தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 september 2014

ஜாமீன் பெற முடியாத வகையில் ஜெயலலிதாவை சிக்க வைத்தது யார்? தமிழக பொலிஸ் குறித்து திடுக்கிடும் தகவல்கள்!



ஜெயலலிதா உடனடியாக சிறைக்கு செல்லாமலும், அப்படியே சென்றாலும் உடனடியாக ஜாமீனில் வெளியே வந்துவிடலாம் என்று தமிழக பொலிஸ் உயரதிகாரிகள் வழக்கின் தன்மையை அறியாமல் போட்ட தப்பு கணக்கு காரணமாக, இன்று ஜெயலலிதா சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அதிமுக விசுவாசிகள் கொந்தளிக்கின்றனர்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கை 14 நீதிபதிகள் விசாரித்துள்ளனர். ஆனால், 11 மாதத்துக்கு முன் பதவி ஏற்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழக்கை விரைவாக நடத்தி, முடித்து தீர்ப்புகளை நேற்று முன்தினம் வழங்கினார்.
கண்டிப்பான நீதிபதி:
சொத்கு குவிப்பு வழக்கு விசாரணையின்போது, உடல் நிலையை காரணம் காட்டி அரசு வழக்கறிஞர் பவானி சிங், கால அவகாசம் கேட்டார். அவர் அரசு வக்கீல் என்றும் பாராமல் அவருக்கு அபராதம் விதித்தவர்தான் நீதிபதி குன்ஹா.
அதேபோல வழக்கறிஞர்களின் மனுதாரர்கள் சார்பாக தாக்கல் செய்த பல மனுக்களை தள்ளுபடி செய்தார்.
வழக்கை தாமதப்படுத்தும் நோக்கில்தான் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது என்று நேரடியாகவே, வக்கீல்களிடம் குற்றச்சாட்டினை வைத்தார். அந்த அளவுக்கு மிகவும் கண்டிப்பான நீதிபதி 27ம் திகதி தீர்ப்புகளை வழங்கி விடுவார் என்று எல்லோருக்கும் தெரியும். அது, எப்படி இருக்கும் என்பதுதான் தெரியாமல் இருந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் கடினம்:
ஜெயலலிதா தரப்பில் பாதுகாப்பு காரணங்களுக்காக இடத்தை மாற்ற வேண்டும் கோரிக்கை விடுத்ததால், இடத்தையும், திகதியையும் நீதிபதி குன்ஹா மாற்றி உத்தரவிட்டார். அதற்கு முன்னதாக செப். 20ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார்.
அதன்பின் பெங்களூர்  பொலிசாரே, தசரா விழா தொடங்கிவிட்டதால், போதிய பாதுகாப்பு வழங்குவது சிரமம். எனவே, 27ம் திகதி தீர்ப்பு வழங்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மேலும், அங்கு கிரிக்கெட் போட்டியும் நடை பெற உள்ளது.
இதனால் ஜெயலலிதா, முதல்வராகவும், இசட் பிரிவு பாதுகாப்பிலும் உள்ளார். தீர்ப்பு நாளில் பாதுகாப்பு வழங்குவது கடினம் என்று கூறினர். ஆனால் அந்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
தீர்ப்பு தள்ளி வைக்கும் தந்திரம்: சொத்து குவிப்பு வழக்கில் எப்படியும் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு விடும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்.
அதில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் ஆஜரானால் மட்டுமே நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க முடியும். யாராவது ஒருவர் ஆஜராகா விட்டாலும் தீர்ப்பு வழங்க முடியாது. இதனால், 27ம் திகதி கண்டிப்பாக 4 பேரும் ஆஜராக மாட்டார்கள். ஒருவராவது வராமல் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தமிழக பொலிஸின் தப்பு கணக்கு:
சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டால், கர்நாடக ஹைகோர்ட்டில் ஜாமீன் பெறுவது கடினம். அதற்கு காரணம் தசரா விழா நடைபெறுவதால் நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஆனால் இது பற்றிய எந்த ஆலோசனைகளையும் கூறாமல், ஜெயலலிதாவுக்கு எப்படியும் விடுதலை கிடை த்து விடும். அப்படியே விடுதலை கிடைக்கா விட்டாலும், குறைந்த பட்ச தண்டனை மட்டுமே கிடைக்கும். தீர்ப்பு வழங்கப்பட்ட நீதிமன்றத்திலேயே ஜாமீன் பெற்று விடலாம் என்று பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலர், ஜெயலலிதாவிடம் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை சந்தித்தபோது கூறியுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளின் தவறான தகவலின்படிதான், ஜெயலலிதா நீதிமன்ற நடைமுறைகள் முடிந் தவுடன் எப்படியும் பிற்பகலில் வீட்டுக்கு வந்து விடலாம் என்ற எதிர்பார்ப்பில் பெங்களூர் சென்றுள்ளார்.
ஆனால் நிலைமை பொலிஸார் சொன்னபடி நடக்கவில்லை. தசரா முடிந்த பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால், உடனடியாக ஐகோர்ட்டில் ஜாமீன் பெறுவதற்கு வாய்ப்பு உருவாகியிருக்கும். இதனால் சில பொலிஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு தவறான தகவலை கூறி, ஏமாற்றி, சிக்க வைத்து விட்டதாக அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhw5.html

Geen opmerkingen:

Een reactie posten