் 12 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம்.
6. மேனகா காந்தி – 394, 506 பிரிவின் கீழ் வழக்கு.
7. கல்ராஜ் மிஸ்ரா – 120 பி, 153, 153 எ, 153பி, 147, 148, 149, 436, 395, 302 போன்ற பிரிவுகளில் வழக்கு
8. நஜ்மா ஹெப்துல்லா – அரசு அதி காரிகளை பணிசெய்யவிடாமல் தடுத்தது,
9. ஆனந்த் குமார் – ஊழல் வழக்கு இவர் பல குற்ற வழக்குகளுக்கு ஆளானவர்.
10. ரவிசங்கர் பிரசாத் – வன்முறையைத் தூண்டியதாக வழக்கு
11. உமா பாரதி – இவர் தான் குற்ற வாளிகள் பெயர் லிஸ்டில் முதலிடம் இவர் மீது 61 கடுமையான வழக்குகள், 12 பொதுக்குற்றவழக்கு, மற்றும் 108 சாதாரன குற்றவழக்கு 12. அசோக் கஜபதி ராஜூ – நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, மற்றும் கலவரத்திற்கு தூண்டுகோலாகப் பேசியது, 13. ஹர்சிம்ரத் கவுர் பாதல் – கணவர் மனைவி இருவர் மீது குற்ற வழக்கு உள்ளது. 14. நரேந்திர சிங் தோமர் – இவர் மீது 12 வழக்குகள் உள்ளன. இதில் இரண்டு கடுமையான குற்றவழக்குகள் ஆகும்
15. ஜூவல் ஓரம் – 143, 341, 283, 341 பிரிவுகளில் வழக்கு.
16. ஹர்ஷ வர்த்தன்- 147, 149, 186, 323, 325, 332, 353, 427 போன்ற பிரிவு களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 17. ஸ்மிருதி இரானி – போலியான தகவல்கொடுத்த வழக்கு, டில்லி நாடாளு மன்றக் காவல் நிலையம் வழக்கு நிலு வையில் உள்ளது. 18. ராதா மோகன் சிங் – கணவன் மனைவி இருவர் மீதும் சேவை நிறுவனத் தில் நடந்த பணபரிவர்த்தனை தொடர்பான வழக்கு
19. தாவர்சந்த் கெலாட்- ஊழல் வழக்கு குவாலியர் காவல்நிலையம் (சிறைவாசி யாக இருந்தவர்)
20. சதானந்த கவுடா – எடியூரப்பா ஊழல் வழக்கில் இவருக்கும் பங்கு உண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கேபினெட் அமைச்சர்கள். இணை அமைச்சர்களில், 21. ஜெனரல் வி.கே.சிங் 185, 353, 147, 148, 149, 34 பிரிவுகளில் வழக்கு.
மேற்கண்ட இ.பி.கோ.படி அமைச்சர் களின் மீது குற்றவியல் வழக்கு உள்ளது. 59 பாஜக எம்பிகள் மீது பயங்கர குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, ஆட் கடத்தல், கலவரத்திற்கு திட்டமிடுதல், மற்றும் கலவரத்தை தூண்டுதல் என பல் வேறு வழக்குகள், இந்த வழக்கு எல்லாம் சரியான படி நடந்தால் ஆயுள் தண்டனை முதல் கடுமை யான கடுங்காவல் வரை கிடைக்கும்.
http://www.jvpnews.com/srilanka/82800.html
ஜெக்கு வந்தது சிறை எண் 7402! இரவு உணவு கண்ணீருடன்
காலையில் முதல்வராக பிரதமருக்கு உரிய பாதுகாப்புடன் தனி விமானத்தில் பயனித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மாலையில் கர்நாடகாவின் அக்ரஹாரா சிறைக்கு சிறை வாகனத்தில் சிறை அதிகாரிகளின் பாதுகாப்பில் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா ஜெயராமிற்கு கைதி எண் 7402 வழங்கப்பட்டு இரவு உணவும் சிறைச்சாலையில் வழங்கப்பட்டது. சிறையின் வெளியே அதிமுக உறுப்பினர்கள் கண்ணீருடன் காத்திருந்தனர்.
சசிகலாவுக்கு 7403, சுதாகரனுக்கு 7404, இளவரசிக்கு 7405 கைது எண்கள் வழங்கப்பட்டன.
சசிகலாவுக்கு 7403, சுதாகரனுக்கு 7404, இளவரசிக்கு 7405 கைது எண்கள் வழங்கப்பட்டன.
ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் உடனடி பிணை சாத்த்தியம் இல்லை
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
முதலில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார். அதன் பிறகு மாலை 5 மணியளவில் தண்டனை அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
முதலில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார். அதன் பிறகு மாலை 5 மணியளவில் தண்டனை அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உடனேயே பெங்களூர் போலீசார் ஜெயலலிதாவை தங்கள் பொறுப்பில் எடுத்தனர். இந்நிலையில் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதும் அவர் பரப்பன அக்ரஹாராவில் அமைந்துள்ள பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னதாக சிறைச்சாலை வளாகத்திலுள்ள மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதேபோல, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜெயலலிதாவை சிறையில் அடைத்தது குறித்து அறிந்த அதிமுகவினர் கண்ணீர் விட்டு அழுதனர். சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ளது பெங்களூரில் என்பதால் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட சிறையில் ஜெயலலிதா உள்ளிட்ட மூவரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
எனவேதான் சென்னை சிறைக்கு அழைத்து செல்லவில்லை என சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகி பிணை பெறும் வரை இந்த சிறையிலேயு ஜெயலலிதா உள்பட 4 பேரும் அடைக்கப்பட்டிருப்பர். என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒக்டோபர் 5 வரை உயர் நீதிமன்றம் விடுமுறை! உடனடியாக பிணையில் வெளிவர சாத்த்தியம் இல்லை-
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளதால் உடனடியாக பிணை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக சிறைக்கு செல்லும் ஜெயலலிதா தரப்பினர் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் மட்டுமே பிணை கேட்டு மேல்முறையீடு செய்யமுடியும். ஒக்டோபர் 5வரை தசரா விடுமுறை என்பதால் அதன்பின்னரே பிணைமனு மீதான விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஜெயலலிதாவின் முதல்வர் பதவியும், எம்.எல்.ஏ பதவியும் பறிபோனது. அவரால் உடனடியாக பிணை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மட்டுமே பிணை மனு மேன்முறையீடு செய்யமுடியும். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வரும் 29ஆம் திகதி தொடங்கி ஒக்டோபர் 5ஆம் தேதி வரை தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஒக்டோபர் 5ஆம் திதிக்கு பின்னரே பிணைமனு மீதான விசாரணை நடைபெறும். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டிலும் அவசர வழக்குகளை விசாரிக்கும் வசதியில்லை என்பதால் ஜெயலலிதாவின் பிணை மனுவை விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே பிணை கிடைக்கும் வரை அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்திய அரசியல் வரலாற்றில் பதியில் இருக்கும் போதே ஊழல் தடுப்புச் சட்டத்தில்: கைதாகிய முதல் ‘முதல்’வர் ஜெயலலிதா
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து முதல்வர் பதவியில் இருக்கும்போதே ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற நாட்டின் ‘முதல்’ முதல்வர் என்ற பெயரை எடுத்து ஜெயலலிதா சிறப்பு கவனம் பெற்றுள்ளார் .
இதே சட்டத்தின் விளைவாக, பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாத்வ் பதவி பறிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் தீர்ப்பு வழங்கப்பட்டபோது முதல்வர் பதவியில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்த அதிரடி தீர்ப்பு அதிமுகவின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் மற்றும் விசுவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் தீர்ப்பு வெளியானவுடன் அதிமுகவினர் கதறி அழுதனர்.
http://www.jvpnews.com/srilanka/82803.html
Geen opmerkingen:
Een reactie posten