தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 september 2014

மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கான புதிய கடல் எல்லை கொள்கை: பாரதீய ஜனதாக்கட்சி

சர்வதேச அரங்கில் இலங்கைக்கான ஆதரவில் பாரிய பின்னடைவு: தயான் ஜயதிலக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 02:03.04 AM GMT ]
சர்வதேச அரங்கில் இலங்கைக்கான ஆதரவில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சிரேஸ்ட ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியான விசாரணைகள் அவசியமற்றது எனத் தெரிவித்து இலங்கை உள்ளிட்ட 22 நாடுகள் கூட்டாக இணைந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளன.
எகிப்து தலைமையிலான நாடுகள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இவ்வாறு கூட்டாக இணைந்து இலங்கைக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 22 நாடுகளின் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாக செய்யப்படும் பிரச்சாரங்கள் பிழையானது. இதனை ஓர் பிழையான வழி நடத்தலாகவே கருதுகின்றேன்.
ஏனேனில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகித்து வரும் 47 வாக்களிக்கும் உரிமையுடைய நாடுகளில் ஏழு நாடுகளின் ஆதரவு மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த அறிக்கையில் 47 நாடுகளில் ஏழு நாடுகள் மட்டுமே ஆதரவளித்துள்ளன. இதனை ஓர் பாரிய பின்னடைவாகவே கருதப்பட வேண்டும்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது 12 வாக்குகள் கிடைக்கப்பெற்றன.
எனினும், ஆறு மாத கால இடைவெளியில், தற்போது ஏழு நாடுகளின் ஆதரவே கிடைத்துள்ளது.
இந்தியா கூட இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கத் தயாரில்லை என்ற நிலைமையே நீடித்து வருகின்றது என தயான் ஜயதிலக்கத் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனை நேற்று தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhqy.html
ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை - மகிழ்ச்சியில் இலங்கை அரசாங்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 02:11.21 AM GMT ]
தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டமை குறித்து இலங்கை அரசாங்கம் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்னவின் கருத்துப்படி, ஊழலில் ஈடுபடும் தமிழக அரசியல்வாதிகளுக்கும் இலங்கை அரசியல்வாதிகளுக்கும் இது ஒரு படிப்பினை என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பில் ஜெயலலிதா மீனவர்களுக்கு சார்பாக நடந்துக்கொள்ளவில்லை. மாறாக படகு உரிமையாளர்களுக்கு சார்பாகவே நடந்துக்கொண்டார் என்று ராஜித குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்காரணமாகவே அவர் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி வருகிறார்.
இந்தநிலையில் நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக ஜெயலலிதா கட்டாயமாக பதவி விலக வேண்டியேற்படும். இதன்போது மீனவர் பிரச்சினையும் சுமுகமாக தீர்க்கப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhqz.html
மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கான புதிய கடல் எல்லை கொள்கை: பாரதீய ஜனதாக்கட்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 02:18.02 AM GMT ]
இந்திய இலங்கை மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்காக புதிய கடல்எல்லை வரையறுப்பு கொள்கை ஒன்று மேற்கொள்ளப்படுவதாக பாரதீய ஜனதாக்கட்சி தெரிவித்துள்ளது. 
இந்தநிலையில் குறித்த விடயம் மிகவும் தீவிரமானது என்ற அடிப்படையில் அதனை நெகிழ்வுத்தன்மையுடன் அணுகுமாறு பாரதீய ஜனதாக்கட்சி இலங்கையிடமும் கோரியுள்ளது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அந்தக்கட்சியின் பொதுச்செயலாளர் முரளிதரராவ்,  தமிழக மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்பட்டால் அது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நல்லெண்ண செயற்பாடுகளை ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhq0.html

Geen opmerkingen:

Een reactie posten