[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 01:16.28 PM GMT ]
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதி முஸ்லிம்களுக்கு மட்டும் உரித்தானதல்ல. தமிழ் மக்களுக்கும் சொந்தமாகவே இருக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசன் அலி குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோர உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். ஹசன் அலி எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
மிக நீண்ட காலமாக முஸ்லிம் காங்கிரஸ் வேண்டி நிற்கும் கரையோர மாவட்டக் கோரிக்கையை தமிழ் மக்கள் ஏற்று ஆதரவளிக்க முன்வர வேண்டும். ஏனெனில் அது தமிழ் பேசும் இரு சமூகத்தினருக்கும் அவசியம் தேவையான ஒரு நிர்வாக அலகாகும்.
தமிழ் சமூகம் தங்களது உச்சக்கட்ட எதிர்பார்ப்பாக தமிழீழத்தை முன்வைத்திருந்தனர். அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் முஸ்லிம் மாகாண கோரிக்கையை முன்வைத்தார்.
பின்னர் தென்கிழக்கு அலகை வலியுறுத்தினார். அதற்குப் பின்னர் நிலத் தொடர்பற்ற ஒரு மாகாண சபையைப் பற்றியும் பேசினார். அதைத் தொடர்ந்து கரையோர மாவட்டத்தை வலியுறுத்தி வந்தார்.
மு.கா.வின் இக்கரையோர மாவட்டக் கோரிக்கையை முஸ்லிம்களுக்கான மாவட்டமென தமிழ் மக்கள் கருதக்கூடாது. அவ்வாறானதொரு எண்ணம் சில கடும்போக்குதமிழர்களிடமிருப்பதை நாமறிவோம். நிச்சயமாக இது தமிழ் பேசும் மக்களுக்கான மாவட்டமாகவே அமையும்.
ஆனால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டமாக இது அமையும் என்பதுதான் உண்மையாகும். இந்நாட்டில் 24 மாவட்டங்களுள்ள நிலையில் இதில் ஆறு மாவட்டங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ளனர். ஏனைய அனைத்தும் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களாகும்.
எனவே, இந்த நாட்டில் கடந்த எண்ணூறு வருடங்களாக எழுதப்பட்ட வரலாற்றையுடைய முஸ்லிம் சமூகம் அவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டம் ஒன்றை ஏன் கோரக்கூடாது என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும். இந்த நியாயமான கோரிக்கையைத்தான் நாம் முன்வைத்திருக்கின்றோம்.
எனவே இந்தக் கோரிக்கையை வென்றெடுப்பதற்கு தமிழ் சகோதரர்கள் எம்முடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என மிகவும் வாஞ்சையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
இதனையே முஸ்லிம் சமூகம், தமிழ் மக்களிடம் எதிர்பார்க்கின்றது. நமது ஒற்றுமையான பயணமே இரு சமூகத்தினருக்கும் விடிவைப் பெற்றுத் தரும் என்பதில் நாம் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றும் ஹசன் அலி எம்.பி. குறிப்பிட்டார்.
கல்முனை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.ஐ.எம்.மன்சூர், மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அசீஸ், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி ஆகியோரும் கலந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgv1.html
தமது கிழக்கு விஜயம் கண்காணிக்கப்பட்டது!- பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 01:17.18 PM GMT ]
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இணையத்தில் லோரா டாவியஸ் இந்த முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார்.
தமது விஜயத்தின்போது தம்மை சந்தித்த பலரும், தமது விஜயம் முடிந்தபின்னர் நேரடியாகவும் தொலைபேசியின் ஊடாகவும் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
தமது விஜயத்தின்போது தாம் செய்தது பேசியது என்ன? போன்ற வியடங்கள் குறித்த மக்களிடம் கேட்கப்பட்டுள்ளன.
அழைப்பு ஒன்றின் அடிப்படையிலேயே தாம் கிழக்குக்கு விஜயம் செய்ததாக குறிப்பிட்டுள்ள லோரா தாம் மக்களுடன் சந்திப்புக்களை நடத்தியபோது படையினரால் படம் பிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சிலரிடம் தொலைபேசியின் மூலம் வந்திருக்கும் வெளிநாட்டவர் யார்? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்தநிலையில் தாம் சந்தித்தவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பயத்துடன் உள்ளனர். இது தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் எனினும் ஆச்சரியப்படவில்லை என்றும் லோரா குறிப்பிட்டுள்ளார்.
சில செய்தித்தாள்கள், தாம் கிழக்கு விஜயத்தின்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைகளுக்கான சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளதாக தகவல்களை வெளியிட்டதாகவும் லோரா கூறியுள்ளார்.
தாம் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளின் நிமித்தம் அங்கு செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ள லோரா, இலங்கையின் உள்நாட்டு விசாரணையும் நம்பகத்தன்மையுடன் இடம்பெறவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgv2.html
Geen opmerkingen:
Een reactie posten