தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 september 2014

ஜெயக்குமாரியின் விடுதலைக்காக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

தங்காலைக் கடலில் பற்றியெரியும் கப்பல்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 05:26.26 AM GMT ]
தென்னிலங்கையின் தங்காலைக் கடலில் சிறியரக கப்பல் ஒன்று பற்றியெரிந்து கொண்டிருப்பதாக கடற்படையின் ஊடக மையம் அறிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டையை அண்மித்த ரெகவ பிரதேசத்தின் கரையோரத்திலிருந்து பார்க்கும்போது பற்றியெரியும் இந்தக் கப்பலை அவதானிக்க முடிகின்றது.
கப்பல் எந்த நாட்டுக்குச் சொந்தமானது, சரக்குக் கப்பலா அல்லது வேறு வகைக் கப்பலா என்பது போன்ற விபரங்கள் எதுவும் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.
பற்றியெரியும் கப்பலில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றும் நோக்கில் கடற்படையினரின் படகுகள் மூலம் அப்பகுதிக்கு விரைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhw6.html
ஜனாதிபதி இன்று அதிகாலை நாடு திரும்பினார்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 05:37.31 AM GMT ]
ஐக்கிய நாடுகளின் 69 வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பினார்.
ஜனாதிபதி உட்பட பிரதிநிதிகளை ஏற்றிய விமானம் இன்று அதிகாலை 5.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி இந்திய பிரதமர் நரேந்திரமோடி உட்பட வெளிநாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhw7.html
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நிபந்தனை விதிக்க போகும் ஹெல உறுமய
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 05:41.35 AM GMT ]
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஜாதிக ஹெல உறுமய நிபந்தனைகளை முன்வைக்க உள்ளதாக அந்த கட்சியின் பிரதி பொதுச் செயலாளரான மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சிங்களவர்களின் கோரிக்கைகள் என்ன என்பது அந்த நிபந்தனைகளில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தமது நிபந்தனைகளுக்கு இணங்க வைக்க ஜனாதிபதி ஹெல உறுமயவின் வாக்கு வங்கியை பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக தனித்தனியாக இருக்கும் தரப்புகளை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்கால சவால்களை எதிர்கொள்ள ஜாதிக ஹெல உறுமயவின் சிங்கள பௌத்த வாக்கு வங்கியை 10 லட்சமாக அதிகரிக்க வேண்டும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhxy.html

ஜெயக்குமாரியின் விடுதலைக்காக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 05:55.17 AM GMT ]
அநியாயமான முறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கிளிநொச்சி ஜெயக்குமாரியின் விடுதலைக்காக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது.
கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெயக்குமாரி என்பவர் காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி போராட்டங்களை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவரும் அவரது மகள் விபூசிகாவும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இந்த வருட ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பின்னர் ஜெயக்குமாரி பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது மகள் விபூசிகா வவுனியா சிறுவர் கண்காணிப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டு தற்போது 200 நாட்கள் கடந்துவிட்டன. பயங்கரவாத செயற்பாடுகளுடன் அவருக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
எனினும் இதுவரை அது தொடர்பில் எந்தவொரு ஆதாரத்தையும் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொள்ளவில்லை.
குறைந்த பட்சம் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படவோ, பிணையில் விடுதலை செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் குற்றச்சாட்டுகளின்றி அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக மாலை நான்கு மணியவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhxz.html

Geen opmerkingen:

Een reactie posten