ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின், இலங்கைக்கான இறுதி விஜயத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியை மதிப்பிடுவதற்கு இலங்கைக்கு இன்னொருமுறை விஜயம் செய்யுமாறு அவருக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.நா செயலாளர் நாயகத்துக்கும் இடையில் நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சனிக்கிழமை பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றது.
ஜனாதிபதி ராஜபக்ஷவின் தலைமைத்துவத்திற்காக அவரைப் பாராட்டிய பான் கீ மூன், போரின் பின்னர் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்களை ஏற்றுக்கொண்டதோடு, இவ்வாறான அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்டு எஞ்சியுள்ள சவால்களும் வெற்றிகொள்ளப்படும் என தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
ஏனைய அடைவுகளுக்கு மத்தியில், பூர்த்தியடையும் நிலையை எட்டியுள்ள கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள், சுகாதார சேவைகளின் முன்னேற்றம், முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வும், மீள் இணைப்பும் உள்ளடங்கலாக இடம்பெற்றுள்ள அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷ இதன்போது, மூனுக்கு விளக்கினார்.
போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசாங்கம் பொறுப்பெடுத்துள்ள பாடசாலைகளின் மறுசீரமைப்புத் தொடர்பாகவும் செயலாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி தகவலளித்தார்.
முன்னர் இருந்திருக்காதவாறு, தேசிய பரீட்சைகளில் நாட்டின் சிறந்த முடிவுகளில் சில தற்போது, வட மாகாணத்திலிருந்து வெளிவருவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
வெற்றிகரமான அரசியல் செயற்பாடுகளுக்கு விரிவான அரசியல் ஆலோசித்தலின் தேவையையும் செயலாளர் நாயகம் வலியுறுத்தினார். இது விடயத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்துபேச வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அவரது இறுதி விஜயத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியை மதிப்பிடுவதற்கு இலங்கைக்கு இன்னொருமுறை விஜயம் செய்யுமாறு பான் கீ மூனுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.
வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்புப் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி ஷெனுகா செனவிரத்ன, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி. பாலித கோஹன, பிரதி நிரந்தரப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும் இந்த சந்திப்பின் போது பிரசன்னமாகியிருந்தனர்.
|
28 Sep 2014 http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1411895269&archive=&start_from=&ucat=1&
மாவை வார்த்தையை விட்டு விட்டார் டக்ளஸ் (படங்கள் இணைப்பு)
|
அந்தோனியாருக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியது என்பது போல் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அகிம்சைப் போராட்டத்தினை முன்னெடுக்கப் போவதாக கூறி, வார்த்தையை விட்டு விட்டார் என அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (28), யாழ். பழைய பூங்கா வளாகத்தில் வலைப்பந்து மற்றும் கூடைப்பந்தாட்ட மைதானத்திற்கான சிரமதான பணியில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்க்கும் சூழல் மாறாவிட்டால் அகிம்சைப் போர் வெடிக்குமென மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இன்றுடன் 94 நாட்கள் இருக்கின்றன மாவை அகிம்சைப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு, அத்துடன், மாவை சேனாதிராஜாவின் தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சி 2015 ஆம் ஆண்டுக்குள் தீர்வினை காண வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் மேற்கொண்ட அரசியல் போன்று, சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது இனியும் மக்கள் தமிழ் தேசியகூட்டமைப்பின் வார்த்தையினை நம்பி மக்கள் ஏமாந்து போக மாட்டார்கள் என நம்புகின்றேன் என்றார்.
அதேவேளை, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றுள்ளதுடன், பதவியும் பறிபோயுள்ளது. இதனால், இலங்கை தமிழ் மக்களுக்கு பாதிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து உங்களின் கருத்து என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அவர் அதற்கு பதலிளிக்கையில், தமிழகத் தமிழர்களுக்கு அது பாதிப்பாக இருக்கலாமே தவிர இலங்கைத் தமிழர்களுக்கு விடிவைக் கொடுக்கும் ஒரு சந்தர்ப்பமாக இருக்கும் என கூறினார். |
28 Sep 2014 http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1411895615&archive=&start_from=&ucat=1& |
|
Geen opmerkingen:
Een reactie posten