[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 05:34.02 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளில் சாட்சிமளிக்கும் நோக்கில் தமிழக அரசியல்வாதிகள் ஜெனீவா சென்றுள்ளனர்.
தமிழக அரசியல்வாதிகள் மட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரும் ஜெனீவாவிற்கு சென்று சாட்சிமளித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழக அரசியல்வாதிகளின் ஜெனீவா பயணத்திற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அனுசரணை வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் இந்திய அரசியல்வாதிகளான ராம்தாஸ் கனேஸ் புலிகளின் சர்வதேச வலையமைப்பு அருட்தந்தை இமானுவல் நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் உறுப்பினர் பசுமை தங்கம் பிரிட்டன் தமிழர் பேரவையின் சுதா போன்றவர்கள் ஜெனீவாவில் சாட்சிமளித்துள்ளதாக சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhr0.html
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? பரபரப்பாகும் அரசியல் களம்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 05:38.25 AM GMT ]
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும், முதல்வர் பதவியையும் ஜெயலலிதா இழந் துள்ளார்.
இதனால் தமிழகத்தின் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்த முதல்வராக யாரை தேர்ந்தெடுப் பது என்பது குறித்து அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி முடி வெடுக்கவேண்டும்.
அந்த முடிவை தமிழக ஆளுநரிடம் அவர்கள் அளிக்கவேண்டும்.
இது குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டபோது, “இதுபற்றி நாங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அனைவரும் அதிர்ச்சியில் உள்ளோம். எனினும் இது தொடர்பாக பொதுச்செயலாளர் விரைவில் கடிதம் அனுப்புவார். அதன்படியே அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும்” என்றனர்.
இதற்கிடையே, அடுத்த முதல்வர் யார் என்ற போட்டியில் மூன்று அமைச்சர்களின் பெயர்கள் பலமாக அடிபடுகிறது.
தற்போதைய அமைச்சரவையில் ஜெயலலி தாவுக்கு அடுத்த மூத்த அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பெங்களூரு நீதிமன்ற தீர்ப்பின்போது இடையிடையே வெளியே வந்த ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வத்திடம்தான் பேசிவிட்டுச் சென்றார்.
இது ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக அவர் தொடர்ந்து திகழ்வதையே காட்டுவதாக அதிமுக-வினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கிடையே ஒரு இளம் அமைச்சர் உட்பட இரண்டு அமைச்சர்களின் பெயர்களும், முன்னாள் அரசு பெண் அதிகாரி ஒருவரின் பெயரும் முதல்வர் பதவிக்கு விவாதிக்கப்படுவதாக நேற்று தகவல்கள் வெளியாகின.
ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கே மீண்டும் முதல் வராகும் வாய்ப்புகள் உள்ளதாக கட்சி வட்டாரங்களும், அமைச்சரவை வட்டாரங் களும் தெரிவித்தன.
இது தொடர்பான அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாவும் அவர்கள் கூறினர்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி பறிபோயுள்ள நிலையில் (வரும் 6-ம் திகதிக்குப் பிறகு அவர் குற்றவாளி என்ற தீர்ப்புக்கு இடைக்காலத்தடை கிடைக்காத பட்சத்தில்), ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
அது பற்றிய அறிவிப்பை மத்திய தேர்தல் ஆணையம் வெளியிடும்.
இதற்கிடையே, தமிழகத்தில் எழுந்துள்ள புதிய சூழல் குறித்து சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு முதல்வரின் பதவி, நீதிமன்ற தீர்ப்பினால், ஆட்சிக்காலத்திலேயே பறிபோகும் நிலை உருவாகியிருக்கிறது.
அதுபோன்ற நேரத்தில் என்னென்ன நடைமுறைகள் மேற்கொள்ளவேண்டும் என்பது பற்றி தெளிவான வழிகாட்டுதல் இல்லை. அதனால் நாங்கள் ஆலோசித்தே முடிவெடுப்போம்.
இதற்கு முன்பெல்லாம் முதல்வர் ராஜினாமா செய்யும்போது, தனது அமைச்சரவையையும் கலைத்துவிடும்படி கடிதம் கொடுப்பது வழக்கம். ஆனால், தற்போதைய சூழலில் அமைச்சர்கள் ராஜினாமா செய்யத் தேவை ஏற்படாது என்றே எண்ணுகிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhr1.html
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது இறுதி தீர்ப்பு அல்ல: பாஜக - தமிழகத்தில் அமைதியை பேணுமாறு மத்திய அரசு உத்தரவு
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 05:47.00 AM GMT ]
எனவே இப்போது வெளியானது ஒன்றும் இறுதித் தீர்ப்பு அல்ல என்று பாஜக கருத்துத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கருத்து வெளியிட்டுள்ளார்.
இது ஒன்றும் இறுதித்தீர்ப்பு அல்ல. நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான் இது. தனக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு உள்ளது.
இது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயமாகும். ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள், இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது துரதிர்ஷடவசமானது என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் அமைதியை பேணுமாறு மத்திய அரசு உத்தரவு
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக கட்சியினர் கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல இடங்களில் வன்முறை நிழந்தது. கடைகள் அடைக்கப்பட்டன. கல்வீச்சில் பஸ்கள் சேதமடைந்தன.
இந்நிலையில், தமிழக அரசு உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் நிகழ்ந்து வரும் வன்முறையைத் தடுக்க அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுமாறு மத்திய அரசாங்கத்திடம் கருணாநிதி கோரிக்கை
தமிழக முதல்வர் ஜெயலலிதா வழக்கில் வெளியான தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோருக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு கருணாநிதி நேற்று அனுப்பிய அவசர கடிதத்தில் அதனை வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆளும்கட்சியினர் வன்முறையை கட்டவிழுத்துள்ளனர்.
திமுக கட்சி அலுவலகங்கள், தலைவர்கள், நிர்வாகிகள் வீடுகள் மீது தொடர் தாக்குதலை அதிமுகவினர் தடையின்றி நடத்தி வருகின்றனர்.
பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் வீட்டையும் தாக்கியுள்ளனர். பொதுமக்களின் உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.
ஊடகங்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. இவற்றை பொலிஸார் வேடிக்கை பார்த்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
தற்போது நடந்து வரும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு தொடர அனுமதிக்கப்பட்டால், பல சீரழிவுகள் ஏற்பட வழிவகுக்கும். எனவே, தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட உடனடியாக தாங்கள் தலையிட்டு சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் வன்முறையாளர்களுக்கு துணை போகும் காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதி தமது கடிதத்தில் கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhr2.html
Geen opmerkingen:
Een reactie posten